Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 5

56122.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. யூசுப்கானுக்குப் படைத் தலைமையுடன் வரி வசூலிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.
ii. ஆற்காடு நவாபின் வேண்டுகோளின்படி, 1755இல் அவருக்கு உதவி செய்ய 500 ஐரோப்பியரும் 200 சிப்பாய்களும் அடங்கிய படை மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்குள் நுழைய உத்தரவிடப்பட்டது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

கான் சாகிப்புக்குப் படைத் தலைமையுடன் வரி வசூலிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆற்காடு நவாபின் வேண்டுகோளின்படி, 1755இல் அவருக்கு உதவி செய்ய 500 ஐரோப்பியரும் 200 சிப்பாய்களும் அடங்கிய படை மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்குள் நுழைய உத்தரவிடப்பட்டது. பாளையக்காரர்களின் அதிகாரத்தில் கம்பெனி நிர்வாகத்தின் குறுக்கீடு கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.
56123.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. நாகலாபுரம், மன்னர்கோட்டை, பாவாலி, கோலார்பட்டி, செந்நல்குடி ஆகிய பாளையங்களின் தலைவர்கள் மருது சகோதரர்களின் முயற்சியால் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தார்கள்.
ii. கட்டபொம்மன் தன் செல்வாக்கையும் நிதியாதாரங்களையும் முன்னிறுத்தி, இந்த அணியில் சேர்ந்து அதன் தலைவர் ஆனார்.
i சரி
ii சரி
i மற்றும் (ii) சரி
i மற்றும் (ii) தவறு
Explanation:

நாகலாபுரம், மன்னர்கோட்டை, பாவாலி, கோலார்பட்டி, செந்நல்குடி ஆகிய பாளையங்களின் தலைவர்கள் மருது சகோதரர்களின் முயற்சியால் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவர்கள் கம்பெனியின் ஆட்சிப்பகுதிகளிலிருந்த சில குறிப்பிட்ட கிராமங்களில் வரி வசூலிக்கும் உரிமையை உறுதிப்படுத்தி இருந்தார்கள். கட்டபொம்மன் தன் செல்வாக்கையும் நிதியாதாரங்களையும் முன்னிறுத்தி, இந்த அணியில் சேர்ந்து அதன் தலைவர் ஆனார். இக்கூட்டமைப்பை ஏற்படுத்த சாப்டூர், ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகியவற்றின் பாளையக்காரர்களையும் அதில் சேரும்படி வலியுறுத்தினார்.
56124.பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் எங்கு சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார்?
திருநெல்வேலி
திருச்சி
பாளையங்கோட்டை
ராமநாதபுரம்
Explanation:

1799 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார். கட்டபொம்மன் சந்திப்பைத் தவிர்த்ததால், பானர்மேன் போர் தொடுக்க முடிவெடுத்தார். செப்டம்பர் 5ஆம் நாள் கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சியைச் சென்றடைந்தது.
56125.1857 ஆம் ஆண்டின் பெருங் கிளர்ச்சி எங்கு நடைபெற்ற இராணுவக் கலகமாக தொடங்கியது?
பரக்பூர்
மீரட்
டெல்லி
மிர்சாபூர்
Explanation:

பெருங்கிளர்ச்சியின் போக்கு: இப்பெருங் கிளர்ச்சி கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரில் இராணுவக் கலகமாகவே தொடங்கியது. மங்கள் பாண்டே தனது இராணுவ மேலதிகாரியை சுட்டுக் கொன்றார். தொடர்ந்து அங்கு இராணுவக் கலகம் வெடித்தது. அடுத்த மாதம் மீரட் நகரில் தோட்டாக்களைப் பெற வேண்டிய 90 வீரர்களில் ஐவர் மட்டுமே உத்தரவுக்கு அடிபணிந்தனர்.
56126.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணில் கட்டப்பட்டிருந்தது.
ii. கட்டபொம்மனின் வீரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.
i சரி
ii சரி
i மற்றும் (ii) சரி
i மற்றும் (ii) தவறு
Explanation:

கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணில் கட்டப்பட்டிருந்தது. ஆங்கிலேயப்படை கோட்டையின் தகவல்தொடர்புக்கான வழிகளைத் துண்டித்தது. கட்டபொம்மனின் வீரர்கள் கம்பீரத்துடனும் வீரத்துடனும் போரிட்டார்கள். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.
56127.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1799 செப்டம்பர், 16 அன்று ஆங்கிலேயருக்குக் கூடுதல் வலு சேர்ப்பதற்கான உதவிகள் பாளையங்கோட்டையிலிருந்து வந்து சேர்ந்தன.
ii. கட்டபொம்மனின் கோட்டைக்கான காவற்படை வெளியேறி காடல்குடியை அடைந்தது.
i சரி
ii சரி
i மற்றும் (ii) சரி
i மற்றும் (ii) தவறு
Explanation:

கம்பெனிப் படைக்குக் கூடுதல் எண்ணிக்கையில் வீரர்கள் தேவைப்பட்டனர். 1799 செப்டம்பர், 16 அன்று ஆங்கிலேயருக்குக் கூடுதல் வலு சேர்ப்பதற்கான உதவிகள் பாளையங்கோட்டையிலிருந்து வந்து சேர்ந்தன. அவர்களின் தொடர்ச்சியான தாக்குதலால் சுவர்கள் உடைந்து கோட்டை பலவீனம் அடைந்ததால், கோட்டைக்கான காவற்படை வெளியேறி காடல்குடியை அடைந்தது.
56128.எங்கு நடந்த மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளை பிடித்துவைக்கப்பட்டார்?
கோலார்பட்டி
களக்காடு
காளையார் கோவில்
காடல்குடி
Explanation:

கோலார்பட்டியில் நடந்த மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளை பிடித்துவைக்கப்பட்டார். நாலாபுறமும் எதிர்ப்பைக் காட்டிய தலைவர்களுக்குரிய பிற பாதுகாப்பு அரண்கள் அனைத்தும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. ஆங்கிலேயப்படையைக் கண்டதும், மேற்குப் பாளையத்தாரும் சரணடைந்தனர்.
56129.விஜய ரகுநாத தொண்டைமான் எங்கு கட்டபொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்?
களப்பூர் காடு
களக்காடு
காளையார் கோவில்
காடல்குடி
Explanation:

புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். கட்டபொம்மனின் ஆதரவாளர்கள் மருது சகோதரர்கள், கோபால நாயக்கர் ஆகியோருடன் இணைவதற்குச் சிவகங்கைக்கும் திண்டுக்கல் மலைக் குன்றுகளுக்கு ம் விரைந்தனர்.
56130.கட்டபொம்மனைக் கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தவர்?
கர்னல் ஹெரான்
எட்வர்ட் கிளைவ்
பானர்மேன்
கேம்ப் பெல்
Explanation:

1799 அக்டோபர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனைக் கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார். அது கேலிக்கூத்தான விசாரணையாகவே இருந்தது. கட்டபொம்மன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒத்துக்கொண்டார்.
56131.கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்ட நாள்?
அக்டோபர் 17
அக்டோபர் 16
அக்டோபர் 12
அக்டோபர் 26
Explanation:

அவர் சிவகிரிக்கு எதிராக ஆயுதந்தரித்த வீரர்களை அனுப்பியதையும் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஆங்கிலேயப்படைகளுக்கு எதிராகப் போரிட்டதையும் ஒத்துக்கொண்டார். அக்டோபர் 17ஆம் நாளில் கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனுடைய வீரச்செயல்களைக் கருப்பொருளாகக் கொண்ட நாட்டுப்புறப்பாடல்கள் மக்களிடையே அவரது நினைவை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்துள்ளன.
Share with Friends