Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 9

56162.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவுக்குப் பதிலாக வாலாஜாபாத்திலிருந்த 23ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு பொறுப்பை ஏற்றது.
ii. தலைமையின் உத்தரவை எதிர்த்தமைக்காகப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலிருந்த 21 வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவுக்குப் பதிலாக வாலாஜாபாத்திலிருந்த 23ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு பொறுப்பை ஏற்றது. தலைமையின் உத்தரவை எதிர்த்தமைக்காகப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலிருந்த 21 வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள். அவர்களில் 10 முஸ்லீம்களும் 11 இந்துக்களும் இருந்தார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்பொருட்டு இரு வீரர் (ஒரு முஸ்லீம், ஒரு இந்து)களுக்குத் தலா 900 கசையடிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
56163.புதிய தலைப்பாகையை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாக நம்பியவர்?
ஹென்றி லாரன்ஸ்
ஜான் நிக்கல்சன்
அக்னியூ
வில்லியம் பெண்டிங்க்
Explanation:

இந்திய வீரர்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புகளை மீறி, அவர்களின் மனக்குறைகளைப் பொருட்படுத்தாமல் அரசு தான் முன்வைத்த மாற்றங்களைச் செயல்படுத்த முடிவெடுத்தது. ‘புதிய தலைப்பாகையை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாக’வே கவர்னர் வில்லியம் பெண்டிங்க் நம்பினார்.
56164.ஊமைத்துரை தன் ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள எந்த பகுதியைக் கைப்பற்றினார்?
கமுதி
பாஞ்சாலங்குறிச்சி
பழையநாடு
சிறுவயல்
Explanation:

ஜூலையில் ஊமைத்துரை தன் ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள பழையநாடு என்னும் பகுதியைக் கைப்பற்றினார். 1801இல் சின்ன மருதுவின் மகன் செவத்த தம்பியின் தலைமையில் சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த படைகளும் இணைந்து, கடற்கரை வழியாகத் தஞ்சாவூர் நோக்கி அணிவகுத்துச் சென்றன.
56165.வேலூர் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படுபவர்?
ஜமாலுதீன்
ஷேக் காசிம்
அப்துல்லா
அமீர்
Explanation:

வேலூர் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படுபவர் ஜமாலுதீன் ஆவார். இவர் திப்புக் குடும்பத்தின் 12 இளவரசர்களில் ஒருவர். அவர் ஷேக் காசிம் போன்ற இந்திய அதிகாரிகளிடமும் வீரர்களிடமும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின்போது, அவர்கள் வேலூர் கோட்டையை எட்டு நாட்களுக்குத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியும் அதற்குள் 10 ஆயிரம் ஆதரவாளர்கள் உதவிக்கு வந்து விடுவார்கள் என்றும் கூறி வந்தார்.
56166.திப்புவின் முன்னாள் அமைச்சர் என்று ஜமாலுதீனால் குறிப்பிடப்பட்டவர்?
புர்னியா
ஷேக் காசிம்
ஷேக் பகதூர்
திரிம்பக்க்ஷி
Explanation:

உரிமை பறிக்கப்பட்ட பாளையக்காரர்களின் உதவியைக் கேட்டு அவர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதையும் ஜமாலுதீன் தெரிவித்தார். திப்பு சுல்தானிடம் பணிபுரிந்த ஏராளமான அதிகாரிகள் திப்புவின் முன்னாள் அமைச்சரான புர்னியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் தக்க நேரத்தில் கைகொடுப்பார்கள் என்றும் ஜமாலுதீன் கூறினார்.
56167.கூற்று (கூ): கம்பெனியால் அனுப்பப்பட்ட யூசுப் கான் திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கிகளும் வெடிமருந்துகளும் வந்துசேரும் வரை புலித்தேவரைத் தாக்கத் துணியவில்லை.
காரணம் (கா): பிரெஞ்சுக்காரர், ஹைதர் அலி, மராத்தியர் ஆகியோருடன் ஆங்கிலேயர் போர்களில் ஈடுபட்டுவந்ததால், 1760 செப்டம்பரில்தான் பீரங்கிகள் வந்துசேர்ந்தன.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

கம்பெனியால் அனுப்பப்பட்ட யூசுப் கான் திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கிகளும் வெடிமருந்துகளும் வந்துசேரும் வரை புலித்தேவரைத் தாக்கத் துணியவில்லை. பிரெஞ்சுக்காரர், ஹைதர் அலி, மராத்தியர் ஆகியோருடன் ஆங்கிலேயர் போர்களில் ஈடுபட்டுவந்ததால், 1760 செப்டம்பரில்தான் பீரங்கிகள் வந்துசேர்ந்தன.
56168.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கம்பெனி அரசாங்கத்தின் நில உரிமையும் வருவாய் ஈட்டும் முறையும் இந்தியக் கிராமியச் சமூகத்தை மிகக் கடுமையாகப் பாதித்தன.
ii. விவசாயிகள் அவர்களுக்கு அதிகளவிலான வருவாய் இலக்கை நிர்ணயித்து, அநியாயமாக அதை வசூலித்த ஒப்பந்ததாரர்களாலும் கம்பெனி அதிகாரிகளாலும் நசுக்கப்பட்டனர்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கம்பெனி அரசாங்கத்தின் நில உரிமையும் வருவாய் ஈட்டும் முறையும் இந்தியக் கிராமியச் சமூகத்தை மிகக் கடுமையாகப் பாதித்தன. விவசாயிகளை அதற்கு முன்னில்லாத அளவுக்கு வருத்தியது. வருவாய் ஈட்டும் வேளாண்முறையின் தொடக்க காலத்தில் விவசாயிகள் அவர்களுக்கு அதிகளவிலான வருவாய் இலக்கை நிர்ணயித்து, அநியாயமாக அதை வசூலித்த ஒப்பந்ததாரர்களாலும் கம்பெனி அதிகாரிகளாலும் நசுக்கப்பட்டனர்.
56169.வேலூர் கோட்டையில் ஏற்பட்ட புரட்சி முதலில் யாருக்கு தெரிவிக்கப்பட்டது?
கார்ப்பரல் பியர்சி
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
கர்னல் கில்லஸ்பி
வில்லியம் பெண்டிங்க்
Explanation:

வேலூர்க் கோட்டையில் ஜூலை 10ஆம் நாள் காலை 2 மணிக்கு முதன்மை பாதுகாப்புத்தளத்திலிருந்த காவலாளியிடமிருந்து கார்ப்பரல் பியர்சிக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டது. படைவீரர் குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது என்பதே அச்செய்தி. பியர்சி பதில் நடவடிக்கையில் இறங்கும் முன்னரே, சிப்பாய்கள் ஆங்கிலேயப் பாதுகாவலர்கள் மீதும், படைவீரர் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு ஆகியவற்றின் மீதும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுத்தனர். பியர்சியும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.
56170.கூற்று (கூ): கிழக்கிந்தியக் கம்பெனி திவானி உரிமையைப் பெற்ற பிறகு, தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளைக் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியிருந்தது.
காரணம் (கா): கம்பெனி போதுமான வலிமையுடன் இல்லாததால், இந்திய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து வந்தது.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

கிழக்கிந்தியக் கம்பெனி திவானி உரிமையைப் பெற்ற (வங்காளம், பீகார், ஒரிசா ஆகியவற்றில் முகலாய அரசுக்குப் பதிலாக வரி வசூலிக்கும் உரிமை) பிறகு, தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளைக் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டியிருந்தது. கம்பெனி போதுமான வலிமையுடன் இல்லாததால், இந்திய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்து வந்தது.
56171.வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஐரோப்பிய அதிகாரிகளின் குடியிருப்புகளைக் கண்காணித்து, வெளியே வரும் எவரையும் சுடுவதற்குத் தனிப்படைப்பிரிவு நியமிக்கப்பட்டது.
ii. கிளர்ச்சியாளர்கள் படுக்கைகளில் பாதுகாப்பின்றி உறங்கிக்கொண்டிருந்த ஐரோப்பியரைச் சன்னல் வழியாக எளிதில் சுட முடிந்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஐரோப்பியக் குடியிருப்புகளில் கோடை வெக்கையைச் சமாளிக்கக் கதவுகள் இரவிலும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. கிளர்ச்சியாளர்கள் படுக்கைகளில் பாதுகாப்பின்றி உறங்கிக்கொண்டிருந்த ஐரோப்பியரைச் சன்னல் வழியாக எளிதில் சுட முடிந்தது. ஐரோப்பியக் குடியிருப்புக்குத் தீ வைக்கப்பட்டது. ஐரோப்பிய அதிகாரிகளின் குடியிருப்புகளைக் கண்காணித்து, வெளியே வரும் எவரையும் சுடுவதற்குத் தனிப்படைப்பிரிவு நியமிக்கப்பட்டது.
Share with Friends