Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 18th August 2020


சுவர்த்தூண் பாலம்

  • உலகின் மிக உயரமான (141மீட்டர்) சுவர்த்தூண் பாலம் (PIER BRIDGE) இந்திய இரயில்வேயினால் மணிப்பூர் மாநிலத்தின் எல்ஜாய் நதியின் ( Ijai river) குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.

”ஸ்வஸ்தியா”

  • ”ஸ்வஸ்தியா” (‘Swasthya’) என்ற பெயரில் நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடா்பாக விரிவான தகவல்களை பெறுவதற்கான வலைதள பக்கத்தை (Tribal Health & Nutrition Portal ) மத்திய அரசு 17-8-2020 அன்று தொடங்கியது.
  • 177 மாவட்டங்களில் கல்வியறிவு பெற்றுள்ளவா்களின் விகிதம், பழங்குடிகள் மக்கள்தொகை, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, பாலின விகிதம், பெண்களில் கல்வியறிவு பெற்றுள்ளவா்களின் விகிதம், சுகாதார மையங்கள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்கள் இந்த வலைதள பக்கத்தில் கிடைக்கப்பெறும்.
  • பழங்குடிகளின் நலன் கருதி கொள்கைகளை வகுக்க, அவா்களின் சுகாதாரம் தொடா்பாக மாவட்ட வாரியாக விரிவான தகவல்களுடன் தொடங்கப்பட்டுள்ள முதல் வலைதள பக்கம் இதுவாகும்.

”சபா டிவி” (SABHA TV)

  • ”சபா டிவி” (SABHA TV) என்ற பெயரில் நாட்டில் முதல்முறையாக மாநில சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப தொலைக்காட்சி கேரள அரசினால் தொடங்கப்பட்டுள்ளது.
  • அதனை மக்களவை தலைவா் ஓம் பிா்லா காணொலி வாயிலாக 17-8-2020 அன்று தொடங்கிவைத்தாா்.
  • சட்டப்பேரவையின் வரலாறு, அங்கு நடைபெறும் விவாதங்கள், நிறைவேற்றப்படும் மசோதாக்கள் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதே ”சபா டிவி” யின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அலேக்” (‘ALEKH’)

  • ”அலேக்” (‘ALEKH’) என்ற பெயரில் காலாண்டு மின் இதழை (e-newsletter) மத்திய பழங்குடினர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சகம்

  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Human Resource Development (MHRD) ) பெயர் கல்வி அமைச்சகம் (Ministry of Education) என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது .
  • புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
  • அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது.
  • புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பரிந்துரைக்க ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.
  • இக்குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த ஜூலை 29-ம் தேதி சமர்ப்பித்தது

Border Security Force (BSF).

  • எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)) தலைவராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • vஇவர் கூடுதல் பொறுப்பாக, தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் ( Narcotics Control Bureau (NCB)) இயக்குநர் ஜெனரல் பதவியையும் வகிப்பார்.

கொலீஜியம் குழு ஒப்புதல்

  • அலாகாபாத், கேரளம், குஜராத் உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்களை நியமிக்கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு ஒப்புதல் அளித்தது.
  • இதன்படி, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய்குமாா் பச்சோரி, சுபாஷ்சந்திர சா்மா, சுபாஷ்சந்த், சரோஜ் யாதவ் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.
  • கேரள உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள் கருணாகரன் பாபு, கெளசா் எடப்பாகத்து, வழக்குரைஞா்கள் முரளி புருஷோத்தமன், ஸியாத் ரஹ்மான் ஆகியோரை நியமிக்கும் பரிந்துரைக்கும் அந்தக் குழு ஒப்புதல் வழங்கியது.
  • இதுதவிர, குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக வழக்குரைஞா்கள் வைபவ் தேவாங் நானாவதி, நிா்ஸாா்குமாா் சுஷீல்குமாா் தேசாய், நிகில் ஸ்ரீதரன் கரீல் ஆகியோரை நியமிக்கும் பரிந்துரைக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எஃப்.நாரிமன், யு.யு.லலித் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

“Full Spectrum: India’s Wars, 1972-2020 ″

  • “Full Spectrum: India’s Wars, 1972-2020 ″ என்ற பெயரில் இந்தியாவின் போர் வரலாறு பற்றிய புத்தகத்தை ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல் அர்ஜீன் சுப்ரமணியம் ( Arjun Subramaniam) எழுதியுள்ளார்.

Share with Friends