Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 3

56102.வேலு நாச்சியார் எந்த ஆண்டு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார்?
1782
1784
1780
1781
Explanation:

ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். 1780இல் இவ்விருவரின் துணையோடு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார்.
56103.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார்.
ii. நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார். அவர் ஆங்கிலேயரின் வெடிமருந்துக்கிடங்குகளைக் கண்டுபிடிப்பதற்குத் தன் உளவாளிகளைப் பயன்படுத்தினார். நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.
56104.ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி சிவகங்கை அரசர் ஆனவர்?
பெரிய மருது
வேங்கண் பெரிய உடைய தேவர்
ஊமை துரை
வெள்ளைத்துரை
Explanation:

சின்ன மருது நாச்சியாரின் ஆலோசகராகவும் பெரிய மருது படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர். 1783இல் ஆங்கிலேயர் சிவகங்கைக்கு மீண்டும் படையெடுத்து வந்தனர். இம்முறை மருது பாண்டியர் சில இராஜதந்திர நடவடிக்கைகளால் சிவகங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்தனர். பிற்காலத்தில் ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி வேங்கண் பெரிய உடைய தேவர் சிவகங்கை அரசர் ஆனார்.
56105.வேலு நாச்சியார் நோயுற்று இறந்த ஆண்டு எது?
1790
1794
1793
1796
Explanation:

1790இல் இவருக்கு மணம் முடித்துவைக்கப்பட்ட வெள்ளச்சி நாச்சியார் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார். வேலு நாச்சியார் நோயுற்று 1796இல் இறந்தார்.
56106.வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆட்சி செய்த பகுதி எது?
நெற்கட்டும் செவல்
பாஞ்சாலங்குறிச்சி
சிறுவயல்
காளையார் கோவில்
Explanation:

வேலு நா ச்சியார் ராமநாதபுரத்திலு ம் சிவக ங்கை யி லு ம் ஆங்கிலேயருக்கு சவாலாக இருந்தபோது, வீரபாண்டிய கட்டபொம்மனின் எதிர்ப்பு வளர்ந்துகொண்டிருந்தது. கட்டபொம்மன் ஓட்டப்பிடாரத்துக்கு அருகில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த நாயக்கர் பாளையக்காரர் ஆவார்.
56107.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1798 மே 31 வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையம் கம்பெனிக்குக் கட்டாது வைத்திருந்த கப்பத்தொகை 3310 பகோடாக்கள் (வராகன்).
ii. 1798 செப்டம்பர் மாதத்துக்கான கப்பமும் செலுத்தப்படாததால், கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

கம்பெனிக்கும் தென்சீமை பாளையத்தாருக்கும் தொடர்ந்து மோதல் இருந்ததால், கம்பெனிக்கு அவர்கள் கப்பம் செலுத்துவது ஒரு பிரச்னையாகவே நீடித்தது. 1798 மே 31 வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையம் கம்பெனிக்குக் கட்டாது வைத்திருந்த கப்பத்தொகை 3310 பகோடாக்கள் (வராகன்). 1798 செப்டம்பர் மாதத்துக்கான கப்பமும் செலுத்தப்படாததால், கலெக்டர் ஜாக்சன் அவருக்கே உரிய ஆணவத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார்.
56108.திப்புசுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா எத்தனை ரூபாய்க்குச் சமமாகக் கொள்ளப்பட்டது?
மூன்றரை ரூபாய்
நான்கரை ரூபாய்
இரண்டரை ரூபாய்
மூன்று ரூபாய்
Explanation:

விஜயநகரத்தில் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது. ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவுக்கு வந்த காலகட்டத்தில் இப்பணம் செல்வாக்கு பெற்று விளங்கியது. திப்புசுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்குச் சமமாகக் கொள்ளப்பட்டது.
56109. பகோடா மரத்தை உலுக்குதல்’ என்ற சொலவடை எந்த நாட்டு மக்களிடையே நிலவியது?
போலந்து
பிரான்ஸ்
இங்கிலாந்து
டென்மார்க்
Explanation:

‘பகோடா மரத்தை உலுக்குதல்’ என்ற சொலவடை இங்கிலாந்து மக்களிடையே நிலவியது. ஒருவரை அதிர்ஷ்டசாலி ஆக்கும் வாய்ப்புகள் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன என்ற ஐரோப்பியர்களின் அக்கால மனநிலையை இதன் மூலம் நாம் உணரலாம். தமிழில் இதனை வராகன் என்பர்.
56110.கூற்று (கூ): கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தண்டிக்கும் நோக்குடன் ஒரு படையை அனுப்ப விரும்பினாலும், சென்னை நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
காரணம் (கா): திருநெல்வேலியிருந்த படை வீரர்களை மைசூரில் திப்பு சுல்தானுக்கு எதிராகப் போரிடுவதற்காகக் கம்பெனி ஏற்கனவே அனுப்பியிருந்தது.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால், வரி வசூலிப்பது மிகக்கடினமான வேலை ஆனது. கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தண்டிக்கும் நோக்குடன் ஒரு படையை அனுப்ப விரும்பினாலும், சென்னை நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. திருநெல்வேலியிருந்த படை வீரர்களை மைசூரில் திப்பு சுல்தானுக்கு எதிராகப் போரிடுவதற்காகக் கம்பெனி ஏற்கனவே அனுப்பியிருந்தது. இந்த நிலையில் மிகவும் தொலைவிலிருந்த தெற்குப்பகுதியில் போர் செய்வது ஆபத்து எனக் கம்பெனி கருதியது.
56111.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. சென்னை நிர்வாகம் பிரச்னையில் தொடர்புடைய பாளையக்காரரை இராமநாதபுரத்துக்கு வரவழைத்து, கலந்தாலோசனை செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது.
ii. 1798 ஆகஸ்ட் 18 அன்று ஜாக்சன் இருவாரங்களுக்குள் தன்னை இராமநாதபுரத்துக்கு வந்து சந்திக்கும்படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவிட்டார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

சென்னை நிர்வாகம் பிரச்னையில் தொடர்புடைய பாளையக்காரரை இராமநாதபுரத்துக்கு வரவழைத்து, கலந்தாலோசனை செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்படி, 1798 ஆகஸ்ட் 18 அன்று ஜாக்சன் இருவாரங்களுக்குள் தன்னை இராமநாதபுரத்துக்கு வந்து சந்திக்கும்படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, தி ரு நெல்வேலி சுற்றுப்பயணத்தைத் துவக்கினார்.
Share with Friends