Easy Tutorial
For Competitive Exams

TNPSC GROUP2-GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) திட்டக்குழு, நிதிக்குழு மற்றும் நிதிஆயோக்

திட்டக்குழு, நிதிக்குழு மற்றும் நிதிஆயோக்

திட்டக்குழு
  • திட்டக்குழு என்பது தன்னாட்சி அமைப்பு , ஆலோசனை அமைப்பு இது மத்திய அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் தொடங்கப்பட்ட அரசியல் சட்டம் சாரா அமைப்பு . 1950 - மார்ச் 15 ஆம் நாள் திட்டக்குழு அமைக்கப்பட்டது .
  • இந்தக்குழு இந்தியாவின் எதிர்கால குறிக்கோள்களை ஐந்தாண்டுக்கு ஒருமுறை தீர்மானிக்கும் வகையில் விரிவான திட்டத்தை உருவாக்கும் .
  • இந்தியப் பிரதமர் திட்டக்குழுவின் தலைவராவார் . திட்டக்குழுவின் முதல் தலைவர் ஜவர்ஹலால் நேரு . துணைத்துலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் .
  • இவரே குழுவின் உண்மையான நிருவாகத் தலைவராவார் . அவரே ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கையை உருவாக்குவதற்கும் அதை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கும் பொறுப்புடையவராவார் . இவர் கேபினட்டால் நியமிக்கப்படுகிறார் .
  • ஆனால் இவர் கேபினட்டிலும் உறுப்பினர் இல்லை . அதன் கூட்டங்களில் வாக்குரிமை ஏதுமின்றி கலந்து கொள்ளலாம் . திட்டக் குழுவின் முதல் துணைத் தலைவா குல்சாரிலால் நந்தா . கடைசி துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா .
  • திட்ட அமைச்சரும் , நிதி அமைச்சரும் தம் பதவி வழி உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர் . மற்ற சில அமைச்சர்கள் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர் .
  • நாட்டின் வளங்களை மதிப்பீடு செய்தல் , திட்டங்களை உருவாக்குதல் , திட்டங்களின் முன்னுரிமைக்கு ஏற்ப வளங்களை பகிர்ந்தளிக்க தீர்மானித்தல் ஆகியன திட்டக் குழுவின் முக்கிய பணிகள் .
  • ஒவ்வொரு மாநிலமும் ஒரு மாநிலத் திட்டக்குழுவை கொண்டிருக்கும் . மாநில முதலமைச்சர் மாநிலத் திட்டக்குழுவின் தலைவராவார் .
நிதி ஆயோக்
  • ஜனவரி 1 , 2015 அன்று தொடங்கப்பட்டது தொடங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி.
  • மத்திய அரசு 64 ஆண்டுகளாக செயல் பாட்டில் இருந்து வந்த திட்டக்குழுவிற்கு நிதி ஆயோக் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது .
  • NITI என்பதன் பொருள் National Institute for Transforming India ,
  • இவ்வ மைப்பு செயல்பாட்டில் இருந்து வரும் திட்டக்குழுவினை மறுசீரமைப்பதற்கான முதற்படி ஆகும் .
அமைப்பு
  • தலைவர் - பிரதமர்
    ( பதவி வழி உறுப்பினர் )
  • ஆட்சி மன்றம் - அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் ! யூனியன் பிரதேச ஆளுநர்கள்.
  • பிராந்திய சபை - அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் யூனியன் பிரதேச ஆளுநர்கள்.
  • முழு நேர உறுப்பினர்கள்.
  • பகுதி நேர உறுப்பினர்கள்.
  • செயலகம் - தேவைப்பட்டால் அமைத்துக் கொள்ளலாம்.
  • முதல் துணை தலைவர் -அரவிந்த் பனகாரியா .
  • தற்போதைய துணைத்தலைவர் -ராஜீவ் குமார்
  • முதல் முதன்மை செயல் அலுவலர் -சிந்து ஸ்ரீ குல்லார்.
  • முதல் கூட்டம் நடைபெற்ற நாள் - 08 . 02 . 2015
நோக்கம்

தேசிய மேம்பாட்டிற்கான முன்னுரிமை அளித்தலில் ஒன்றுபட்ட தொலை நோக்கினை உருவாக்குதல் ஒருங்கிணைந்த கூட்டாட்சித் தத்துவத்தினை ஊக்குவித்தல் , கிராமப்புறங்கள் வரை அரசாங்கத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் சென்றடையும் அளவில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுத்தல் தொழில்நுட்ப மேம்பாட்டின் மீது அதிக கவனம் செலுத்துதல்.

முக்கியச் செயல்பாடுகள்
  • இந்த அமைப்பு அரசினுடைய சிந்தனைக் களஞ்சியமாக செயல்படும் . அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதிலும் மற்றும் அக்கொள்கைகளின் சிறப்பான செயற்பாட்டிற்காகவும் வழிவகை செய்யப்படும் .
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது கொள்கைகளை வடிவமைப்பதற்கு தேவைப்படும் அறிவுசார்ந்த மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கும் நிறுவனமாகும் .
  • புதிய கொள்கை முடிவுகளை செயலாக்கத்திற்கு கொண்டு வருவது , உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார வர்த்தகத் திட்டங்கள் அமைப்பது இதன் செயல்பாடாகும் ,
  • உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிறந்த ஆட்சி முறைகளை நாடு முழுவதும் செயல்படுத்துவது குறிப்பிட்ட பிரச்சினை சார்ந்த விஷயங்களுக்கு தீர்வளிப்பது இவ்வமைப்பின் முக்கிய அம்சமாகும்.
தேசிய வளர்ச்சி கவுன்சில் ( NDC )
  • திட்டக்குழு திட்ட வரைவை உண்டாக்குகிறது . அதை தேசிய வளர்ச்சி கவுன்சில் அங்கீகரிக்கிறது . தேசிய வளர்ச்சி கவுன்சில் 1952 ஆம் ஆண்ட ஆகஸ்டு 6 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது .
  • பிரதமர் தேசிய வளர்ச்சி கவுன்சிலின் அலுவல் சாரா தலைவராவார் . மத்திய கேபினட் அமைச்சர்கள் , மாநில முதல்வர்கள் , நிதியமைச்சர்கள் , துணை நிலை ஆளுநர்கள் , குடியரசு தலைவர் ஆட்சி நடக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள் ஆகியோர் தேசிய வளர்ச்சி கவுன்சிலின் உறுப்பினர்கள் .
  • திட்டக்குழுவினைப் போலவே , தேசிய வளர்ச்சிக் குழுவானது அரசியலமைப்பு அந்தஸ்து பெறாத அமைப்பு , பாராளுமன்ற சட்டம் மூலம் கொண்டுவரப்பட்ட அமைப்பு.
தேசிய வளர்ச்சிக் குழுவின் சிறப்புத் தன்மைகள்
  • ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பாராளுமன்றத்திற்கு அடுத்த நிலையில் தேசிய வளர்ச்சிக் குழு அதிகாரம் பெற்றுள்ளது .
  • எனினும் இது , திட்டக்குழுவிற்கு அறிவுரைகளை மட்டுமே வழங்க இயலும் . மேலும் இதன் பரிந்துரைகள் , திட்டக் குழுவின் முடிவுகளை கட்டுப்படுத்தாது .
  • தேசிய வளர்ச்சிக் குழுவானது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் தனது பரிந்துரைகளை வழங்குகிறது . வருடத்திற்கு குறைந்தது இருமுறையேனும் தேசிய வளர்ச்சிக் குழு கூடுகிறது .
நிதிக்குழு
  • அரசியலமைப்பு விதி 280 - ன் படி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த இரண்டு ஆண்டுக்குள் நிதிக்குழு அமைக்கப்பட வேண்டும் .
  • அவ்வாறே தொடரும் நிதிக்குழுவானது ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை குடியரசுத் தலைவரால் புதிதாக அமைக்கப்படும் .
  • நிதிக்குழு ஒர் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை உள்ளடக்கியது .
  • நிதிக்குழுவானது ஓர் அரசியலமைப்பு மற்றும் பகுதி நிதி அமைப்பாகும் ( Quasi - Judicial Body )
  • இக்குழு மத்திய , மாநில நிதி ஆதாரங்களை ஆராய்ந்து , தனது பரிந்துரைகளை வழங்கும் .
  • முதல் நிதிக்குழு தலைவர் - கே . சி . நியோகி
  • 14வது நிதிக்குழு தலைவர் - Y . V . ரெட்டி ( 2015 - 2020 ) .
  • 15வது நிதிக்குழு தலைவர் - NK . சிங் ( 2020 - 2025 ).
Share with Friends