Pradhan Mantri Mudra Yojana
- ”முத்ரா கடன் திட்டத்தின்” (Pradhan Mantri Mudra Yojana (PMMY)) பெண் பயனாளிகளின் எண்ணிக்கையில் (31 மார்ச் 2020 வரையில்) , தமிழக பெண்கள் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2,3,4 மற்றும் 5 வது இடங்களை முறையே மேற்கு வங்காளம், கர்நாடகா, பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பெற்றுள்ளன. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் 2015-16 நிதியாண்டில் உருவாக்கப்பட்டது தான் இந்த . இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
- இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது.
- சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.
- கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.
- தருண்(TARUN) - இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.
முத்ரா திட்டத்தின் கடன் வகைகள் :
மின்-சஞ்சீவனி
- மின்-சஞ்சீவனி மூலம் தொலை மருத்துவ ஆலோசனை சேவைகளை டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியில் மத்திய அரசு 25.8.2020அன்று தொடங்கியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் இந்தச் சேவைகள் டெல்லி/தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள பயனாளிகளுக்குக் கிடைக்கும்.
- இந்த மின்-சேவைகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் கிடைக்கும்.சுகாதார அமைச்சகத்தின் ஏற்கனவே இருக்கும் மின்-சஞ்சீவனி தளத்தை CGHS-இன் தொலை-ஆலோசனை சேவைகள் பயன்படுத்துகின்றன.
- எளிதான பயன்பாட்டுக்காக பயனாளிகளின் அடையாள எண்ணுடன் இந்தத் தளம் இணைக்கப்பட்டுள்ளது.நோயாளிகளுக்கு நோயாளி அடையாள எண் மற்றும் அனுமதிச் சீட்டுத் தகவல்கள் குறுந்தகவல் சேவை மூலம் அனுப்பப்பட்டு, ஆன்லைன் வரிசையில் அவர்களது எண் குறித்துத் தகவல் அளிக்கப்படும். அவர்களது முறை வந்ததும், 'தற்போது அழைக்கவும்' பொத்தான் செயலாக்கப்படும்.
- அதைப் பயன்படுத்தி, பயனாளி காணொலி அழைப்பு மூலம் நிபுணரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
உலக சுகாதார அமைப்பு (WHO)
- உலக சுகாதார அமைப்பு (WHO) ஆப்பிரிக்காவை வைல்டு போலியோ (Wild polio) வைரஸ் இல்லாத கண்டமாக ஆகஸ்ட் 25, 2020 அன்று அறிவித்துள்ளது.
- போலியோ வைரஸ் இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Export Preparedness Index (EPI)
- ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (Export Preparedness Index (EPI) 2020-ஐ போட்டித்திறன் நிறுவனத்துடன் ( Institute of Competitiveness) இணைந்து நிதிஆயோக் (NITI Aayog ) 25-8-2020 அன்று வெளியிட்டது. ஏற்றுமதி தயார்நிலை மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளைப் பற்றிய முதல் அறிக்கையான இது, சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிதல், அரசுக் கொள்கைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்; மற்றும் வசதியளிக்கும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது ஆகும்.
- ஒட்டுமொத்தமாக, பெருவாரியான கடலோர மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களை முறையே பெற்றிருக்கின்றன.
- ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான வசதியை அளிக்கும் வலுவான காரணிகளை பிரதிபலிக்கும் விதமாக எட்டு கடலோர மாநிலங்களில் ஆறு முதல் பத்து இடங்களில் இருக்கின்றன.
- நிலப்பரப்பு மாநிலங்களைப் பொருத்தவரையில், ராஜஸ்தான் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் ஹரியானாவும் இருக்கின்றன.
- இமாலய மாநிலங்களில், உத்தரகாண்ட் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசமும் இருக்கின்றன. யூனியன் பிரதேசங்களில், தில்லி சிறந்து விளங்குகிறது, அதைத் தொடர்ந்து கோவா மற்றும் சண்டிகர் உள்ளன.
’தூய்மையே சேவை விருது’
- ’தூய்மையே சேவை விருது’ (Cleanliness is Service) எனப்படும் ஸ்வச்ச்தா ஹை சேவா 2019 விருதை (Swachhta Hi Seva 2019 award) நெய்வெலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (Neyveli Lignite Corporation India Ltd (NLCIL) )வென்றுள்ளது .
- இந்நிறுவனம் தனது வளாகத்தை பிளாஸ்டிக் கழிவு இல்லாத மற்றும் பசுமை வளாகமாக மாற்றியுள்ளதற்காக இந்த விருது அறிவிக்கப்படுகிறது.
உலக நீர் வாரம்
- உலக நீர் வாரம் (World Water Week ) 2020 - 24 - 28 ஆகஸ்டு 2020 | மையக்கருத்து (2020) : ‘நீர் மற்றும் காலநிலை மாற்றம்: செயல்பாடுகளை துரிதமாக்குதல்’ (‘Water and Climate change: Accelerating Action’)
Indian Space Research Organisation (ISRO)
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (Indian Space Research Organisation (ISRO)) விண்வெளி ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான புதுமை மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை ( Space Innovation Centre) ஒடிசாவிலுள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Veer Surendra Sai University of Technology (VSSUT)) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25-8-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
பவுலோமி கட்டக் போட்டிகளிலிருந்து ஓய்வு
- இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவுலோமி கட்டக் (Poulomi Ghatak) டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . 37 வயதான, பவுலோமி கட்டக் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவராவர்.