Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 8

56152.கூற்று (கூ): வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக்கொள்ளுமிடமாக ஆனது.
காரணம் (கா): பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

ஆங்கிலேயரால் பதவியோ, சொத்தோ பறிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்னர். இதுபோல் பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது. இவ்வாறு வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக்கொள்ளுமிடமாக ஆனது.
56153.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. சிப்பாய்களும் வேலூருக்கு இடம்பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக் கலந்தாலோசித்தனர்.
ii. திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.
i சரி
ii சரி
i மற்றும் (ii) சரி
i மற்றும் (ii) தவறு
Explanation:

சிப்பாய்களும் வேலூருக்கு இடம்பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக் கலந்தாலோசித்தனர். அவற்றில் திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.
56154.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் தங்களது நெற்றியில் அணிந்த அனைத்து விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
ii. சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்குப் பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
i சரி
ii சரி
i மற்றும் (ii) சரி
i மற்றும் (ii) தவறு
Explanation:

இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர் தங்கள் படையில் உள்ள சிப்பாய்ப்பிரிவில் சில புதுமைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள். சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் தங்களது நெற்றியில் அணிந்த அனைத்து விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன. சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்குப் பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
56155.சின்னமலை ஆங்கிலேயரின் கோட்டை மீது தாக்குதல் நடத்த இருந்தபோது யாருடைய உதவியைப் பெற முயன்றார்?
மருது பாண்டியர்
திப்பு
பிரெஞ்சுக்காரர்
b) மற்றும் c)
Explanation:

சின்னமலை கோயம்புத்தூரில் இருந்த ஆங்கிலேயரின் கோட்டை மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் (1800) இருந்தபோது, மருது பாண்டியரின் உதவியைப் பெற முயன்றார். கம்பெனியுடன் போரிடுவதற்காக விருபாட்சி கோபால நாயக்கர், பரமத்திவேலூர் அப்பச்சிக் கவுண்டர், சேலம் ஆத்தூர் ஜோனி ஜான் கஹன், பெருந்துறை குமராள் வெள்ளை, ஈரோடு வாரணவாசி ஆகியோருடன் கூட்டணி சேர்ந்தார்.
56156.மூன்றாம் மைசூர் போரின்போது தக்க தருணத்தில் ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கியவர்கள்?
மராத்தியர்
வங்காள நவாப்
முகலாயர்
ராஜபுத்திரர்கள்
Explanation:

மூன்றாம் மைசூர் போரின்போது தக்க தருணத்தில் மராத்தியர் ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கினார்கள். கூடுதல் வலிமை பெற்ற ஆங்கிலேயப்படை ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டது. அதன் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திப்பு அமைதி உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்தார். உடன்படிக்கையில் கார்ன்வாலிஸ் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.
56157.சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்து, தனது நேரடிக் கண்காணிப்பில் அதனை அறிமுகம் செய்தவர்?
பானர் மேன்
வில்லியம் பெண்டிக்
மார்க்குயிஸ் ஹேஸ்டிங்ஸ்
அக்னியு
Explanation:

துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்து, தனது நேரடிக் கண்காணிப்பில் அதனை அறிமுகம் செய்தார்.
56158.இந்தியர்களின் பார்வையில் புதியவகை தலைப்பாகையில் இடம்பெற்றிருந்த அருவருக்கத்தக்க அம்சம் எது?
ரிப்பன்
குஞ்சம்
a மற்றும் b)
சிலுவை
Explanation:

இந்தியர்களின் பார்வை யி ல், இந்தத் தலைப்பாகையில் இடம்பெற்றிருந்த அருவருக்கத்தக்க அம்சம், அதன் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் ஆகும். இது மிருகத் தோலில் செய்யப்பட்டிருந்தது. பன்றித்தோல் முஸ்லீம்களுக்கு வெறுப்பூட்டும் பொருள் ஆகும். இந்துக்கள் பசுத்தோலில் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் விலக்க வேண்டியதாகக் கருதினர். இந்த மாற்றங்களுக்கான எதிர்ப்பை இந்தியர்களிடையே இன்னும் அதிகரிக்கச் செய்யும் வகையில், சிப்பாய்கள் அணியும் சீருடையின் முன்பக்கம் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
56159.கிளர்ச்சியாளர்களில் லட்சுமிபாய் மிகச் சிறந்த தைரியம் மிக்க தலைவரென லட்சுமிபாயைப் பற்றி குறிப்பிட்டவர்?
ஹென்றி லாரன்ஸ்
ஜான் நிக்கல்சன்
ஹக் ரோஸ்
ஹென்றி ஹேவ்லக்
Explanation:

கிளர்ச்சியாளர்களில் லட்சுமிபாய் மிகச் சிறந்த தைரியம் மிக்க தலைவரென லட்சுமிபாயைப் பற்றி ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
56160.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது.
ii. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர். இந்தப் பிரச்னை படைமுகாமின் தளபதியான கவர்னர் ஃபேன்கோர்ட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கிளர்ச்சியாளர்களை உடனிருந்து கண்காணிக்கும்படி 19ஆம் குதிரைப்படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இவர்கள் மீதான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
56161.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக அவத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்குப் பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினர்.
ii. டல்ஹௌசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்குத் துன்பத்தை விளைவித்தார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக அவத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்குப் பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினர். மேலும் அவத்தில் அரச குடும்பத்தின் ஆதரவை நம்பியிருந்த ஆயிரக் கணக்கான மக்களும், விலையுயர்ந்த ஆடைகள், அலங்கரிக்கப்பட்ட காலணிகள், அதிக விலையுள்ள நகைகள் ஆகியவற்றைத் தயாரிப்போரும் வாழ்விழந்தனர். இவ்வாறு டல்ஹௌசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்குத் துன்பத்தை விளைவித்தார்.
Share with Friends