ஐசிசி
- சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி) 'ஹால் ஆப் பேம்' என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து கவுரவிக்கிறது.
- தற்போது இந்த பட்டியலில் புதிதாக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பரிக்க அணி சார்பில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,289 ரன்னும், ஒரு நாள் போட்டியில் 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல ரவுண்டராக விளங்கினார்.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜாக் காலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ்
- போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள லஸ் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் ஜெர்மனியின் பண்டெஸ்லிகா சாம்பியன் பேயர்ன் மியூனிக், பிரான்சின் லீக் ஒன் சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிகள் மோதின.
- யுஇஎப்ஏ வரலாற்றில் முதல்முறையாக பைனலுக்கு முன்னேறிய பிஎஸ்ஜி அணி, 5 முறை சாம்பியனும் 11வது முறையாக பைனலில் விளையாடும் பேயர்ன் மியூனிக்கின் சவாலை எதிர்கொண்டது. பெரும்பாலான நேரம் பந்து பேயர்ன் வீரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை.
- விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மியூனிக் வெற்றிப் பெற்றது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத அணி, தொடர்ந்து 11 போட்டிகளில் வென்ற அணி என்ற பெருமையுடன் பேயர்ன் அணி 6வது முறையாக கோப்பையையும் கைப்பற்றியது.
- ஆட்ட நாயகனாக கிங்ஸ்லி தேர்வு செய்யப்பட்டார். அரையிறுதியில் விளையாடாத கிங்ஸ்லி காமன், பைனலில் களமிறங்கி வெற்றி கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் ஏற்கனவே பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி இருக்கிறார்.
ஜீவன ரக்ஷா பதக் விருது
- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள வெள்ளையன் ஏரியில் குளிக்க சென்ற 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர்.
- அப்போது, அவ்வழியாக சென்ற ஸ்ரீதர் 6 பேரையும் காப்பாற்றினார். இவ்வீர, தீர செயலுக்காக தமிழக அரசு 2019ம் ஆண்டுக்கான 'ஜீவன ரக்ஷா பதக்' என்ற விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
- இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். எனவே தமிழக முதல்வர் ஸ்ரீதருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கவுரவித்தார். ஸ்ரீதர், 2019ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது, தமிழக அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோப் கார் வழித்தடம்
- அசாமின் மத்திய கவுகாத்தி நகரில் இருந்து வடக்கு கவுகாத்திக்கு செல்வதற்கு மக்கள் பிரம்மபுத்திரா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இதற்கு படகை பயன்படுத்தினர். ஆனால் பருவமழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தடை ஏற்பட்டது.
- இதையடுத்து ஆற்றின் குறுக்கே ரோப் வழித்தடம் அமைக்க 2006ல் ரூ. 28 கோடி மதிப்பீட்டில் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கியது. 2009 டிசம்பரில் பணி தொடங்கியது. இடையே ஒரு தீவு உள்ளதால் 2011ல் இதற்கு தொல்லியல் துறை எதிர்ப்பு தெரிவித்தது.பின் அதன் அனுமதி பெற்று 2017ல் மீண்டும் தொடங்கி முடிக்கப் பட்டது.
- மொத்த செலவு ரூ. 56 கோடி.1.8 கி.மீ. துாரத்துக்கு அமைக்கப்பட்ட ரோப்கார் வழித் தடத்தை மாநில பொதுப்பணி துறை அமைச்சர் பிஸ்வா சர்மா வளர்ச்சி துறை அமைச்சர் சித்தார்த்தா பட்டாச்சார்யா எம்.பி. குயின் ஓஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.இதன் மூலம் ஆற்றை 8 நிமிடங்களில் கடக்கலாம்.
- ஒவ்வொரு ரோப் காரிலும் 30 பயணிகள் 2 ஆப்பரேட்டர்கள் அமரலாம். ஒரு மணி நேரத்துக்கு 250 பயணிகள் ஆற்றைக் கடக்கலாம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒரு ரோப் காரில் 15 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு வழித்தடத்துக்கு ரூ. 60 இரு வழித்தடத்துக்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணிப்புகள் 2011- 2036
- “இந்தியா மற்றும் மாநிலங்களின் மக்கள் தொகை கணிப்புகள் 2011- 2036” (Population projections for India and States 2011- 2036) : சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மக்கள் தொகை தொடர்பான தேசிய ஆணையம்(National Commission on Population), “இந்தியா மற்றும் மாநிலங்களுக்கும் மக்கள் தொகை கணிப்புகள் 2011- 2036” என்ற தலைப்பில் மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
- இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு,
- இந்தியா மற்றும் மாநிலங்களுக்கான மக்கள் தொகை கணிப்புகள் 2011- 2036:
- பாலின விகிதம் 2011 இல் 943 ஆக இருந்தது 2036 இல் 957 ஆக அதிகரிக்கும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.
- 2011 உடன் ஒப்பிடும்போது, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தவிர 18 மாநிலங்களில் பாலின விகிதம் 2036 க்குள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2036 ஆம் ஆண்டில், 899 என்ற மிகக் குறைந்த பாலின விகிதம் புது தில்லியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து குஜராத்தில் 900 மற்றும் ஹரியானாவில் 908 இருக்கும்.
- குழந்தைகள் இறப்பு விகிதம் 2010 இல் 46 ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது, இது 2031-2035 ஆம் ஆண்டின் இறுதியில் 30 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவில் அதிக குழந்தைகள் இறப்பு விகிதம் மத்தியப் பிரதேசத்திலும் ( 58,) அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் (57) காணப்படுகிறது. இது 2031-35 ஆம் ஆண்டில் முறையே 37 மற்றும் 38 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2031-35 காலப்பகுதியில், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஒடிசா, சத்தீஸ்கர், மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 30-40 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கேரளாவில் 2031-35 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 9 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில், மிகக்குறைந்த குழந்தைகள் இறப்பு விகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 2011-15ல் 22 ல் இருந்து 2031-35 காலப்பகுதியில் 16 ஆக குறையும்.
- மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate - TFR) 2011-2015 ஆம் ஆண்டில் இருந்த 2.34 லிருந்து 2031- 35 ஆம் ஆண்டில் 1.73 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கருவுறுதல் வீதம் குறைந்து வருவது இந்தியாவின் மக்கள்தொகையின் வயது புள்ளிவிவரங்களை மாற்றி, 2011 இல் 24.9 ஆக இருந்த நடுத்தர வயதை 2036 இல் 34.5 ஆக உயர்த்தும்.
- பீகார் மற்றும் உ.பி. ஆகியவை முறையே 3.5 மற்றும் 3.7 உடன் அதிக மொத்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளன, இது இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகித விட அதிகமாக உள்ளது (2.5).
- இந்தியாவின் மக்கள் தொகை 25 ஆண்டுகளில் 25.7% ஆக ஆண்டுக்கு 1% வீதத்தில் அதிகரிக்கும் என்று அறிக்கை கூறுகிறது, அதாவது 2011-36 ஆம் ஆண்டில் 121.1 கோடியிலிருந்து 151.8 கோடியாக உயரவுள்ளது.
- மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 368 முதல் 463 நபர்களாக அதிகரிக்கும்.
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.21 பில்லியனாக இருந்தது, இது 2036 ஆம் ஆண்டில் 311 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- i.இளையோர் மக்கள் தொகை (15-24 ஆண்டுகள்) 2011 ல் 23.3 கோடியிலிருந்து 2021 இல் 25.2 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் தொடர்ந்து 2036 இல் 22.7 கோடியாக குறையும்.
- ii. மொத்த மக்கள்தொகைக்கு இளைஞர் மக்கள் தொகை விகிதம் 2036 இல் 14.9% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா சீனாவை முந்திக்கொண்டு 2031 ஆம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று அறிக்கை கூறுகிறது. மேலும், 2021-2031 ஆம் ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8.4% குறையும்.
- 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 31.8% ஆக இருந்தது, இது 2036 ஆம் ஆண்டில் 38.2% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2036 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகை வளர்ச்சியில் 73% பங்களிக்கும்.
- 2011 இல் 98% நகர்ப்புற மக்கள்தொகை கொண்ட டெல்லி 2036 ஆம் ஆண்டில் 100% நகர்ப்புறமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகியவை 2036 க்குள் 50% க்கும் அதிகமான நகர்ப்புற மக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆண்களுக்கு ஆயுட்காலம் 66 முதல் 69 ஆக அதிகரிக்கும் என்றும் பெண்களுக்கு இது 71 முதல் 74 ஆக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- 2036 க்குள் பெண்களின் ஆயுட்காலம் 80 க்கும் ஆண்களுக்கு 74 க்கும் மேலான ஒரே இந்திய மாநிலமாக கேரளா இருக்கும்.
- வடகிழக்கு மாநிலங்களில் 2036 க்குள் பெண்களுக்கு 77 மற்றும் ஆண்களுக்கு 73 ஆயுட்காலம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பாலின விகிதம் (Sex ratio) :
குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) :
கருவுறுதல் வீதம் (Fertility Rate ) :
இந்தியாவின் மக்கள் தொகை (Population of India):
இளையோர் மக்கள் தொகை (Youth Population) :
மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் சரிவு:
நகர மக்கள் தொகை (Urban Population) :
ஆயுள் எதிர்பார்ப்பு (Life Expectancy) :