“உலக தண்ணீர் விருது 2020”
- “உலக தண்ணீர் விருது 2020” (Global Water Award 2020), சிறந்த கழிவுநீர் திட்ட பிரிவில் (‘Wastewater project of the year’) சென்னையிலுள்ள கோயம்பேட்டில், அமைக்கப்பட்டுள்ள ’மூன்றாம் நிலை ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் நீர் சுத்திகரிப்பு’ தொழில்நுட்பத்தின் மூலம் சுத்திகரிக்கும் ஆலைக்க்காக (Tertiary Treatment Reverse Osmosis (TTRO) plant) , அதனை செயல்படுத்தி வரும் ” வா டெக் வபாக் ” (Va Tech Wabag ) எனப்படும் நீர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- சென்னையின் கோயம்பேடுவில் உள்ள ’மூன்றாம் நிலை ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் நீர் சுத்திகரிப்பு ஆலை’ (Tertiary Treatment Reverse Osmosis (TTRO) plant ) இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட நீர் மறுபயன்பாட்டு ஆலைகளில் ஒன்றாகும். இதன் மூலம் நாளொன்றிற்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது.
“குவாஹாட்டி பயணிகள் ரோப்வே திட்டம்”
- இந்தியாவின் மிக நீளமான (1.82 கி.மீ.) ரோப்வே திட்டமான, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள “குவாஹாட்டி பயணிகள் ரோப்வே திட்டம்” (Guwahati Passenger Ropeway Project) 24-8-2020 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
National Council for Transgender Persons
- மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சில் (National Council for Transgender Persons) உருவாக்கம்.
- மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019இன் (2019இன் 40 வது சட்டம்) பிரிவு 16இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மத்திய அரசு 21 ஆகஸ்ட் 2020 தேதியிட்ட அறிவிக்கையின்படி 30 உறுப்பினர்களைக் கொண்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை உருவாக்கியுள்ளது.
- மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சர் இந்தக் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார். அதேபோன்று சமூக நீதி, அதிகாரம் அளித்தல் இணையமைச்சர் துணைத்தலைவராக (அலுவல் சாராது) இருப்பார்.
- பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், மாற்று பாலினச் சமூதாயத்தினரின் 5 பிரதிநிதிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசியப் பெண்கள் ஆணையத்தின் பிரதிநிதிகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் ஆகியோர் கவுன்சிலின் மற்ற உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- அலுவல் சாராத உறுப்பினர்களைத் தவிர தேசியக் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டு காலத்திற்கு பதவியில் இருப்பார்.
- இந்த தேசியக் கவுன்சிலானது கீழ்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும்:
- மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பாக கொள்கைகள், நிகழ்ச்சிகள், சட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல்,
- மாற்றுப் பாலினத்தவருக்கு சமநிலை மற்றும் முழுபங்கேற்பு கிடைப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்,
- மாற்றுப் பாலினத்தவர் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசுத்துறைகள் மற்றும் அரசு, அரசு சாராத நிறுவனங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
- மாற்றுப் பாலினத்தவரின் குறைகளைத் தீர்த்து வைத்தல்
- மத்திய அரசு பரிந்துரைக்கின்ற இத்தகைய ஏனைய செயல்களை நிறைவேற்றுதல்
Type 054A/P - பிரிகேட்ஸ் ரக போர்க் கப்பல்
- பாகிஸ்தான் கடற்படைக்காக சீனா தயாரித்து வரும் நான்கு அதிநவீன டைப் -- 054 (Type 054A/P ) பிரிகேட்ஸ் ரக போர்க் கப்பல்களில் முதல் கப்பல் தயாராகிவிட்டதால், அதன் தொடக்க விழா சீனாவில் 24-8-2020 அன்று நடைபெற்றுள்ளது.
உலக சுகாதார நிறுவனம்
- 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.
சரக்கு-சேவை வரி
- நிறுவனங்களுக்கான சரக்கு-சேவை வரி விலக்கு உச்சவரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதன்மூலம், ரூ.40 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சரக்கு-சேவை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1.5 கோடி வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் 1 சதவீத சரக்கு-சேவை வரியை மட்டும் செலுத்தும் நோக்கில் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லியின் முதலாவது நினைவு தினத்தன்று (ஆகஸ்டு 24) மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
‘காபென்9 05’
- ‘காபென்9 05’ (“Gaofen-9 05”) என்ற பெயரில், சீனாவின் புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோள் ‘மார்ச்2 டி கேரியர்’ ராக்கெட் மூலம் 24-8-2020 அன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
‘The Anywhere School’
- ‘The Anywhere School’ என்ற பெயரில் புதிய ஆன்லைன் கல்விக்கான வசதியை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேம்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேம் ( International Cricket Council’s (ICC) Hall of Fame) அந்தஸ்தில் முன்னாள் வீரர்கள் ஜாக் காலிஸ் (Jacques Kallis) (தென்னாப்பிரிக்கா),லிசா ஸ்டாலேகர் (Lisa Sthalekar) (ஆஸ்திரேலியா) மற்றும் ஜாகீர் அப்பாஸ் (Zaheer Abbas) (பாகிஸ்தான்) ஆகியோர் 23-8-2020 அன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.