Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 21st August 2020


Swachh Survekshan 2020 Report

  • தூய்மையான நகரங்களின் கணக்கெடுப்பு 2020 அறிக்கையில் ( Swachh Survekshan 2020 Report) தமிழ்நாடு 10 வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரங்களின் பட்டியலில்,கோயம்பத்தூர் 40 வது இடத்தையும், மதுரை 42 வது இடத்தையும், சென்னை நகரம் 45-வது இடத்தைப் பெற்றுள்ளன.
  • 1 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் திருச்சி 102 வது இடத்தையும், திருநெல்வேலி 159 வது இடத்தையும், சேலம் 173 வது இடத்தையும் திருப்பூர் 223 வது இடத்தையும், வேலூர் 272 வது இடத்தையும் மற்றும் காஞ்சிபுரம் 280 வது இடத்தையும் பெற்றுள்ளன.

‘டிஜிட்டல் வாழ்க்கைத்தர குறியீடு 2020’

  • ‘டிஜிட்டல் வாழ்க்கைத்தர குறியீடு 2020’ ( “Digital Quality of Life (DQL) Index 2020”) ல் இந்தியா 57 வது இடத்தைப் பெற்றுள்ளது. SurfShark எனப்படும் இணைய பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே டென்மார்க், ஸ்வீடன் மற்றும் கனடா நாடுகள் பெற்றுள்ளன.
  • மேலும் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் (Internet Affordability) இந்தியா 9 வது இடத்தையும், இணைய தள தரத்தில் (Internet Quality) 78 வது இடத்தையும், மின் உட்கட்டமைப்பில் (Electronic (E)-infrastructure) 79 வது இடத்தையும், ’இணைய பாதுகாப்பில்’ (E-security) 57 வது இடத்தையும், மின்னாளுமையில் (E-Government) 15 வது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனம்

  • இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனத்தின் (NPCI) சர்வதேச பணப்பரிமாற்ற நிறுவனம் (NPCI International Payments Limited (NIPL)) எனும் புதிய கிளை நிறுவனத்தை இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனம் (National Payments Corporation of India (NPCI)) தொடங்கியுள்ளது.
  • புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்வமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக (Chief Executive Officer(CEO) ) ரிதேஷ் சுக்லா (Ritesh Shukla) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த புதிய அமைப்பு, சர்வதேச பணப்பரிமாற்றம் தொடர்பான தொழில்நுட்பங்களை வடிவமைத்து செயல்படுத்தும்.

பினாக்கா ரக ராக்கெட்டுகள்

  • இந்தியாவில் தனியார் நிறுவனத்தினால் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட முதல் பினாக்கா ரக ராக்கெட்டுகள் (Pinaka rockets) ராஜஸ்தானின் பொக்ரானில் இராணுவத்தால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது .
  • ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ திட்டத்தில் முக்கிய மைல் கல்லாக கருதப்படும் இந்த ராக்கெட்டை , நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட, “எகனாமிக் எக்ஸ்புளோசிவ் லிமிடெட் (Economic Explosives Ltd (EEL))” எனும் தனியார் நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் தனியார் துறைக்கு இடையிலான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தின் ( transfer of technology) அடிப்படையில் தயாரித்துள்ளது.

இந்தியா & இஸ்ரேல்

  • இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே கலாச்சார ஒப்பந்தம் 20-8-2020 அன்று கையெழுத்திடப்பட்டது .
  • 2020 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் இந்த ஒத்துழைப்பு திட்டம் இரு நாடுகளுக்கிடையே மக்கள் பரிமாற்றத்தை (people to people exchange) ஊக்குவிக்கும்.

Martyr Qassem Soleimani

  • ’மார்டிர் ஃகாசெம் சொலெமானி’ (Martyr Qassem Soleimani) என்ற பெயரில் 1400 கி.மீ. தொலைவிலுள்ள நிலத்திலிருந்து - நிலத்திலுள்ள இலக்கை தாக்க வல்ல பாலிஸ்டிக் ஏவுகணையை (surface-to-surface ballistic missile) ஈரான் நாடு வெற்றிகரமாக சோதித்துள்ளது.

Share with Friends