Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 31st August 2020


நிதிஆயோக்

  • நிதிஆயோக் (NITI Aayog ) வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (Export Preparedness Index (EPI) 2020-ல் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தில் குஜராத் மாநிலம், இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிர மாநிலமும் உள்ளன.
  • ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 46 சதவீதமாகவும், ஆடைகள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

‘eCommitteesci.gov.in’

  • ‘eCommitteesci.gov.in’ என்ற இணையதள சேவையின் மூலம் நீதிமன்றங்களை பொதுமக்கள் எளிதில் அணுகுவதற்கு ‘இ-கோர்ட்’ முறையை பலப்படுத்தும் நோக்கில், இந்தப் புதிய இணையதளத்தை உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம் ஒருவர் இருந்த இடத்தில் இருந்தே நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்கு நிலவரங்களை மொபைல் போன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
  • இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும். உச்ச நீதிமன்றத்தின் ‘இ-கமிட்டி’ இந்த புதிய இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இதற்கு பார்வையற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் நாக்பூரைச் சேர்ந்த ராகுல் பஜாஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் ஏழுமலை ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

’பிக் பஜார்’

  • ’பிக் பஜார்’ (Big Bazaar), ’ஃபுட் பஜார்’ (Food Bazaar) ஆகிய நிறுவனங்கள் உள்ளடக்கிய ”Future Group” எனும் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Ltd) கையகப்படுத்தியுள்ளது.
  • ”Future Group” நிறுவனக் குழுமம் 2013 ஆம் ஆண்டு கிஷோர் பியானி (Kishore Biyani ) என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.

’காவ்காஷ் 2020’

  • ’காவ்காஷ் 2020’ (Kavkaz 2020) என்ற பெயரில் 15-26 செப்டம்பர் 2020 தினங்களில் ரஷியாவில் நடைபெறும் பன்னாட்டு இராணுவ ஒத்திகையில் பங்கேற்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது.

‘ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் 2020’

  • ‘ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் 2020’ (Online Chess Olympiad 2020) போட்டியில் இந்தியா மற்றும் ரஷியா நாடுகள் இரண்டும் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

“Pitching It Straight”

  • “Pitching It Straight” என்ற பெயரில் புத்தகத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் குர்சரண் சிங் (Gurcharan Singh) மற்றும் விளையாட்டு பத்திரிக்கையாளர் MS உன்னிகிரிஷ்ணன் (MS Unnikrishnan) ஆகியோர் எழுதியுள்ளனர்.

Share with Friends