Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 10

56172.வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
i. வெடிமருந்துகளும் துப்பாக்கி ரவைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கை முதலாம் ரெஜிமெண்ட்டின் ஒரு பிரிவு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
ii. ஒரு குழு குடியிருப்புகளில் உள்ள ஐரோப்பியரைக் கொல்வதற்குத் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

வெடிமருந்துகளும் துப்பாக்கி ரவைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கை முதலாம் ரெஜிமெண்ட்டின் ஒரு பிரிவு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதே ரெஜிமெண்ட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு குழு குடியிருப்புகளில் உள்ள ஐரோப்பியரைக் கொல்வதற்குத் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தது. ஏராளமான ஐரோப்பிய ஒழுங்குமுறை நடத்துனர்களுடன், 13 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இராணுவக்குடியிருப்பில் 82 கீழ்நிலை இராணுவ வீரர்கள் இறந்தார்கள். 91 பேர் காயமடைந்தனர்.
56173.வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. உள்ளூர் வீரர்கள் அடங்கிய 16ஆம் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது கோட்டைக்கு வெளியே பல்லக்கில் சென்று கொண்டிருந்தார்.
ii. பாதுகாப்பு அரணிலிருந்து சரமாரியாகப் பொழிந்த குண்டுமழை உடனடியாக அவரது உயிரைப் பறித்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

உள்ளூர் வீரர்கள் அடங்கிய 16ஆம் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது கோட்டைக்கு வெளியே பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் பல்லக்கிலிருந்து இறங்கி, கோட்டையின் சரிவான பகுதிக்குச் சென்று விசாரித்தார். அதற்குப் பதில் போல் பாதுகாப்பு அரணிலிருந்து சரமாரியாகப் பொழிந்த குண்டுமழை உடனடியாக அவரது உயிரைப் பறித்தது.
56174.வேலூர் கலகத்தின்போது ஆற்காட்டில் குதிரைப்படை முகாமுக்குப் பொறுப்பு வகித்தவர்?
கில்லஸ்பி
கோட்ஸ்
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
ஸ்டீவன்சன்
Explanation:

கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு கோட்டைக்குள் நுழைய முயன்றார். அவரால் உள்ளே செல்ல முடியாததால், ஆற்காட்டில் குதிரைப்படை முகாமுக்குப் பொறுப்பு வகித்த கில்லஸ்பிக்குக் கடிதம் எழுதி, அதைக் கேப்டன் ஸ்டீவன்சன் என்பவரிடம் கொடுத்தனுப்பினார். அந்தக் கடிதம் வேலூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருந்த ஆற்காட்டுக்குக் காலை 6 மணி அளவில் சென்றடைந்தது.
56175.தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி கர்னல் கென்னடியிடம் அறிவுறுத்திவிட்டு வேலூர் கோட்டையை நோக்கி புறப்பட்டு சென்றவர்?
கில்லஸ்பி
கோட்ஸ்
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
ஸ்டீவன்சன்
Explanation:

கர்னல் கில்லஸ்பி உடனே வேலூருக்குப் புறப்பட்டார். தன்னுடன் கேப்டன் யங் தலைமையில் 19ஆம் குதிரைப்படையைச் சேர்ந்த ஒரு பிரிவையும் லெப்டினெண்ட் உட் ஹவுஸ் தலைமையில் அதற்குத் துணைநிற்கும் 7ஆம் குதிரைப்படையிலிருந்து ஒரு வலுவான பிரிவையும் அழைத்துச் சென்றார். அவர் குதிரைப்படையில் மீதமுள்ள வீரர்களுடன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி கர்னல் கென்னடியிடம் அறிவுறுத்திவிட்டு, ஆற்காடு படைமுகாமைப் பாதுகாக்கவும் தன்னுடன் தகவல்தொடர்பில் இருக்கவும் ஒரு தனிப்பிரிவை விட்டுச்சென்றார்.
56176.யாருடைய தலைமையில் கோட்டையின் வெளிவாசல் கதவு தகர்க்கப்பட்டது?
கில்லஸ்பி
ஸ்கெல்ட்டன்
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
ப்ளாகிஸ்டன்
Explanation:

லெப்டினெண்ட் ப்ளாகிஸ்டன் தலைமையில் 19ஆம் குதிரைப்படையின் பீரங்கியால் கோட்டையின் வெளிவாசல் கதவு தகர்க்கப்பட்டது. கேப்டன் ஸ்கெல்ட்டன் தலைமையிலான குதிரைப்படையின் ஒரு பிரிவு கோட்டைக்குள் நுழைந்தது. கில்லஸ்பியின் வீரர்கள் கடுமையான துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் கர்னல் கில்லஸ்பியும் காயங்களுக்கு உள்ளானார்.
56177.வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கோட்டையின் திட்டிவாசல் மூலம் கிடைத்த குறுகலான பாதை வழியே தப்பியோடிய சிப்பாய்களைப் பின்தொடர்ந்து சென்று பிடிக்க முடிவெடுக்கப்பட்டது.
ii. கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் பின்வாங்கினார்கள்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் பின்வாங்கினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கோட்டையின் சுவர்கள் மீது ஏறித் தப்பித்தனர் அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கருணைக்காகக் கெஞ்சினர். குதிரைப்படைப்பிரிவுகள் அனைத்தும் அணிவகுப்பு மைதானத்தில் ஒன்றுகூடின. கோட்டையின் திட்டிவாசல் மூலம் கிடைத்த குறுகலான பாதை வழியே தப்பியோடிய சிப்பாய்களைப் பின்தொடர்ந்து சென்று பிடிக்க முடிவெடுக்கப்பட்டது.
56178.1761 இல் நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகள் யாருடைய வசமாயின?
யூசுப்கான்
மாபூஸ்கான்
புலித்தேவர்
கட்டபொம்மன்
Explanation:

யூசுப் கான் நெற்கட்டும் செவல் கோட்டையை இடிக்கும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தினார். இது ஏறத்தாழ இரு மாதங்கள் நீடித்தது. 1761 மே 16இல் நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகள் யூசுப் கான் வசமாயின.
56179.கில்லஸ்பியின் ஆட்கள் கிளர்ச்சிக்குத் திட்டம் தீட்டிய திப்புவின் மகன்களைப் பழிவாங்க விரும்புவதை எதிர்த்தவர்?
கில்லஸ்பி
ஸ்கெல்ட்டன்
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
கர்னல் மர்ரியாட்
Explanation:

தப்பியோடிய சிப்பாய்களை வழிமறித்துப் பிடிக்கச் சில உள்ளூர் குதிரைக்காரர்களுடன் ஒரு குதிரைப்படைப்பிரிவு கிளம்பியது. கோட்டையின் அனைத்துக் கட்டிடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. அங்கு ஒளிந்திருந்த கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். கில்லஸ்பியின் ஆட்கள் கிளர்ச்சிக்குத் திட்டம் தீட்டிய திப்புவின் மகன்களைப் பழிவாங்க விரும்பினார்கள். ஆனால் லெப்டினெண்ட் கர்னல் மர்ரியாட் இதை எதிர்த்தார்.
56180.வேலூர் புரட்சியின்போது 800க்கும் மேற்பட்ட உடல்கள் கோட்டையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக கூறியவர்?
ஜே. வில்சன்
ஜே. பிளாக்கிஸ்டன்
கர்னல் ஹர்கோர்ட்
ஸ்கெல்ட்டன்
Explanation:

கில்லஸ்பியின் வன்கொடுமைகளை நேரில் பார்த்த ஜே. பிளாக்கிஸ்டன், 800க்கும் மேற்பட்ட உடல்கள் கோட்டையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார். டபிள்யூ. ஜே. வில்சனின் மதிப்பீட்டின்படி கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக 378 பேர் சிறை வைக்கப்பட்டனர். 516 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை. விசாரணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களின்படி, இராணுவ நீதிமன்றம் சில தனிப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதித்தது. சிலரை நாடு கடத்தியது. இத்தண்டனைகள் வேலூர் பொறுப்பதிகாரியால் 1806 செப்டம்பர் 23 அன்று நிறைவேற்றப்பட்டது.
56181.முதலாம் ரெஜிமெண்ட்டின் முதல் படைப்பிரிவில் பீரங்கி முனையில் கட்டிச் சுடப்பட்டவர்கள்?
1 ஹவில்தார், 1 நாயக்
1 நாயக், 4 சிப்பாய்கள்
1 ஜமேதார், 4 சிப்பாய்கள்
3 ஹவில்தார்கள்
Explanation:

முதலாம் ரெஜிமெண்ட்டின் முதல் படைப்பிரிவு பீரங்கி முனையில் கட்டிச் சுடப்பட்டவர்கள் – 1 ஹவில்தார், 1 நாயக் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் – 1 நாயக், 4 சிப்பாய்கள் தூக்கிலிடப்பட்டவர்கள் – 1 ஜமேதார், 4 சிப்பாய்கள் நாடு கடத்தப்பட்டவர்கள் – 3 ஹவில்தார்கள், 2 நாயக்குகள், 1 சிப்பாய் 23ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு பீரங்கி வாயில் கட்டிச் சுடப்பட்டவர்கள் – 2 சுபேதார்கள், 2 லஸ்கார்கள் தூக்கிலிடப்பட்டவர்கள் – 2 ஹவில்தார்கள், 1 நாயக்
Share with Friends