அமெரிக்க-இந்தியா
- அமெரிக்க-இந்தியா ஸ்டிராடஜிக் ஃபார்ட்னர்ஷிப் மன்றத்தின் (US-India Strategic Partnership Forum -USISPF) தலைமைத்துவ விருதுகள் 2020 மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அடோஃப் (Adobe ) நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயென் (Shantanu Narayen) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல்டி கட்டணம் - ஃபேஸ்புக் & கூகுள்
- இணையதள தொழில்நுட்ப நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகியவை பிரசுரிக்கும் செய்திகளுக்கு அந்த செய்திகளை தயாரித்த செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் வழங்குவதற்கான சட்டத்தை உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா நாடு இயற்றவுள்ளது.
Bureau of Indian Standards (BIS)
- குழாய் குடிநீர் விநியோக முறைக்கான வரைவு தரத்தை இந்திய தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards (BIS)) தயாரித்துள்ளது . ‘குடிநீர் விநியோக தர மேலாண்மை அமைப்பு - குழாய் குடிநீர் விநியோக சேவைக்கான தேவைகள்’ (‘Drinking water supply quality management system — requirements for piped drinking water supply service’) என்று பெயரிடப்பட்ட இந்த வரைவானது, இந்திய தரக் குறியீடு 10500 (Indian Standard (IS) 10500) ஐ பூர்த்தி செய்வதை வலியுறுத்துவதுடன், 2024 ஆம் ஆண்டளவில் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதற்கான மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- Indian Standard (IS) 10500 தர எண் என்பது, ஆர்சனிக் போன்ற உலோகங்கள் மற்றும் நீரின் pH மதிப்பு, அதில் உள்ள மொத்தக் கரைந்த திடப்பொருள்கள் மற்றும் நிறம் மற்றும் வாசனை போன்ற பிற அளவுகள் உட்பட குடிநீரில் பல்வேறு பொருட்களின் ஏற்றுக்கொள்ளத்தக்க வரம்பை கோடிட்டுக் காட்டுகிறது.
மிகப்பெரிய யோகா மையம்
- ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள மந்தலையில் மிகப்பெரிய யோகா மையம் அமைய உள்ளது. இது தேசிய கட்டுமான கழகத்தால் (National Projects Construction Corporation (NPCC)) கட்டப்பட்டு 2021 ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த மையம் அமைப்பதற்காக ஆகும் செலவு ரூ. 9,782 லட்சம் என கூறப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் தீரேந்திர பிரம்மச்சாரியின் யோகா மையமான அபர்ணாவிற்கு பிரபலமானது. அதன் பாழடைந்த கட்டிடம் இன்னும் அங்கே உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராவின் யோகா ஆசிரியராக திரேந்திர பிரம்மச்சாரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மந்தலையில் பிரமிட் வடிவ மெகா அமைப்பு கட்டப்பட்டு வருகிறது. இது தவிர, சுற்றுலாப் பயணிகளுக்கான வீடுகள், ஹெலிபேட், டின்னிங் பிளாக் ஆகியவை வரவிருக்கும் சில திட்டங்களாகும்.
- மந்தலை, சுத் மகாதேவ் மற்றும் பட்னி டாப் ஆகியவற்றில் சுற்றுலா தலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி படி, யோகா மையம் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். சுத் மகாதேவில் ஒரு சிற்றுண்டி சாலை கட்டப்பட்டு வருகிறது.
நாயக்கர் கால கல்வெட்டு
- சக்கந்தியில் அரண்மனை சசிவர்ணம் அவரது தம்பி மலைராஜ் மற்று ராமநாதபுரம் மாரி ஆகியோர் சாய்ந்து மண் மூடிக்கிடந்த கல் ஒன்றில் எழுத்து இருப்பதைக் கண்டு அதை நட்டுவைத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு கள ஆய்வு செய்தபோது 464 ஆண்டு பழமையான 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பெற்றது.
- சக்கந்தியில் பிற்காலப் பாண்டியர்களின் சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்து போயிருக்கலாம். அதற்கான எச்சங்கள் காணக்கிடைக்கின்றன.
- சக்கந்தி கண்மாய்க்கரையில் நந்தி சிலையொன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. மேலும், சக்கந்தி ஊரினுள் அரண்மனை என்று அழைக்கபடுகிற இடத்தின் எதிரே உள்ள பொட்டலில் கோயில் இடிபாட்டில் மிச்சப்பட்ட முப்படைக் குமுதகத் துண்டுக் கல்வெட்டு வரிகளில் செழியத்தரைய மற்றும் இன்னாயினாருக்கு என வருகிறது.
- இதில் செழியத்தரைய என்பது பாண்டியர் கால அரசு அலுவலரைக் குறிப்பதாகவும் இன்னாயினாருக்கு என்பது கடவுள் பெயரைக் குறிப்பதாகவும்.
- இக்கல்வெட்டு இறையிலி தானம் வழங்கிய செய்தியைச் சொல்வதாகக் கொள்ளலாம். எழுத்தமைதி பதிமூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம். இப்பகுதியில் சிவன் கோயில் இருந்து அழிந்ததாக செவிவழிச் செய்திகளும் வழங்கப்படுகின்றன.