K.V. Kamath stressed loans committee
- கே. வி. காமத் அழுத்தக் கடன் கமிட்டி ( K.V. Kamath stressed loans committee ) : COVID-19 தொடர்பான அழுத்தக் கடன்களைத் (stressed loans) தீர்ப்பதற்கான விதிமுறைகள் குறித்த பரிந்துரைகளை செய்ய கே. வி. காமத் தலைமையிலான குழுவை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI) ) அமைத்துள்ளது.
“கிஷான் இரயில் / ‘விவசாய ரயில்’”
- இந்தியாவின் முதல் “கிஷான் இரயில் / ‘விவசாய ரயில்’” ( Kisan Rail ) சேவை மகாராஷ்டிராவின் தேவலாலியில் (Devlali ) இருந்து பீகாரின் தனபூர் (Danapur) ரயில் நிலையத்திற்கு 7-8-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
- மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய வேளாண் மற்றும் விவஷாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த இந்த “கிஷான் இரயிலிலானது” மாதுளை, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும், குடைமிளகாய், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் மற்றும் எளிதில் அழுகும் வேளாண் பொருட்களையும், காய்கறிகள், பழங்களையும் விரைவாகச் சந்தைக்குக் குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்ல கிசான் ரயில் உதவும்.
- இந்த, இந்திய ரயில்வேயின் முதல் பல்பொருள் வேளாண் பார்சல் சர்வீஸ் ரயில் வாரம் ஒரு முறை இயங்கும்.
“சுனாமி தயார்நிலை”
- இந்தியாவின் முதல் “சுனாமி தயார்நிலை” (“Tsunami ready”) கிராமங்களாக ஒடிஷா மாநிலத்தின் , வெங்கட்ரைபூர் (Venkatraipur ) மற்றும் நோலியாசாஹி (Noliasahi) எனும் இரு கிராமங்களும் 6-8-2020 அன்று யுனெஸ்கோவின் (United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO)) அரசுகளுக்கிடையேயான பெருங்கடல் குழு ( Intergovernmental Oceanographic Commission (IOC) ) வினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
- இதன் மூலம், “சுனாமி தயார்” என்ற அந்தஸ்தை அடைந்த முதல் இந்திய மாநிலமாக ஒடிஷாவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அந்நிலையை எட்டிய முதல் நாடாக இந்தியாவும் உருவாகியுள்ளன.
"கலாசிஸ் முறை" ஒழிப்பு
- ஆங்கிலேயர் காலத்திலிருந்து ரயில்வே துறையில் பின்பற்றப்பட்டு வந்த கலாசிஸ் முறை அதாவது பங்களா பியூன் இனிமேல் நியமிக்கப்படமாட்டார்கள் என்று ரயில்வே துறை அதிரடியாக முடிவு செய்து 6-8-2020 அன்று உத்தரவிட்டுள்ளது.
- கலாசிஸ் அல்லது பங்களா பியூன் எனப்படுவோர் ரயில்வே உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலைபார்ப்பதற்காக நியமிக்கப்படுவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ராஷ்ட்ரிய ஸ்வச்சாட்டா கேந்திரா”
- “ராஷ்ட்ரிய ஸ்வச்சாட்டா கேந்திரா” (Rashtriya Swachhata Kendra) என்ற பெயரிலான நிறுவனத்தை பிரதமர் மோடி அவர்கள் 8-8-2020 அன்று புது தில்லியில் தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய நடத்தை மாற்ற பிரச்சாரமான ”தூய்மை இந்தியா திட்டத்தின்” வெற்றிகரமான பயணத்தில் ஆர்.எஸ்.கே தகவல், விழிப்புணர்வு மற்றும் கல்வியை இந்நிறுவனம் வழங்கும்.
- காந்திஜியின் சம்பரன் சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் ராஷ்டிரிய சுவாச்சா கேந்திரா முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் பிரதமரால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
- இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ( ICC Men's T20 World Cup 2021) திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், நிகழாண்டு நடைபெறவிருந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் என்றும் சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) அறிவித்துள்ளது.