Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 August 2020 15th August 2020


“சாராபாய்” பள்ளம் (“Sarabhai” Crater)

  • நிலவின் “சாராபாய்” பள்ளம் (“Sarabhai” Crater) : சந்திராயான் -2 ன் ஆர்பிட்டர் (Chandrayaan 2 Orbiter) சந்திரனின் “சாராபாய்” பள்ளத்தின் (“Sarabhai” Crater) புகைப்படத்தை எடுத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
  • இஸ்ரோ ஆதாரங்களின்படி, 3 டி படங்களில் கைப்பற்றப்பட்ட சாராபாய் பள்ளம் அதன் உயரமான விளிம்பிலிருந்து எடுக்கப்பட்ட பள்ளம் சுமார் 1.7 கி.மீ ஆழத்தில் இருப்பதையும், பள்ளம் சுவர்களின் சாய்வு 25 முதல் 35 டிகிரி வரை இருப்பதையும் காட்டுகிறது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களின் பிறந்த தின நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவாக (ஆகஸ்டு 12) அவருடைய பெயர் சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பள்ளத்திற்கு சூட்டப்ப்ட்டுள்ளது.
  • இந்த பள்ளத்திற்கு கிழக்கே 250 முதல் 300 கிலோமீட்டர் தொலைவில் தான், அமெரிக்காவின் அப்பல்லோ 17 மற்றும் ரஷியாவின் லூனா 21 பயணங்கள் தரையிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

”டெஸ்”

  • ”டெஸ்” (TESS -Transiting Exoplanets Survey Satellite) எனப்படும் நாசாவின் (NASA) புறக்கோள்கள் ( exoplanets) ஆராய்ச்சி செயற்கைக்கோள் புதிதாக 66 புறக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. ஜூலை 4, 2020 இல் முடிவடைந்த அதன் முதற்கட்ட ஆய்வுப் பணியின் போது வானத்தின் 75 சதவீத விண்மீன்களை ஸ்கேன் செய்தது. இதன் மொத்த ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 2022 இல் முடிவடையும்.

Omega Centauri cluster

  • ஒமேகா சென்டாரி கிளஸ்டரில் (Omega Centauri cluster) ஹீலியம் அதிக அளவு ஹீலியம் கொண்ட ஒளிரும் சில நட்சத்திரங்களை இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின் (Indian Institute of Astrophysics (IIA) ) விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
  • இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Institute of Astrophysics (IIA) இன் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது.

அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்ட

  • அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14-8-2020 அன்று தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவில் முதன் முறையாக கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான இந்த முன்னொடி திட்டத்தின் படி, நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தினால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி, மருந்துகள், 14 முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய மருத்துவ தொகுப்பு வழங்கப்படும்.
  • இவற்றை பயன்படுத்தி அறிகுறி உள்ளவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பொதுச் சேவைக்கான காவல் பதக்கம்

  • 2020 ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தையொட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐபிஎஸ், கூடுதல் காவல்துறை இயக்குநர், தொழில்நுட்பப் பணிகள், சென்னை, முன்னாள் காவல் ஆணையர், மதுரை மாநகரம்
  • கி.சங்கர், ஐபிஎஸ், காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை
  • ச.சரவணன், காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருநெல்வேலி மாநகரம்
  • ச.தீபா கணிகர், ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம்
  • பி.ஜெகன்நாத், தலைமை காவலர் 19917, வேலைவாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்

President’s Police Medal for Distinguished Service

  • இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (President’s Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையின் அலுவலர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • அவர்களின் பெயர் பின்வருமாறு:
  • ஆண்டனி ஜான்சன் ஜெயபால், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல் 2ஆம் அணி, ஆவடி.
  • ரவிசந்திரன், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல்.

Board of the Reserve Bank of India (RBI)

  • இந்திய ரிசர்வ் வங்கியின் வாரியம் (Board of the Reserve Bank of India (RBI)) 2019-2020 ஆம் ஆண்டின் கணக்கீட்டு ஆண்டுக்கு, 57,128 கோடி உபரி நிதியை மத்திய அரசிற்கு வழங்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • கடந்த 2018-2019 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி 76 1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசிற்கு வழங்கியது , இதில்1.23 லட்சம் கோடி ஈவுத்தொகையாகவும், 52,637 கோடி கூடுதல் ஒதுக்கீடாகவும் வழங்கப்பட்டது.

ராஜ்ஜீய ஒப்பந்தம்

  • இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜ்ஜீய ஒப்பந்தம் ஏற்பட்டதாக 13-8-2020 அன்று அறிவிக்கப்பட்டது.இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவு மேற்கொள்ளும் முதல் வளைகுடா நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share with Friends