Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை இரா.மீனாட்சி

இரா.மீனாட்சி

வாழ்க்கை குறிப்பு:

  • பிறந்த ஊர்: திருவாரூர்
  • பெற்றோர்கள்: ராமச்சந்திரன் – மதுரம்
  • பிறப்பு : 23 .01 . 1941

ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் இரா. மீனாட்சி ஒரு தமிழ் கவிஞர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.
  • சி. சு. செல்லப்பாவின் “எழுத்து” காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர் கவிஞர் இரா. மீனாட்சி.
  • பாரதி, பாரதிதாசனுக்குப் பின் பெண் உரிமை குறித்து அதிகம் எழுதியவர்.
  • ஆசிரியப் பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.
  • புதுச்சேரி ஆரோவில்லில் தொண்டாற்றி வருகிறார்.
  • இவர் கவிதை முழுவதும் "மீனாட்சி கவிதைகள் "என்ற தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. அதில் 191 கவிதைகள் உள்ளன.

சிறப்பு:

  • இவரது கவிதைகளை கலாச்சார உறவுகளுக்கான இந்திய மையம், மனித வள மேம்பாட்டு வளர்ச்சித்துறை ஆகியவை வெளியிட்டு உள்ளது.
  • தமிழ்நாடு பல்கலைக்கழக பாடபுத்தகங்களில் இவரது கவிதை தொகுப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20-ம் நூற்றாண்டின் ஐந்து கவிஞர்களில் ஒன்றாக இவரது கவிதைகள் உள்ளன.

தற்போதைய சிறப்புப் பணி

  • உறுப்பினர், சாகித்திய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழு.
  • ஆசிரியர், ஆரோவில் கிராமச் செய்தி மடல் (மாத வெளியீடு)
  • நிர்வாகி, ஆரோவில் நிர்வாகிகள்-ஊழியர் நல நிர்வாகத் திட்டம்
  • அறங்காவலர், சங்கமம் குடியிருப்புத் திட்டம், ஆரோவில்
  • பொறுப்பு உறுப்பினர், ஸ்ரீஅரபிந்தோ பன்னாட்டுக் கல்வி ஆய்வு மையம், ஆரோவில்

கவிதை நூல்கள்:

  • நெருஞ்சி
  • சுடுபூக்கள்
  • தீபாவளிப் பகல்
  • உதய நகரிலிருந்து
  • மறு பயணம்
  • வாசனைப்புல்
  • கொடிவிளக்கு
  • செம்மண் மடல்கள்
  • மீனாட்சி கவிதைகள்
  • ஓவியா

ஆங்கிலப் படைப்பு:

  • இந்தியப் பெண்கவிகள் பேசுகிறார்கள்

சிற்றிதழ்களில் கவிதை

  • எழுத்து, கணையாழி, தீபம், அன்னம்விடு தூது, கவி ஆகிய சிற்றிதழ்களில் கவிதை எழுதியவர்.

பரிசு மற்றும் விருதுகள்:

  • சிற்பி இலக்கிய விருது (2005)
  • புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது (2007)
  • “உதய நகரிலிருந்து” என்ற புதுக் கவிதை நூலுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது (2006)
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது (2007)
  • புதுவை பாரதி விருது (2010)
  • கவிக்கோ விருது (2010)
  • “செம்மண் மடல்கள்” எனும் நூலும் 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றுள்ளது.
  • மேலும் இவர் சிறந்த சித்த மருத்துவ சேவைக்காக 'ஸ்ரீபுத்தூ மகரிஷி அறக்கட்டளை ' வழங்கிய “சித்த மருத்துவ சேவை செம்மல்” எனும் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்:

1978-'சுடுபூக்கள்' கவிதைத்தொகுப்பில் வெளியான இக்கவிதை

  • மதுரை நாயகியே!
  • மீனாட்சித்தாயே!
  • படியேறி
  • நடை தாண்டி
  • குளம் சுற்றி
  • கிளி பார்த்து
  • உன்னருகே ஓடிவரும்
  • உன்மகளை
  • உன்மகனே ஏ
  • வழிவம்பு செய்கின்றான்
  • கோயிலிலும் காப்பில்லை
  • உன் காலத்தில்
  • அழகி நீ!
  • எப்படி உலாப்போனாய்?

Share with Friends