”நிர்மன்ஸ்ரீ” (’Nirmanshree’)
- ”நிர்மன்ஸ்ரீ” (’Nirmanshree’) என்ற பெயரில் வீட்டுவசதி கட்டுமானத் துறை நோக்கிய பெண்களின் திறனை மேம்படுத்துவதற்காக திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- 1 மில்லியன் யூரோ செலவில் அமல்படுத்தப்படும் இந்த திட்டமானது, மகாராஷ்டிராவின் பீட் மற்றும் ஒஸ்மானாபாத் மாவட்டங்களிலும், ஒடிசாவின் தெங்கனல் மற்றும் ஜஜ்பூர் மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.
- வீட்டுவசதி துறையில் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் திறன்களுக்காக 3,000 பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். இலாப நோக்கற்ற அமைப்பான ஹபிடட் ஃபார் ஹ்யூமனிட்டி இந்தியாவும் (Habitat for Humanity India) இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கைகோர்த்துள்ளது.
‘சலிவா டைரக்ட்’
- ‘சலிவா டைரக்ட்’ என்ற பெயரில், உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.
தொலைபேசி சேவை - இஸ்ரேல் & அமீரகம்
- இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நல்லுறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகஸ்டு 2020 செய்து கொள்ளப்பட்டது.
- இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதிகளை தங்களுடன் இணைக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
ஷவுரியா சக்ரா விருது 2020
- இந்திய அரசின் வீர தீர சாகசத்திற்கான ஷவுரியா சக்ரா விருது 2020, Lt Col. கிரிஷன் சிங் ராவத், மேஜர் அனில் உர்ஸ் மற்றும் ஹவில்தார் அலோக் குமார் துபே ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பூமராங் பூகம்பம்’
- உலகில் முதல் முறையாக ‘பூமராங் பூகம்பம்’ என்ற புதிய நிகழ்வை கடலுக்கடியில் விஞ்ஞானிகள் நிலநடுக்க அளவைமானி தரவு மூலம் கண்டுப்பிடித்தள்ளனர்.
- 2016-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியா பகுதிக்கு அருகே கடலின் அடி தரையில் அதிசய பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இருந்தது.
”அசைன்மெண்ட்ஸ்”
- ”அசைன்மெண்ட்ஸ்” (Assignments) என்ற பெயரில் , ஆன்லைன் வழி கல்விக்கு உதவிடும் புதிய இணையதள வசதியை கூகுள் (google) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
சுரேஷ் ரெய்னா
- இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 15-8-2020 அன்று அறிவித்துள்ளார்.
- முன்னதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதே தினத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.