Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 14th August 2020


”ஆர்ரோவ்-2”

  • ”ஆர்ரோவ்-2” (Arrow-2 ) என்ற பெயரில் பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பை ஏவுகணையை இஸ்ரேல் நாடு வெற்றிகரமாக சோதித்துள்ளது.

”நிஷான்-ஏ-பாகிஸ்தான்”

  • காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் சையத் அலி ஷா கிலானிக்கு(90), பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் உயரிய விருதான”நிஷான்-ஏ-பாகிஸ்தான்” விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

‘கிரேட்டர் மாலே கனெக்ட்டிவிட்டி புராஜெக்ட்’

  • மாலத்தீவில் ‘கிரேட்டர் மாலே கனெக்ட்டிவிட்டி புராஜெக்ட்’ என்ற பெயரிலான மிகப்பெரிய பாலம் மற்றும் 3 தீவுகளை இணைக்கும் திட்டத்திற்கு ரூ.3,745 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் 6.7 கி.மீ. தூரத்துக்கு பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
  • இத்திட்டத்தால் வில்லின்கிலி, கலிபஹு, திலபுஷி ஆகிய குட்டித் தீவுகள் மாலேவுடன் இணைக்கப்படும். இவற்றில் கலிபஹு தீவில் உள்ள துறைமுகத்துடன் மாலே இணைக்கப்படுவது மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மனிதாபிமான நிவாரண உதவி - இந்தியா

  • லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் 4-8-2020 அன்று நடைபெற்ற வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா 58 டன் அவசர மனிதாபிமான நிவாரண உதவிகளை விமானப்படை விமானத்தில் லெபனானுக்கு அனுப்பியுள்ளது.

இந்தியா & நைஜீரியா

  • இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கிடையே விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 13-8-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.

”அம்ருட்” (AMRUT)

  • ”அம்ருட்” (AMRUT) எனப்படும் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT) ) திட்டத்தை செயல்படுத்துவதில் ஒடிசா மாநிலம் முதலிடத்தை தக்க வைத்துத்துள்ளது.
  • மத்திய வீட்டுவசதி மற்றூம் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவரிசையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே சண்டிகர் மற்றும் தெலுங்கானா அரசுகள் பெற்றுள்ளன.
  • அம்ருத் (AMRUT) என அழைக்கப்படும் நகர மேம்பாட்டுத் திட்டத்தை (Atal Mission for Rejuvenation and Urban Transformation) 25.06.2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ், குடிநீர் சப்ளை, மழை நீர் வடிகால்வாய் வசதி, பாதாள சாக்கடை வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து வசதி, ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது.
  • திட்ட மொத்த மதிப்பீட்டில், 50 சதவீதத்தை, மத்திய அரசு வழங்கும்; மாநில அரசு, 50 சதவீதம் வழங்கும்.
  • தமிழகத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 12 மாநகராட்சிகள்; அம்ருட் திட்டத்தின் கீழ், 20 நகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

  • இந்தியாவில் நீண்டாக காலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தையும், காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்டகாலம் காலம் பிரதமராக இருந்தவர்களில் முதலிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
  • மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமே நீண்டகாலம் காங்கிரஸ் அல்லாத பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார்.
  • வாஜ்பாய் 2,272 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார், அவரின் சாதனையை பிரதமர் மோடி 13-8-2020 அன்று முறியடித்தார்.

புவியியல் குறியீடு

  • கோவாவின் ஹார்மல் மிளகாய் (Harmal Chillies) ,மொய்ரா வாழைப்பழங்கள் ( Moira bananas) மற்றும் காஜே ( Khaje ) பாரம்பரிய இனிப்பு ஆகியவற்றிற்கு புவியியல் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

”சர்தாக்”

  • ”சர்தாக்” (Indian Coast Guard Ship ‘Sarthak’) என்ற பெயரில் இந்திய கடலோர காவல்படைக்கான புதிய ரோந்து கப்பல் (Offshore Patrol Vessel (OPV) ) கோவாவில் நாட்டிற்கு 13-8-2020 அன்று அற்பணிக்கப்பட்டுள்ளது.

Naval Innovation and Indigenization Organization (NIIO)

  • ” கடற்படை கண்டுபிடிப்பு மற்றும் சுதேசமயமாக்கல் நிறுவனம்” (Naval Innovation and Indigenization Organization (NIIO)) என்னும் புதிய அமைப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் 14-8-2020 அன்று தொடங்கி வைத்தார்.

‘கர்மா சாதி பிரகல்பா’

  • ‘கர்மா சாதி பிரகல்பா’ (‘Karma Sathi Prakalpa’) எனும் பெயரில் 1 லட்சம் வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கான கடன் மற்றும் மானியங்கள் வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

Atal Bihari Vajpayee Medical University (ABVMU)

  • முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ரூ. 200 கோடி மதிப்பில் மருத்துவ பல்கலைக்கழகம் (Atal Bihari Vajpayee Medical University (ABVMU)) உத்தரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

Share with Friends