Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 2

56092.கூற்று (கூ): திருவிதாங்கூர், சேற்றூர், ஊற்றுமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேய அணிக்கு மாறினர்.
காரணம் (கா): பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து உதவிகள் வரமுடியாத காரணத்தால், பாளையக்காரர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரெஞ்சுக்காரர்களின் தலையீடு இல்லாமல் ஆனது. பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து உதவிகள் வரமுடியாத காரணத்தால், பாளையக்காரர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது. திருவிதாங்கூர், சேற்றூர், ஊற்றுமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேய அணிக்கு மாறினர்.
56093.களக்காட்டில் நடைபெற்ற போரில் யாருடைய படை தோற்றது?
யூசுப்கான்
மாபூஸ்கான்
புலித்தேவர்
கட்டபொம்மன்
Explanation:

மாபூஸ்கான் தன் படையினரைக் களக்காட்டுக்கு அருகே நிறுத்திவைப்பதற்கு முன்பே திருவிதாங்கூரிலிருந்து வந்த 2000 வீரர்கள் புலித்தேவர் படையுடன் சேர்ந்துகொண்டார்கள். களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபுஸ்கானின் படை தோற்றது.
56094.மங்களூர் உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?
1786
1782
1784
1781
Explanation:

1784 மார்ச் மாதத்தில் மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி, இரு தரப்பினரும் அதுவரை வென்ற பகுதிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் போரில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
56095.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஆற்காடு நவாப் மாபுஸ்கானுக்குக் கூடுதல் படைப்பிரிவை அனுப்பினார்.
ii. கர்நாடகத்திலிருந்து குதிரைப்படையினரும், காலாட்படை வீரர்களும் வந்ததால் மாபுஸ்கானின் படைபலம் அதிகரித்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

இன்னொரு பக்கம் ஆற்காடு நவாப் மாபுஸ்கானுக்குக் கூடுதல் படைப்பிரிவை அனுப்பினார். நவாபின் வலுப்படுத்தப்பட்ட படை திருநெல்வேலியை நோக்கிப் பயணித்தது. கம்பெனியைச் சேர்ந்த 1000 வீரர்களுடன், நவாப் மூலம் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்ட 600 வீரர்களும் இப்போது மாபுஸ்கானிடம் இருந்தார்கள். கூடவே, கர்நாடகத்திலிருந்து குதிரைப்படையினரும், காலாட்படை வீரர்களும் வந்ததால் மாபுஸ்கானின் படைபலம் அதிகரித்தது.
56096.ஊமைத்துரையும் செவத்தையாவும் எங்கு கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள்?
திருப்பத்தூர்
பாஞ்சாலங்குறிச்சி
சங்ககிரி
கயத்தாறு
Explanation:

ஊமைத்துரையும் செவத்தையாவும் அவர்களின் ஆதரவாளர்கள் பலரும் பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு 1801 நவம்பர் 16ஆம் நாள் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 73 கிளர்ச்சியாளர்கள் 1802 ஏப்ரல் மாதத்தில் மலேயாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
56097.நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிட்டு 1767இல் கைப்பற்றியவர்?
கர்னல் பெய்லி
கர்னல் ஃபுல்லர்ட்டன்
கேப்டன் கேம்பெல்
கர்னல் ஹெரான்
Explanation:

கோட்டைகளை யூசூப் கான் கைப்பற்றிய பிறகு, எங்கோ தஞ்சம் புகுந்த புலித்தேவர் தனது பாளையத்துக்குத் திரும்பி, மீண்டும் ஆங்கிலேயருக்கு எதிராகப் பாளையக்காரர்களைத் திரட்டத் தொடங்கினார். இம்முறை ஆங்கிலேயர் அனுப்பிய கேப்டன் கேம்பெல் நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிட்டு 1767இல் கைப்பற்றினார். புலித்தேவனின் இறுதிநாட்கள் குறித்த செய்திகள் கிடைக்கப்பெறவில்லை.
56098.ஹைதர் அலியைத் தோற்கடித்து சோழவந்தானைக் கைப்பற்றியவர்?
யூசுப்கான்
மாபூஸ்கான்
ஹெரான்
அயற்கூட
Explanation:

ஆற்காடு நவாபுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், கம்பெனி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு 1756 முதல் 1761 வரை ஆளுநராக யூசுப்கான் பொறுப்பு வகித்தார். யூசுப்கான் ஹைதர் அலியைத் தோற்கடித்து, சோழவந்தானைக் கைப்பற்றினார்.
56099.மருதநாயகம் பிள்ளை எங்கிருக்கும்போது இசுலாம் சமயத்தைத் தழுவினார்?
புதுச்சேரி
சென்னை
திண்டுக்கல்
திருச்சி
Explanation:

யூசுப் கானின் இயற்பெயர் மருதநாயகம் பிள்ளை. அவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புதுச்சேரியில் இருந்தபோது, இசுலாம் சமயத்தைத் தழுவினார். 1752இல் கிளைவ் தலைமையிலான கம்பெனிப் படையில் சேர்ந்த யூசுப் கான் 1752-54இல் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி முற்றுகையில் பங்கேற்றார்.
56100.இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியை ஆட்சி புரிந்தவர்கள்?
பாளையக்காரர்கள்
சேதுபதி மன்னர்கள்
உடையார்கள்
நாயக்கர்கள்
Explanation:

இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியைச் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செலுத்தினர். வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார். அவர் சிவகங்கை அரசரான முத்துவடுகர் பெரியஉடையாரை மணந்தார். அவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற மகள் இருந்தார்.
56101.ஹைதர் அலியின் பாதுகாப்பில் வேலு நாச்சியார் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்?
ஐந்து
பத்து
எட்டு
ஒன்பது
Explanation:

வேலு நாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதும், அவர் தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டு காலம் இருந்தார். இக்காலகட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையைக் கட்டமைத்தார்.
Share with Friends