Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 4

56112.வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு கலெக்டரை எங்கு சந்திக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டது?
திருநெல்வேலி
இராமநாதபுரம்
சிவகங்கை
மதுரை
Explanation:

பாளையக்காரர்களிடமிருந்து கப்பம் வசூலிப்பதற்காகச் சொக்கம்பட்டி, சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கியிருந்தபோது வீரபாண்டியக் கட்டபொம்மன் அவரைச் சந்திக்க முயன்றார். ஆனால் இராமநாதபுரத்தில்தான் கலெக்டரைச் சந்திக்க முடியும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
56113.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கட்டபொம்மன் கப்பத்தொகையில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்டதையும் 1080 வராகன் மட்டுமே பாக்கி இருப்பதையும் ஜாக்சன் அறிந்துகொண்டார்.
ii. சந்திப்பின்போது ஆணவக்குணம் கொண்ட ஜாக்சன் முன்னால் கட்டபொம்மனும் அவருடைய அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் நின்றபடி உரையாட வேண்டியிருந்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

கட்டபொம்மன் கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தொகையில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்டதையும் 1080 வராகன் மட்டுமே பாக்கி இருப்பதையும் கணக்குகளைச் சரிபார்த்து அவர் அறிந்துகொண்டார். இந்தச் சந்திப்பின்போது ஆணவக்குணம் கொண்ட ஜாக்சன் முன்னால் கட்டபொம்மனும் அவருடைய அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் நின்றபடி உரையாட வேண்டியிருந்தது.
56114.ஜாக்சன் சந்திப்பின்போது கட்டபொம்மன் தரப்பில் கைது செய்யப்பட்டவர்?
சிவசுப்பிரமணிய பிள்ளை
சிவசுந்தரம் பிள்ளை
சிங்காரம் பிள்ளை
ஊமைத்துரை
Explanation:

சந்திப்பின் இறுதியில் ஜாக்சன் இருவரையும் இராமநாதபுரம் கோட்டையில் தங்கும்படி கூறினார். அங்கு திடீரென வந்த வீரர்கள் கட்டபொம்மனைக் கைது செய்யவே வந்திருந்தார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. கட்டபொம்மனும் அமைச்சரும் தப்ப முயன்றனர். கோட்டைவாசலில் நடந்த மோதலில் லெப்டினெண்ட் க்ளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டார்கள். சிவசுப்பிரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டடா ர். கட்டபொம்மன் மட்டுமே தப்ப முடிந்தது.
56115.கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரணடையும்படி அறிவிப்பு வெளியிட்டவர்?
தாமஸ் மன்றோ
ஹெக்டர் மன்றோ
எட்வர்டு கிளைவ்
ஜாக்சன்
Explanation:

பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிய கட்டபொம்மன் தன்னிடம் ஜாக்சன் நடந்துகொண்ட முறையே இராமநாதபுரத்தில் நடந்த மோதலுக்குக் காரணம் என்று சென்னை கவுன்சிலுக்குக் கடிதம் அனுப்பினார். இதற்கிடையே ஆளுநர் எட்வர்டு கிளைவ் கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரணடையும்படி அறிவிப்பு வெளியிட்டார். இவ்வாறு கட்டபொம்மன் சரணடைந்தால் நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் இதற்கு உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
56116.ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டவர்?
லூஷிங்டன்
எட்வார்ட் கிளைவ்
ஸ்டெர்லிங்
ஹெரான்
Explanation:

கட்டபொம்மன் கம்பெனி விசாரணைக்குழுவிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார். கலகக் குற்றச்சாட்டுகளிலிருந்து கட்டபொம்மனை விடுவித்த குழு, கலெக்டர் நடந்துகொண்ட விதத்துக்காக அவரைக் கண்டித்தது. லூஷிங்டன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். இறுதியில் ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
56117.மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வலுவான அரண்களுடன் மிகப் பாதுகாப்பாக இருந்த கோட்டை எது?
நெற்கட்டும் செவல்
மலைக்கோட்டை
காளையார் கோவில்
சிவகிரிக்கோட்டை
Explanation:

கட்ட பொம்மன் சிவகிரி பாளையக்காரருடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சி திறந்த சமவெளிப்பகுதியில் எளிதாகத் தாக்குதலுக்குள்ளாகும் விதத்தில் அமைந்திருந்தது. சிவகிரிக்கோட்டை மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வலுவான அரண்களுடன் மிகப் பாதுகாப்பாக தாக்குதல், எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் ஆகிய இரு நடவடிக்கைகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது.
56118.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஆங்கிலேயருக்கு முன்னர் இருந்த இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூலித்தனர்.
ii. ஆங்கிலேயர் நிலவருவாயை வரியாகக் கருதாமல் வாடகையாகக் கருதினர்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

அநியாயமான நிலவருவாய் முறை இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகளில் இருந்ததைக் காட்டிலும் தற்போது நிலவரி மிக அதிகமாக இருந்தது. ஆங்கிலேயருக்கு முன்னர் இருந்த இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூலித்தனர். ஆங்கிலேயர் நிலவருவாயை வரியாகக் கருதாமல் வாடகையாகக் கருதினர். இதன்படி நிலத்தில் விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அதே அளவு வரி வசூலிக்கப்பட்டது.
56119.கட்டபொம்மனின் நிலையைப் பலப்படுத்துவதற்காகச் சென்ற சிவகிரி பாளையக்காரரின் மகன்?
செங்கணான்
வீரபாண்டியன்
சோழ வேழன்
பொதிய வெற்பன்
Explanation:

கட்டபொ ம்மனின் நிலையைப் பலப்படுத்துவதற்காகச் சிவகிரி பாளையக்காரரின் மகன் வீரபாண்டியன் தன் வீரர்களுடனும் கூட்டணியில் இருந்த பிற தலைவர்களுடனும் தளவாய் குமாரசாமி நாயக்கரின் தலைமையில் மேற்கு நோக்கி அணிவகுத்துச் சென்றார். சிவகிரிபாளையம் கம்பெனிக்குக் கட்டுப்பட்டதாக இருந்ததால், வீரபாண்டியனின் இந்நடவடிக்கையை சென்னைக் கம்பெனி அரசு தனக்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதி தாக்குதலுக்கு உத்தரவிட்டது.
56120.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1798 மே மாதத்தில் வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்த படைகளை் திருநெல்வேலிக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.
ii. மேஜர் பானர்மேன் அதிக ஆற்றல் கொண்ட போர்த்தளவாடங்களுடன் படைகளை வழிநடத்தினார்.
i சரி
ii சரி
i மற்றும் (ii) சரி
i மற்றும் (ii) தவறு
Explanation:

1799 மே மாதத்தில் வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்த படைகளை் திருநெல்வேலிக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். திருவனந்தபுரம் அரசரின் படையும் ஆங்கிலேயருடன் இணைந்தது. மேஜர் பானர்மேன் அதிக ஆற்றல் கொண்ட போர்த்தளவாடங்களுடன் படைகளை வழிநடத்தினார்.
56121.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார்.
ii. பழையனாறு என்ற இடத்தில் மருதுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
i சரி
ii சரி
i மற்றும் (ii) சரி
i மற்றும் (ii) தவறு
Explanation:

1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார். பழையனாறு என்ற இடத்தில் மருதுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சிவகங்கையிலிருந்து ஆயுதம் தரித்து வந்த 500 பேருடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பினார்.
Share with Friends