53854.எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதை படைக்காதவர் யார்?
எஸ். வைத்தீஸ்வரன்
தருமு சிவராமு
க.நா. சுப்பிரமணி
சி.சு. செல்லப்பா
53855.உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்பெறும் காப்பியம்?
மணிமேகலை
கம்பராமாயணம்
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
53856.நாடகவியல் என்னும் நூலை இயற்றியவர் ?
பரிதிமாற்கலைஞர்
பம்மல் சம்மந்தனார்
சங்கரதாஸ் சுவாமிகள்
மறைமலையடிகள்
53857.இருபதாம் நூற்றாண்டின் ஒளவையார் என்றழைக்கப்படுபவர் யார்?
அம்புஜத்தம்மாள்
அஞ்சலையம்மாள்
மூவலூர் இராமாமிர்தம்
அசலாம்பிகை அம்மையார்
53860."மனைக்கு விளக்கம் மடவாள்" என்று பெண்மையின் பெருமையை கூறும் நூல்?
நாலடியார்
புறநானூறு
நான்மணிக்கடிகை
பழமொழி நானூறு
53861.புதியதோர் உலகு செய்வோம் கெட்ட போரிடும்
உலகத்தை வேரொடு சாய்ப்போம் - என்று பாடிய கவிஞன் ?
உலகத்தை வேரொடு சாய்ப்போம் - என்று பாடிய கவிஞன் ?
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
முடியரசன்
பாரதிதாசன்
53862.இந்திய நூலகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சீ.ரா. அரங்கநாதன்
சீ. இராஜேந்திரன்
அரங்க கிருட்டிணன்
சீ.ரா. அரங்கசாமி
53863.கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது? (முப்பாலை புகழ்ந்தவர்கள்)
1. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே | - | பாரதிதாசன் |
2. தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட | - | பரணர் |
3. உள்ளுதோ றுள்ளுதோ உள்ளம் | - | மாங்குடி மருதனார் |
4. செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே | - | கவிமணி |
3
1
2
4
53866.பொருத்துக:
1. தாங்குறூஉம் | - | ஒருபொருட்பன்மொழி |
2. வல்விரைந்து | - | இன்னிசையளபெடை |
3. ஒரீஇ | - | உரிச்சொற்றொடர் |
4. மல்லல் மதுரை | - | சொல்லிசை அளபெடை |
3 2 4 1
2 1 4 3
2 4 1 3
3 4 2 1
53867.தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி?
அபிதான சிந்தாமணி
சேந்தன் திவாகரம்
சூடாமணி நிகண்டு
அபிதான கோசம்
53869.தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க :
பசிப்பிணி என்னும் பாவி - மணிமேகலை
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - புறநானூறு
காலை மாலை உலவி நிதம் - கவிமணி
ஆமை வடக்காய் அரைஞாண் பணயம் - சுரதா
53871.கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங்காடும் செடியும் கடந்து வந்தேன் - என்று பாடிய புலவன்?
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
நாமக்கல் வெ.இராமலிங்கம்பிள்ளை
திரு.வி.கலியாணசுந்தரனார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
53872."மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் - இவ்வரி இடம்பெறும் நூல்?
பரிபாடல்
பதிற்றுப்பத்து
குறுந்தொகை
சிலப்பதிகாரம்
53873.முறையான சொற்றொடரை தேர்வு செய்க :
ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் மலர்தலை
மலர்தலை மன்னுயிர்க் கெல்லாம் ஞாலத்து
மன்னுயிர்க் கெல்லாம் மலர்தலை ஞாலத்து
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்