Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 6

56132.ஸ்தலக்காவல், தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்குக் கொடுத்தவர்?
ஆற்காடு நவாப்
மாபூஸ்கான்
யூசுப் கான்
ஹைதர் அலி
Explanation:

ஆற்காடு நவாப் 1772ஆம் ஆண்டு உடன்படிக்கை மூலம் ஸ்தலக்காவல், தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்குக் கொடுத்திருந்தார். இது பாளையக்காரர்கள், பாளையக்காரர்கள் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினரின் ஆட்சிப்பகுதிகளிலுமிருந்த காவல் தலைவர்களைப் பாதித்தது. அதிருப்தியடைந்த காவல்காரர்களும் அவர்களின் தலைவர்களும் நவாபுக்கும் கம்பெனிக்கும் எதிராகப் பாளையக்காரர்களுடன் சேர்ந்தார்கள்.
56133.சின்ன மருதுவும் பெரிய மருதுவும் யாரை சிவகங்கையின் இராணியாக அறிவித்தனர்?
வேலு நாச்சியார்
தாமரை நாச்சியார்
உடையாள்
வெள்ளச்சி நாச்சியார்
Explanation:

சிவகங்கை பெரிய உடைய தேவர், நவாப் படைக்கு எதிரான சண்டையில் உயிரிழந்ததால் நிர்வாகப் பொறுப்பை எடுத்துக்கொண்ட சின்ன மருதுவும் பெரிய மருதுவும் நவாப் படையை வெளியேற்றினார்கள். பெரிய உடைய தேவர், வேலு நாச்சியார் ஆகியோரின் மகளான வெள்ளச்சி நாச்சியாரை சிவகங்கையின் இராணியாக அறிவித்தனர். அவர்கள் அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர்.
56134.கிளர்ச்சியாளர்கள் கூடுமிடமாகவும் அவர்களது அடையாளமாகவும் இருந்தது எது?
நெற்கட்டும் செவல்
காளையார் கோவில்
பாஞ்சாலங்குறிச்சி
களக்காடு
Explanation:

அன்றைய சிவகங்கைக் காட்டின் நடுவில் இருந்த காளையார்கோவில், கிளர்ச்சியாளர்கள் கூடுமிடமாகவும் அவர்களது அடையாளமாகவும் இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும், அவருடைய சகோதரர் ஊமைத்துரை கமுதியைச் சென்றடைந்தார். அங்கிருந்து அவரைச் சின்ன மருது சிவகங்கையின் தலைநகரான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.
56135.இராமநாதபுரத்தின் கிளர்ச்சியாளர்கள் யாரைத் தங்கள் ஆட்சியாளராக அறிவித்தனர்.
முத்துக்கருப்பத் தேவர்
முத்துராமலிங்கத் தேவர்
பெரிய உடையார் தேவர்
வேங்கண்மாண் தேவர்
Explanation:

நவாப் முகமது அலி முத்துராமலிங்கத் தேவரைச் சிறையிலிருந்து விடுவித்து, அவரை இராமநாதபுரத்தின் சேதுபதியாக முடிசூட்டினார். ஆனால் கிளர்ச்சியாளர்கள் முத்துக்கருப்பத் தேவரைத் தங்கள் ஆட்சியாளராக அறிவித்தனர். மேலும் அரசின் தெற்குப் பதியையும் வடக்குப் பகுதியையும் ஆக்கிரமித்தனர். கிளர்ச்சியாளர்களின் வீரர்கள் மதுரைக்குள்ளும் நுழைந்தனர்.
56136.தஞ்சாவூரில் இருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாருடைய படையில் சேர்ந்தனர்?
செவத்த தம்பி
ஊமைத்துரை
துரைசாமி
வெள்ளைத்துரை
Explanation:

தஞ்சாவூரில் இருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளும் செவத்த தம்பியின் படையில் சேர்ந்தனர். தஞ்சாவூர் ஸ்தானிகர் ஆக இருந்த கேப்டன் வில்லியம் ப்ளாக்பர்ன் படைகளைத் திரட்டி, மாங்குடி அருகே செவத்த தம்பியை வென்றார். தஞ்சாவூர் ராஜா சரபோஜி ஆங்கிலேயருக்குத் துணையாக நின்றார். இருப்பினும் வீரர்கள் ஆங்கிலேயர் படை பின் தொடர்தலிலிருந்து தப்பித்து, கடந்து சென்ற பகுதிகளை எல்லாம் அழித்து நாசமாக்கி சென்றனர்.
56137.சிவகங்கையின் ஆட்சியாளராகக் கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்டவர்?
முத்துக்கருப்பத் தேவர்
முத்துராமலிங்கத் தேவர்
ஒய்யாத்தேவர்
வேங்கண்மாண் தேவர்
Explanation:

தென்னிந்தியக் கிளர்ச்சி (1801): திப்புவையும் கட்டபொம்மனையும் ஆங்கிலேயர் வென்ற பின்னர், அவர்களின் படைகள் பல்வேறு முனைகளிலிருந்து திரும்பி இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள முடிந்தது. சிவகங்கையின் முன்னாள் ஆட்சியாளரின் வழித்தோன்றல் படமாத்தூர் ஒய்யாத்தேவரின் ஆதரவையும் கிழக்கிந்தியக் கம்பெனி பெற முடிந்தது. அவர் சிவகங்கையின் ஆட்சியாளராகக் கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்டார். இந்தப் பிரித்தாளும் தந்திரம் அரசரின் ஆதரவாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி, இறுதியில் கிளர்ச்சியாளர்களை மனந்தளர வைத்தது.
56138.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1801 மே மாதத்தில் அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவு தன் நடவடிக்கைகளைத் துவக்கியது.
ii. அக்னியு தலைமையிலான படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பயணித்து, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது.
i சரி
ii சரி
i மற்றும் (ii) சரி
i மற்றும் (ii) தவறு
Explanation:

1801 மே மாதத்தில் அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவு தன் நடவடிக்கைகளைத் துவக்கியது. இப்படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பயணித்து, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது. மோதலின்போது இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் கிளர்ச்சியாளர்களின் அடங்காத எதிர்ப்பும் மருது சகோதரர்களின் வீரம் செறிந்த சண்டைகளும் ஆங்கிலேயரின் நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது. முடிவில், ஆங்கிலேயரின் படை வலிமையும் தளபதிகளின் திறமையுமே வெற்றி பெற்றன.
56139.புரட்சியாளர்களை ஆங்கிலேயர் கைது செய்த இடத்துடன் பொருத்துக.
மருது பாண்டியர் -1. சிங்கம்புணரி
செவத்தையா - 2. வத்தலகுண்டு
துரைசாமி - 3. மதுரை
1, 2, 3
2, 3, 1
3, 2, 1,
2, 1, 3
Explanation:

ஆங்கிலேயர் ஊமைத்துரையைக் கைது செய்ததைத் தொடர்ந்து, மருது பாண்டியரைச் சிங்கம்புணரி குன்றுகளிலும் செவத்தையாவை வத்தலகுண்டு பகுதியிலும் வெள்ளை மருதின் மகன் துரைசாமியை மதுரைக்கு அருகிலும் கைது செய்தனர்.
56140.மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்?
திருப்பத்தூர்
பாஞ்சாலங்குறிச்சி
சங்ககிரி
கயத்தாறு
Explanation:

சின்ன மருதுவும் அவருடைய சகோதரர் வெள்ளை மருதுவும் 1801 அக்டோபர் 24இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
56141.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. சேலம், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல் ஆகியவை அடங்கிய கொங்குநாடு, மதுரை நாயக்கர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது.
ii. மூன்றாம், நான்காம் மைசூர் போர்களின் விளைவாகக் கொங்குப் பகுதி முழுதும் ஆங்கிலேயர் வசமாயின.
i சரி
ii சரி
i மற்றும் (ii) சரி
i மற்றும் (ii) தவறு
Explanation:

சேலம், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல் ஆகியவை அடங்கிய கொங்குநாடு, மதுரை நாயக்கர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதை மைசூர் உடையார்கள் கைப்பற்றித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். உடையார்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருடன் இந்த ஆட்சிப்பகுதிகள் மைசூர் சுல்தான்களால் கட்டுப்படுத்தப்பட்டன. மூன்றாம், நான்காம் மைசூர் போர்களின் விளைவாகக் கொங்குப் பகுதி முழுதும் ஆங்கிலேயர் வசமாயின.
Share with Friends