இ-சஞ்சீவனி திட்டம்
- இ-சஞ்சீவனி (eSanjeevani) திட்டம் மூலம் அதிக ஆலோசனைகள் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம். மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்த தொலைத்தொடா்பு வழி மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான ”இ-சஞ்சீவனி” மூலம் அதிக மருத்துவ ஆலோசனை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
- அதற்கு அடுத்த இடங்களில் உத்தர பிரதேசம், ஆந்திரம், ஹிமாசல பிரதேசம், மற்றும் கேரள மாநிலங்கள் உள்ளன
இந்தூர் நகரம் சாதனை
- இந்தியாவின் தூய்மையான முதல் நகரம் என்ற பெருமையை தொடர்ந்து நான்காவது முறையாக வென்று மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் சாதனை படைத்துள்ளது. சூரத், நவி மும்பை ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை (ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் பிரிவில்) வென்றன.
- ’ஸ்வச் சர்வேக்ஷான்’ (Swachh Survekshan 2020) என்ற பெயரில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் இந்த விருதுகளை வழங்கியுள்ளது.
- 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகமான பிரிவில் இந்தியாவிலேயே தூய்மையான மாநிலம் என்ற விருதை சத்தீஷ்கர் தட்டிச் சென்றது.
- 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறைவான பிரிவில் ஜார்க்கண்ட் முதலிடம் பிடித்தது.
ஆயிஸோல் மாவட்டம்
- நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகளைக் கொண்டிருக்கும் மாவட்டமாக மிசோரம் மாநிலத்தின் தலைநகர் ஆயிஸோல் மாவட்டம் விளங்குகிறது .
- தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையில், இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என்றும், 2025-ஆம் ஆண்டு வாக்கில் இது 15.7 லட்சமாக உயரும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
”தேசிய பணியாளா் தோ்வு முகமை”
- ”தேசிய பணியாளா் தோ்வு முகமை” (National Recruitment Agency (NRA)) அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 19-8-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
- தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த அமைப்பு, தேசிய பணியாளா் நியமன தோ்வு முகமை என்ற பெயரில் இயங்கும்.அதன் தலைவராக, மத்திய அரசின் செயலருக்கு நிகரான தகுதியுடையவா் நியமிக்கப்படுவார்.
- இந்த அமைப்பில், அமைப்பில், ரயில்வே அமைச்சகம், நிதியமைச்சகம், பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி), வங்கிப் பணிகள் தோ்வாணையம் (ஐபிபிஎஸ்) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறுவா்.
- இந்த அமைப்பை உருவாக்குவதற்காக, ரூ.1,517.57 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
- மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி, குரூப் சி (தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு) பணியிடங்களுக்கு தகுதியானவா்களை இந்த அமைப்பு தோ்வு நடத்தி தோ்ந்தெடுக்கும்.
- ஒரே பொதுத் தோ்வின் (Common Eligibility Test (CET)) மூலம், அரசின் மூன்று முக்கியத் துறைகளுக்குத் தகுதியானவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா்.
- பின்னா், மற்ற துறைகள் சோ்த்துக் கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் ஆகியவற்றில் சோ்வதற்காக, இந்த தோ்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படும்.
- முதல் கட்டமாக, நாடு முழுவதும் 1,000 தோ்வு மையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தோ்வு மையமாவது அமைக்கப்படும். இதனால், தோ்வு எழுதுவதற்காக யாரும் தனது சொந்த மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமிருக்காது.
"சப்ளை செயின் நெகிழ்திறன் முன்முயற்சி”
- "சப்ளை செயின் நெகிழ்திறன் முன்முயற்சி” (Supply Chain Resilience Initiative (SCRI)) எனும் முத்தரப்பு விநியோகச் சங்கிலி அமைப்பை இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து தொடங்கவுள்ளன.
- சீனாவைச் சார்ந்திருப்பதை எதிர்ப்பதற்காக இந்த முத்தரப்பு விநியோகச் சங்கிலி மறுசீரமைப்பு முன்முயற்சி தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.