Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 13th August 2020


சிறந்த புலனாய்வு பணிக்கான விருது 2020

  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படும் சிறந்த புலனாய்வு பணிக்கான விருது 2020ல் தமிழக காவல்துறையை சேர்ந்த 6 பேர் இடம்பெற்று உள்ளனர்.
  • அவர்களின் பெயர்கள் மற்றும் விருது பெற்ற போது பணிபுரிந்த காவல்நிலையங்களின் விவரம் வருமாறு:-
  • ஜான்சிராணி - இவர், ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி போலீஸ் நிலையத்தில் மகளிர் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.
  • பொன்னம்மாள் - இவர், நீலகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் இன்ஸ்பெக்டராக பணி செய்கிறார்.
  • சந்திரகலா - இவர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ளார்.
  • வினோத்குமார் - இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.
  • கலா - இவர், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

Swachh Bharat Mission(SBM)

  • தூய்மை இந்தியா இயக்க அகாடமியை (Swachh Bharat Mission(SBM) Academy) ஜல் சக்தி துறைக்கான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (Gajendra Singh Shekhawat) புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • கண்டகி முக்தபாரத் (‘GandagiMukt Bharat’) என்ற ஒரு வார கால இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து இந்த எஸ் பி எம் அகாடமியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • ஸ்வச்சாக்கிரஹிக்கள் இதர களப்பணியாளர்கள், அனைத்து பங்குதாரர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும், நடவடிக்கை மாறுதல்களைத் தொடர்வதற்காகவும் அலைபேசி இணைய வழி கற்றல் மூலம் இந்த வகுப்புகள் நடைபெறும். ஓ டி எஃப் பிளஸ் பற்றி பாடங்கள் நடைபெறும். எஸ் பி எம் (ஜி) இரண்டாம் கட்டக் குறிக்கோள்களை அடைவதற்கு இவை முக்கிய பங்காற்றும்.

ரூ.1.3 கோடி இழப்பீடு - கேரள அரசு

  • நாட்டின் பாதுகாப்பு தொடா்பான விவரங்கள் கசிந்த விவகாரத்தில் தவறாகக் கைது செய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்கியது.

பேட்டரிகள் பொருத்தாத மின்சார வாகனங்கள்

  • மின்கலன்கள் (பேட்டரிகள்) பொருத்தாத மின்சார வாகனங்களை விற்பனை செய்வதற்கும், அவற்றைப் பதிவு செய்வதற்கும் அனுமதியளிக்கபடுவதாக மத்திய அரசு 12-8-2020 அன்று அறிவித்துள்ளது .
  • மின்சார வாகனத்துக்கான மொத்த விலையில் 30 முதல் 40 சதவீதம் அளவு மின்கலன்களுக்கானதாக உள்ளது.
  • எனவே, தற்போதைய அறிவிப்பினால் மின்சார வாகனங்களின் விலை குறையும் என்பதுடன், நாடு முழுவதும் அந்த வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் தெரிகிறது.
  • இதன் மூலம், மின்கலன்களை பொருத்தாமல் மின்சார வாகனங்களை விற்பனை செய்வதற்கும், அதைப் பதிவு செய்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
  • சம்பந்தப்பட்ட வாகனத்தை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மின்கலன்களை தனியே வழங்கலாம்.மின்சார வாகன பதிவின்போது அதில் பொருத்தப்படும் மின்கலன்கள் குறித்த எந்தவொரு தகவலையும் குறிப்பிட வேண்டியதில்லை.

"ராமன்" (“Raman”)

  • இந்தியாவின் முதல் தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace), தனது முதல் மேல் நிலை ராக்கெட் எஞ்சின் (Upper Stage Rocket Engine) "ராமன்" (“Raman”) ஐ வெற்றிகரமாக 8-8-2020 அன்று பரிசோதித்துள்ளது .
  • இந்த ராக்கெட் எஞ்சினுக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சர் சி.வி.ராமனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

COVID-19 தடுப்பூசி

  • COVID-19 தடுப்பூசி கொள்முதல், நிர்வாகத்திற்கான தேசிய அளவிலான வல்லுநர் குழுவை (National Expert Group on Vaccine Administration) நிதி அயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் (Dr VK Paul ) தலைமையில் 11-8-2020 மத்திய அரசு அமைத்துள்ளது.
  • அனைத்து மாநில அரசுகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல், தளவாடங்கள், கொள்முதலுக்கான நெறிமுறைகளை வகுத்தல் மற்றும் COVID-19 தடுப்பூசியை நிர்வகித்தல் போன்ற நடவடிக்கைகளில் இந்த குழு ஈடுபடும்.

இந்தியா - இஸ்ரேல்

  • COVID 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கூட்டுறவு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட , ‘அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் உயர்நிலை உபகரணங்களை’ புதுடெல்லி எய்ம்ஸ் (AIIMS, New Delhi) மருத்துவமனையுடன் பகிர்ந்துள்ளது.

அமெரிக்காவைத் தாண்டிய சீனா

  • உலகின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்காவை சீனா தாண்டியுள்ளது .
  • பார்ச்சூன் இதழ் ஆகஸ்டு 10ஆம் நாள் வெளியிட்ட உலகத்தின் மிகப் பெரிய 500 தொழில் நிறுவனங்களின் பெயர் பட்டியலில், 133 சீனத் தொழில் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
  • அவற்றில் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்க்கப்பட்ட சீனப் பெருநிலப்பகுதியின் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 124 ஆகும். அமெரிக்காவின் 121 தொழில் நிறுவனங்கள் இப்பட்டியலில் உள்ளன.

ICRIER

  • சர்வதேச பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் ( Indian Council for Research on International Economic Relations(ICRIER)) புதிய தலைவராக பிரமோத் பாசின் (Pramod Bhasin) நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச உடல் உறுப்பு தான தினம்

  • சர்வதேச உடல் உறுப்பு தான தினம் (World Organ Donation Day) - ஆகஸ்டு 13
  • உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் ((TRANSTAN) என்ற முன்னோடி அமைப்பு 12.12.2014 அன்று உருவாக்கப்பட்டது.

Share with Friends