Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 6th August 2020


”பைடு சர்ச்”

  • ”பைடு சர்ச்” (Baidu Search) எனப்படும் சீனாவின் மிகவும் புகழ்பெற்ற இணைய தேடல் இயந்திரத்திற்கு (Baidu Search Engine) இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது சீனாவின் கூகுள் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Institute of Management (IIM) Sirmaur

  • இமாச்சல பிரதேசத்தில் அமையவுள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்) சிர்மார் (Institute of Management (IIM) Sirmaur ) -க்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் அவர்கள் 4-8-2020 அன்று அடிக்கல் நாட்டினார்.

'வித்யார்த்தி விஜியன் மந்தன் 2020-21’

  • 'வித்யார்த்தி விஜியன் மந்தன் 2020-21’ (Vidyarthi Vigyan Manthan 2020-21) எனும் பெயரில் , 6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடையே அறிவியலை பிரபலப்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

Leopard Conservation Centre

  • இந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையம் (leopard conservation centre) உத்தரகாண்ட் மாநில அரசினால் அம்மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்திலுள்ள லங்கா (lanka) என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ளது.

Mobile Infection Testing and Reporting (MITR) lab

  • ”Mobile Infection Testing and Reporting (MITR) lab” என்ற பெயரில் இந்தியாவின் முதல் நடமாடும் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகத்தை (RT-PCR lab) கர்நாடக மாநில அரசு பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த ஆய்வகத்தை பெங்களூவின் இந்திய அறிவியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கோவிட் -19 நோய் பரிசோதனை மட்டுமல்லாது HCV, H1N1, TB, HIV, HPV போன்ற நோய்களை சோதிக்கவும் இந்த நடமாடும் சோதனை மையத்தைப் பயன்படுத்தலாம்.

"ஜைகோவ்-டி தடுப்பூசி" (ZyCoV-D)

  • "ஜைகோவ்-டி தடுப்பூசி" (ZyCoV-D) என்ற பெயரில் உள்நாட்டில் தயாரான பிளாஸ்மித் டி.என்.ஏ. அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசிக்கு 2-ம் கட்ட சோதனை 6-8-2020 அன்று தொடங்கியுள்ளது. இதனை ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா ஹெல்த்கேர் (Zydus Cadila Healthcare Ltd) நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்திய-ஐ.நா

  • கரோனா பாதிப்பால் உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டிருக்கும் நிலையில், வளரும் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்திய-ஐ.நா. வளா்ச்சி கூட்டு நிதியத்துக்கு (India-UN Development Partnership Fund) இந்தியா ரூ.115.95 கோடி பங்களிப்பு செய்துள்ளது.ரூ.45 கோடி இதில் அங்கம் வகிக்கும் அனைத்து வளரும் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்காகவும், ரூ.70.95 கோடி காமன்வெல்த் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள்

Share with Friends