Easy Tutorial
For Competitive Exams

TNPSC GROUP2-GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) வருவாய் ஆதாரங்கள் -இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி நிறுவன அமைப்பு:
  • இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு எப்ரல் முதல் நாள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் விதிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டதும் முதலில் அதன் மத்திய அலுவலகம் கொல்கத்தாவில் இயங்கியது. பின்னர் நிரந்தரமாக 1937லிருந்து அது மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த மத்திய அலுவலகத்தில் தான் வங்கியின் கவர்னர் அமர்ந்து கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.
  • தொடக்கத்தில் தனியாருக்குச்சொந்தமானதாக இருந்த போதிலும் 1949 இல் தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னரே, இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக இந்திய அரசுக்குச் சொந்தமானது.
  • இந்திய ரிசர்ப் வங்கிச் சட்டம், 1934; ரிசர்வ் வங்கியின் பணிகளை வரையறுக்கிறது.
பணிகள் :

1. பொதுவான மேற்பார்வையும் வங்கி விவகாரங்களை இயக்குதலும்.
2. நிதியியல் மேற்பார்வை
நிதியியல் மேற்பார்வைக் குழுமத்தின் வழிகாட்டுதல்படி இந்திய ரிசர்வ் வங்கி இப்பணியை மேற்கொள்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் மையக்குழுமத்தின் ஒரு குழுவாக இந்த நிதியியல் மேற்பார்வைக் குழுமம் 1994 நவம்பரில் துவக்கப்பட்டது.

நோக்கம்:

வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய மேற்பார்வையும் கண்காணிப்பும்.

3. பண அதிகாரி:

பணக்கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்தி மேற்பார்வை செய்கிறது. நோக்கம்: விலைகளின் நிலைத்தன்மையைப் பேணுதல்;உற்பத்திப்பிரிவுகளுக்குபோதுமானநிதியோட்டத்தைஉறுதிசெய்தல்

4. அந்நியச் செலாவணி மேலாளர்

அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999 ஐ நிர்வகிக்கிறது. நோக்கம்: பன்னாட்டு வணிகத்திற்கும் பணவழங்கலுக்கும் வழிகோலுதல், மற்றும் அந்நியச் செலாவணி சந்தையை இந்தியாவில் ஒழுங்காகவும் முறையாகவும் பாதுகாத்து வளர்த்தல். பணம் வழங்கு அதிகாரி


5. பணத்தாளினை வழங்குகிறது: மாற்றுகிறது; புழக்கத்துக்குத் தகுதியற்ற பணத்தாள்களையும் நாணயங்களையும் அழிக்கிறது.

நோக்கம்:

பொதுமக்களுக்குப் போதுமான அளவில் பணத்தாள்களையும் நாணயங்களையும் தரமிக்கதாக வழங்குதல். மேம்பாட்டுப் பணி

6. தேசிய நோக்கங்களுக்கு உதவும் வகையில் பரந்துபட்ட முன்னேற்றப் பணிகளை மேற்கொள்கிறது.

7. தொடர்புடைய பணிகள்

அரசின் வங்கி: மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வணிக வங்கிப் பணிகளைச் செய்கிறது; மேலும் அவர்களின் வங்கியாளராகவும் செயல்படுகிறது. வங்கிகளின் வங்கி: அனைத்து அட்டவணை வங்கிகளின் கணக்குகளையும் பராமரிக்கிறது.

Share with Friends