Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை தருமு சிவராமு

வாழ்க்கை குறிப்பு:

  • இயற்பெயர் – சிவராமலிங்கம்
  • ஊர் : திரிகோணமலை - இலங்கை
  • புனைப்பெயர் :பானுசந்திரன், அரூப்சிவராம், பிரமிள்,படிமக் கவிஞர்,ஆன்மீக கவிஞர்
  • காலம் : பிறப்பு – 20.04.1939 , மறைவு – 06.01.1997

ஆசிரியர் குறிப்பு

  • இவர் “எழுத்து” எனும் சி. சு. செல்லப்பாவின் பத்திரிக்கைகளில் முதன்முதலில் கவிதைகளையும் விமர்சனங்களையும் எழுத ஆரம்பித்தார்.
  • மௌனியின் கதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதி உள்ளார்.
  • "கவிதை கோட்பாடுகளும் பாரதி கலையும் "என்ற தலைப்பில் பாரதியை பற்றி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.

கல்வி:

இவர் ராமகிருஷ்ண மடம் நடத்திய இரவு பாடசாலையில் ஆரம்ப கால கல்வி மட்டும் படித்தார்.

சிறப்பு:

  • தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர் என்ற பல்வேறு வகையில் இவரை அழைக்கப்படுகின்றனர்.
  • 1971 இல் “கண்டி பிரான்சு நட்புறவு” கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.
  • களிமண் சிற்பங்கள் செய்வதில் சிறந்தவராக தருமு சிவராமு விளங்கினார்.
  • அடிக்கடித் தன் பெயரை மாற்றி புதுப்பித்து கொண்டிருப்பவர் தருமு சிவராம்.

கவிதை நூல்கள்:

  • கண்ணாடியுள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்
  • மேல்நோக்கிய பயணம்
  • பிரமிள் கவிதைகள்
  • விடிவு

சிறுகதை:

  • லங்காபுரிராஜா
  • பிரமிள் படைப்புகள்

நாவல்:

  • ஆயி
  • பிரசன்னம்

உரைநடை:

  • மார்க்சும் மார்க்சீயமும்

புகழுரை:

“தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும்”. “பிரமிள் விசித்திரமான படிமவாதி” மற்றும் "உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்" என்று “சி.சு.செல்லப்பாவாலும்” பாராட்டப்பட்டவர்.

விருதுகள் :

  • நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன்” விருதை இவருக்கு அளித்தது.
  • கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” வழங்கியது.

மேற்கோள்:

`காவியம்' என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பிரமிளின் இந்தக் கவிதை

  • 'சிறகிலிருந்து பிரிந்த
  • இறகு ஒன்று
  • காற்றின்
  • தீராத பக்கங்களில்
  • ஒரு பறவையின் வாழ்வை
  • எழுதிச் செல்கிறது!'
Share with Friends