Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 26th August 2020


”ChAdOx1 nCoV-19 ”

  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த ”ChAdOx1 nCoV-19 ” (இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ (Covishield) என அழைக்கப்படுகிறது) கொரோனா தடுப்பூசி பரிசோதனை தமிழகத்தில் , சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இடங்களில் 25-8-2020 அன்று தொடங்கியது.

”கோவிட் சுரக்‌ஷா திட்டம்”

  • ”கோவிட் சுரக்‌ஷா திட்டம்” ( Mission Covid Suraksha') இந்தியாவில், கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி உருவாக்குவது மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக ரூ.3,000 கோடி தொகுப்பு நிதியுடன் “கோவிட் சுரக்‌ஷா” என்ற திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
  • உயிரிதொழில்நுட்பத் துறையின் தலைமையிலான இந்தத் திட்டமானது கரோனா தடுப்பு மருந்தை பரிசோதனை செய்யும் நிலையில் இருந்து, அதை நாடெங்கும் விநியோகிப்பதற்காக உற்பத்தி செய்யும் நிலை வரை கவனம் செலுத்தும்.
  • அவசர தேவைக்காக கூடிய விரைவில் குறைந்தபட்சம் 6 விதமான தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றுக்கு உரிய உரிமம் வழங்கி சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

ICICI Bank

  • விவசாயிகளின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு செயற்கைக்கோள் தரவுகளைப் (பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களிலிருந்து படங்கள்) பயன்படுத்தும் முதல் வங்கி எனும் பெருமையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) பெற்றுள்ளது.

ReNew Power & UNEP

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அணுகல் மற்றும் மேம்பட்ட எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஹரியானாவின் குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்ட ”ரினிவ் பவர்” (ReNew Power) நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme (UNEP)) இடையே கூட்டு ஒப்பந்தம் 25-8-2020 அன்று கையெழுத்தானது.
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைமையிடம் கென்யா நாட்டின் நைரோபி ( Nairobi ) நகரில் அமைந்துள்ளது. இவ்வமைப்பின் தற்போதைய செயல் இயக்குநராக ( Executive Director) டென்மார்க்கை சேர்ந்த இங்கர் ஆண்டர்ஸன் ( Inger Andersen) உள்ளார்.

ரிசர்வ் வங்கி

  • 2019-20-ம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

‘World’s Fastest Human Calculator’

  • ”உலகின் மிக வேகமான மனித கணிணி” (‘World’s Fastest Human Calculator’) எனும் பட்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலகாந்த பானு பிரகாஷ் (Neelakantha Bhanu Prakash) வென்றுள்ளார்.
  • இவர், 15-8-2020 ல் மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் (Mind Sports Olympiad (MSO)) நடத்திய போட்டியில் ‘மனக் கணக்குக்கான தங்க பதக்கத்திற்கான உலக கோப்பையை’ (Gold Medal for India in Mental Calculations (MC) World Cup (MCWC) ) வென்றுள்ளார்.

DRDO

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation (DRDO)) தலைவராக மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Department of Defence Research & Development(DoDRD)) செயலாளராக பதவி வகித்து வரும் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டியின் பதவி காலம் மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில், இரண்டாண்டு காலத்திற்கு இவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்ட்ரோசாட்

  • பூமியில் இருந்து சுமார் 9.3பல்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் விண்மீன் மண்டலத்திலிருந்து புற ஊதாக் கதிர்கள் அதிகளவில் உமிழப்படுவதை இந்தியாவின் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான அஸ்ட்ரோசாட் கண்டுபிடித்துள்ளது.
  • மகாராஷ்டிர மாநிலம் பூனேவிலுள்ள ’ பல்கலைக்கழகங்களுக்கிடையேயான வானியல் மற்றும் வானியற்பியல் மையம்’ (Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA)) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தயான்சந்த் விருது 2020

  • இந்திய அரசின் தயான்சந்த் விருது 2020 க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெ.ரஞ்சித்குமார் , தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாற்றுத்திறனாளிகளின் தடகள பயிற்சியாளராக உள்ளார்.

‘Running Toward Mystery: The Adventure of an Unconventional Life’

  • ‘Running Toward Mystery: The Adventure of an Unconventional Life’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - டென்சின் பிரிய தர்ஷினி (Tenzin Priyadarshi ) மற்றும் சாரா கவுஸ்மண்ட் (Zara Houshmand)

Share with Friends