Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 28th August 2020


‘ஹைப்பர் இம்முனெ குளோபுலின்’

  • ‘ஹைப்பர் இம்முனெ குளோபுலின்’ (Hyperimmune Globulin) : கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த இன்டாஸ் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் அதிக நோயெதிர்ப்பு திறனை அளிக்கும் குளோபுலினை (Hyperimmune Globulin) தயாரித்துள்ளது.

‘ரஸ்ஸோசாப்ட்’

  • உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான ஹைபிரிட் குவாண்டம் கம்பியூட்டரை ( world’s largest and fastest hybrid quantum computer ) இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்காக ஐ.ஐ.டி முன்னாள் மாணவர்கள் கவுண்சில் (Indian Institute of Technology’s (IIT) Alumni Council) , ரஷியாவின் லோமோனோசோவ் மாஸ்கோ பல்கலைக் கழகம் (Lomonosov Moscow State University (MSU)) மற்றும் ‘ரஸ்ஸோசாப்ட்” (Russoft) எனப்படும் ரஷிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சங்கத்துடன் 26-8-2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

”சர்வதேச புக்கர் பரிசு”

  • ”சர்வதேச புக்கர் பரிசு” ( International Booker Prize) ‘The Discomfort of Evening’ என்ற புத்தகத்திற்காக டச்சு எழுத்தாளர் மரிகே லூகாஸ் ரிஜ்னெவெல்ட் (Marieke Lucas Rijneveld) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கூ.தக. : சர்வதேச புக்கர் பரிசு , ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் ஒரு புத்தகத்திற்கு வழங்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டு டச்சு மொழியில் வெளியான இந்த புட்த்தகத்தை மைக்கேல் கட்சிசன்(Michele Hutchison) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

அதிநவீன கண்காணிப்பு கருவி

  • இஸ்ரேலிடமிருந்து ரூ.7,500 கோடியில் 2 அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வாங்க இந்தியா முடிவு : அண்டை நாடுகளுடனான எல்லையைக் கடக்காமல் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள போா் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைக் கண்டறியும் 2 அதிநவீன ஃபால்கன் கண்காணிப்பு கருவிகளை சுமாா் ரூ.7,500 கோடி செலவில் இஸ்ரேலிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.
  • இஸ்ரேலிடமிருந்து 3 ஃபால்கன் ரக கண்காணிப்பு கருவிகளை இந்திய விமானப்படை ஏற்கெனவே கொள்முதல் செய்திருந்தது. தற்போது கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், மேலும் 2 அவாக்ஸ் ரக கண்காணிப்புக் கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கு இந்திய விமானப்படை முடிவெடுத்துள்ளது.
  • தற்போதைய சூழலில் ஃபால்கன் ரக கண்காணிப்புக் கருவிகளானது ரஷியாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட இல்லுஷின்-76 போக்குவரத்து விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் கருவிகள் மூலமாக எதிரி நாடுகளின் எல்லைப் பகுதிக்குள் நுழையாமல் அவா்களின் போா் விமானங்கள், ஏவுகணைகள், படைகள் குவிக்கப்பட்டுள்ள இடங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய இயலும்.

”உடான்”

  • ”உடான்” (UDAN - Ude Desh ka Aam Naagrik) எனப்படும் வட்டார வான்வழி இணைப்புத் திட்டத்தின் (Regional Connectivity Scheme) நான்காவது கட்டத்தின் மூலம் புதிதாக 78 கூடுதல் வழிகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • அனைத்து மக்களுக்கும் விமான போக்குவரத்து சேவை வழங்கும் நோக்கோடு புதிதாக உள்நாட்டு விமான வழித்தடங்களை உருவாக்குவதற்கான உடான் (UDAN) திட்டம் 27 ஏப்ரல் 2017 ல் தொடங்கப்பட்டது.

பேராசிரியர் V ராமகோபால் ராவ் குழு

  • பேராசிரியர் V ராமகோபால் ராவ் குழு (Prof V Ramagopal Rao Committee) : பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ( (Defence Research and Development Organization) கீழ் செயல்படும் 57 ஆய்வகங்களின் சாசனத்தை மாற்றியமைப்பதற்கான தில்லி ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் V ராமகோபால் ராவ் தலைமையிலான ஐந்து நபர் குழுவை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் அமைத்துள்ளது.

ஆதார்

  • ஆதார் விவரங்களை மாற்ற புதிய கட்டணம் அறிவிப்பு : ஆதார் புதுப்பிப்புக்கான கட்டணங்கள், பயோமெட்ரிக்ஸையும் சேர்த்து புதுப்பிப்பதற்காக ரூ .100 மற்றும் புள்ளிவிவர விவரங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டால் ரூ .50 என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) அறிவித்துள்ளது.
  • ஒரு பயனர் ஆதார் பதிவு மையம் (ஆதார் சேவா கேந்திரா) மூலமாகவோமோ அல்லது வலைத்தளத்தைப் மூலமாகவோ தங்கள் ஆதார் அடையாள அட்டையை புதுப்பித்து கொள்ளலாம்.

தூய்மை பாரதம் திட்டம்

  • தூய்மை பாரதம் திட்டத்தை செயல்படுத்தியதில் அகில இந்திய அளவில் திருச்சி 102-வது இடத்துடன் மாநில அளவில் முதலிடத்தையும், திருநெல்வேலி மாநகராட்சி 159-வது இடத்துடன் மாநில அளவில் 2-வது இடத்தையும் பெற்றுள்ளன.

Archaeological Survey of India

  • திருச்சி மண்டலம் இந்திய தொல்பொருள் சர்வேயின் (Archaeological Survey of India) புதிய வட்டமாக (Circle) உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. திருச்சியைத் தவிர ராய்கஞ்ச், ராஜ்கோட், ஜபல்பூர், ஜான்சி மற்றும் மீரட் ஆகியவையும் புதிய வட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, முன்னதாக மொத்தம் 29 வட்டங்கள் இருந்தது, தற்போது, 36 வட்டங்களாக உயர்ந்துள்ளது.

Share with Friends