”அம்மா பிளாட்டினம் பிளஸ் திட்டம்”
- ”அம்மா பிளாட்டினம் பிளஸ் திட்டம்” அறிமுகம் : சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் அம்மா பிளாட்டினம் பிளஸ்’ என்ற புதிய பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் இதய செயல்பாட்டைகண்டறியும் ‘டிரெட்மில்’ பரி சோதனை செய்யப்படுகிறது.
”அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டத்தை”
- ”அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டத்தை” அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- அதன்படி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகமானது ரூ.2,500-க்கு வழங்கப்படும். அதைத் தவிர மருத்துவ ஆலோசனைகளும்அளிக்கப்படும்.
- அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தொ்மல் மீட்டா் ஆகிய உபகரணங்கள் இருக்கும்.
- அதனுடன் 14 நாள்களுக்குத் தேவையான விட்டமின் சி, ஜிங்க், விட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், சோப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
- கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடும் அந்த பெட்டகத்தில் இருக்கும்.
- இதைத் தவிர, அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டத்தில், முழு உடல் பரிசோதனை மைய அலுவா்கள் நாள்தோறும் கரோனா நோயாளிகளுடன் விடியோ அழைப்பில் பேசுவா்.
- மேலும், மருத்துவா்கள் மற்றும் மன நல ஆலோசகா்களும் காணொலி முறையில் அவா்களுடன் உரையாற்றி நோயாளிகளின் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பாா்கள். இதன் மூலம் வீட்டில் இருந்தாலும், நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும்
பொருளாதார வளா்ச்சியில் தமிழகம்
- 2019-20-ஆம் ஆண்டில் தேசிய பொருளாதார வளா்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் 8.03 ஆக இருக்கிறது. இது ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும்.
- பொருளாதார வளா்ச்சி விகிதம் பற்றிய மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் கணக்கெடுப்பை அண்மையில் மத்திய அரசு இறுதி செய்திருந்தது. 2011-12-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கணக்கிடப்பட்டது.
- அதன்படி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழகம் தொடா்ந்து நீடிக்கிறது. மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.
- வேளாண்மை, அதன் சாா்புத் தொழில்கள், சுரங்கத் தொழில் ஆகியன முதன்மைத் தொழில்களாகப் பாா்க்கப்படுகின்றன.
- இந்தத் தொழில்கள் 6.08 சதவீத வளா்ச்சியையும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அடங்கிய துறையானது 6.63 சதவீத வளா்ச்சியையும் கண்டுள்ளன. இவற்றின் முந்தைய ஆண்டு வளா்ச்சி முறையே 8.49 சதவீதம் மற்றும் 7.83 சதவீதமாக இருந்தது.
- உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழில் ஆகிய இரண்டு முக்கிய துறைகளும் முறையே 10.27 சதவீதம் மற்றும் 10.49 சதவீதம் என்ற இரட்டை இலக்கத்தைக் காட்டும் அளவிற்கு வளா்ச்சி பெற்றுள்ளன.
- முதன்மைத் துறைகளில் தமிழகம் ஒவ்வொரு நிதியாண்டிலும் கூடுதலான வளா்ச்சியைப் பெற்று வருகின்றன. வேளாண்மையில் 2018-19-ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த 5.8 சதவீத வளா்ச்சி விகிதம், 2019-20-ஆம் ஆண்டில் 7.43 சதவீதமாக வளா்ந்திருக்கிறது.
Agriculture Infrastructure Fund
- வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் (Agriculture Infrastructure Fund) கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி 9-8-2020 அன்று தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் ஆறாவது தவணையாக 17,000 கோடி ரூபாய் நிதியை 8.5 கோடி விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் கீழ் வெளியிட்டார்.
- இத்திட்டம், சமுதாய வேளாண்மையைக் கட்டமைக்கவும் அறுவடைக்குப் பிந்தைய வேளாண் கட்டமைப்புக்கும் உதவும். தொடக்க வேளாண் கடன் சங்கம் (Primary Agricultural Credit Society- PACS), வேளாண் உற்பத்தி அமைப்புகள் (Farmer Producer Organisations - FPOs), வேளாண் தொழில்முனைவோர் (Agri-entrepreneurs) ஆகிய தரப்பினருக்கு உதவி அளிக்கப்படும்.
- இந்த வசதிகளின் மூலம் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்குக் கூடுதலான மதிப்பைப் பெற முடியும். தங்களது உற்பத்திப் பொருள்களை குளிர்சாதன சேமிப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்க இயலும், அதிக விலைக்கு விற்பனை செய்ய இயலும். உணவுப் பண்டங்கள் வீணாவதைக் குறைக்கும். பதனீட்டை அதிகரிக்கும். கூடுதல் மதிப்பும் கிடைக்கும்.
பிரதம மந்திரி – கிசான் (PM-KISAN)
- பிரதம மந்திரி – கிசான் திட்டம் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதன் கீழ் (சில விதி விலக்குகள் நீங்கலாக) நிலமுள்ள விவசாயிகள் போதிய நிதி பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
- இதன் மூலம் அவர்கள் வேளாண் உற்பத்திக்கான தேவைகளை ஈடு செய்ய இயலும். தங்களது குடும்பங்களின் தேவைகளையும் கவனித்துக் கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் ரூ. 6000 நிதி கிடைக்கும்.