Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 29th August 2020


மைக்ரோசாஃப்ட்டின் சிறந்த கல்வியாளர்

  • சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட்டின் சிறந்த கல்வியாளராக விருதுநகர் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியர் கருணைதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அதேபோல நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் சிறந்த பள்ளியாகத் ( Microsoft Showcase School) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'பிரதீக்‌ஷா'

  • 'பிரதீக்‌ஷா' (‘Pratheeksha’) என்ற பெயரில் கேரள மாநிலட்தின் முதல் கடல் ஆம்புலன்ஸ் 26-8-2020 அன்று பொது மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இது கடலில் மீட்பு நடவடிக்கைகளுக்காக கொச்சியில் உள்ள மீன்வளத் துறையினால், கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (Cochin Shipyard Ltd (CSL))மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

“சுனாட்டி” (“CHUNAUTI”)

  • “சுனாட்டி” (“CHUNAUTI” - Challenge Hunt Under NGIS for Advanced Uninhibited Technology Intervention) என்ற பெயரில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் முனைவுப் போட்டியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்துள்ளார்.
  • தொற்றுநோய்களின் போது எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளையும் தீர்வுகளையும் கண்டுபிடிப்பதே இந்த போட்டியின் நோக்கமாகும்.

International Women Trade Centre

  • இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தை (International Women Trade Centre ) கேரளாவின் கொச்சி மாவட்டத்திலுள்ள அங்கமாலி (Angamaly ) எனும் நகரில் உருவாக்க கேரள மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
  • இதன் முக்கிய நோக்கம், பெண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவது மற்றும் பாலின சமத்துவத்தைப் பாதுகாப்பதுமாகும்.

Energy Self-Reliant

  • 28 ஆகஸ்டு 2030 தேதிக்குள் இந்திய ரயில்வேயை எரிசக்தி சுயசார்பு (energy self-reliant )உடையதாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்கான இந்திய ரயில்வே 1,23,236 கிமீ தொலைவிலான வழிதடங்களுடன், 13,452 பயணிகள் ரயில்கள் மற்றும் 9,141 சரக்கு ரயில்களுடன் இயங்கி வருகிறது.
  • தற்போது, ​​இந்திய ரயில்வேக்கு ஆண்டுக்கு சுமார் 21 பில்லியன் யூனிட் ஆற்றல் தேவைப்படுகிறது. ஆற்றலின் முக்கிய ஆதாரம் மின்சாரம் மற்றும் டீசல் ஆகும். 2030 க்குள் 20 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய ஆலைகளை நிறுவுவதற்கான ஒரு மெகா திட்டத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம்

  • ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டு, 28-8-2020 அன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது .
  • இதுவரை 40.35 மக்கள் ஜன் தன் திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • கடந்த 2014-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அனைவருக்கும் வங்கிக் கணக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஜன் தன் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
  • அதன்படி 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘ஏரோ இந்தியா’

  • ‘ ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி , பெங்களூருவில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-7 தேதிகளில் நடைபெறவுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Share with Friends