TNPSC GROUP2-GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) மத்திய மாநில அரசுகள் இடையேயான நிதி பகிர்வு
மத்திய மாநில அரசுகள் இடையேயான நிதி பகிர்வு:
நிதி தொடர்பான உறவுகள்:
பண வளங்களைப் பகிர்ந்தளித்தல் மாநில அரசுகளுடனான மத்திய அரசின் உறவு ஆராயக்கூடியது. அரசியலமைப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தனித்தனி வருமான வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய பட்டியலிலுள்ள இனங்களுக்கு நாடாளுமன்றம் வரிகள் விதிக்கலாம். மாநிலப்பட்டியலிலுள்ள இனங்களுக்கு மாநில அரசு வரிகள் விதிக்கலாம். மாநிலங்களுக்கிடையிலான அடித்தளங்களைக் கொண்ட வரிகள் ஒட்டு மொத்தமாக மத்திய அரசால் விதிக்கப்படுகின்றன. அவற்றில் உள்ளுர் காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை மாநில அரசால் விதிக்கப்படுகின்றன.
மத்திய பட்டியல் கீழ்வரும் வரிகளைக் கொண்டது.
பத்திரப்பதிவு வரி மற்றும் மருத்துவ மற்றும் கழிவுப் பொருள்கள் மீதான உற்பத்தி வரி போன்றவை மத்திய அரசினால் விதிக்கப்பட்டு மாநில அரசினால் வசுலிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கும் வரிகள்.
ரயில்வே கடல் வழி அல்லது வான்வழிப் போக்குவரவு வரிகள் போன்றவை மத்திய அரசினால் விதிக்கப்பட்டு வசு10லிக்கப்பட்டு ஆனால் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரிகள்.
உற்பத்தி வரி போன்றவை மத்திய அரசினால் விதிக்கப்பட்டு வசுலிக்கப்பட்டு நாடாளுமன்ற சட்டத்தின்படி மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் வரி.
இறக்குமதி வரி மற்றும் வருமான வரி போன்றவை மத்திய அரசினால் விதிக்கப்பட்டு வசுலிக்கப்பட்டு அவர்களாலேயே வைத்துக் கொள்ளப்படும் வரி.
வேளாண்மை வரி தவிர்த்து மற்ற வரிகள் மத்திய அரசினால் விதிக்கப்பட்டு ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கடையே பகிர்ந்தளிக்கப்படும் வரிகள்.
நிதி விஷயத்திலும் மத்திய அரசிற்கு அதிகமான அதிகாரமிருப்பது தெளிவாக விளங்குகிறது. முன்னேற்றத் திட்டங்களின் செலவுகளைச் சந்திப்பதற்காக மாநிலத்தின் நிதிகளின் மீதும் நன்கொடைகளின் மீதும் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முடியும். நிதி அவசரகாலத்தின் போது மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் வரிகளை நிறுத்தி வைப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுண்டு. மேலும் அவர் மாநிலத்தின் மற்ற செலவுகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும்.
மாநிலத்திட்டங்கள் அனைத்தும், மத்திய திட்டங்களை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு திட்டக்குழுவினால் அனுமதியளிக்கப்பட வேண்டும். மேலும் மாநிலங்கள் மத்திய அரசினால் பண உதவி அளிக்கப்படும் திட்டங்களை மேற்கொண்டு மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். திட்டக்குழு திட்ட முறைகளில் மத்திய அரசிற்கே அதிகமான அதிகாரங்கள் வழங்கியுள்ளது. எந்த விதமான முடிவெடுக்கும் அதிகாரமும் மாநிலங்களிடம் விடப்படவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களின் மீது ஒழுங்கற்ற முறையில் திணிக்கப்படுகின்றன.