“தூய்மை வாரம்”
- இந்திய இரயில்வேயின் “தூய்மை வாரம்” (‘Cleanliness Week’) 10 - 15 ஆகஸ்டு 2020 தினங்களில் அனுசரிக்கப்படுகிறது.
Railway museum
- தென் மேற்கு இரயில்வேயின் இரண்டாவது இரயில்வே மியூசியம் (railway museum) கர்நாடகாவின் ஹப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே, கர்நாடகா மாநிலத்தின் மைசூரில் ஒரு இரயில் மியூசியம் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
”ஃபுட் விஷன் பரிசு 2020”
- ”ஃபுட் விஷன் பரிசு 2020” (Food Vision 2050 Prize) பெறும் 10 இலட்சிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக ஹைதராபாத்திலுள்ள ”நாந்தி பவுண்டேசன்” (Naandi Foundation) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தொண்டு நிறுவனம் மகேந்திரா வாகன நிறுவனத்தின் ஆனந்த் மகேந்திராவின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
- அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பவுண்டேசன் (Rockefeller Foundation) மூலம் இந்த பரிசு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசின் மதிப்பு 200,000 டாலர் ஆகும்.
75வது நாகஷாகி தினம் (Nagasaki Day) - ஆகஸ்டு 9
- 75வது நாகஷாகி தினம் (Nagasaki Day) அன்று அமெரிக்கா ஜப்பானின் நாகஷாகி நகரின் மீது “குண்டு மனிதன் (“Fat Man”) என்ற பெயரிலான அணுகுண்டை வீசி 74000 மக்கள் பலியான நிகழ்வின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.)
நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம்
- சென்னையையும், போர்ட்பிளேரையும் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 10-8-2020 அன்று தொடங்கி வைக்கிறார்.
- இந்த நீர்மூழ்கி கேபிள் திட்டத்துக்கு 2018-ம் ஆண்டு, டிசம்பர் 30-ந் தேதி போர்ட்பிளேரில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து 2,300 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,224 கோடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.
- சென்னையையும், அந்தமான் போர்ட்பிளேரையும் கடல்வழியாய் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- இந்த கேபிள், சென்னையையும், போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார்நிக்கோபார், கமோர்ட்டா, கிரேட் நிக்கோபார், லாங் தீவு, ரங்கத் தீவுகளையும் இணைக்கிறது.
- இதன்மூலம், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நாட்டின் பிற பகுதிகளைப்போன்று செல்போன், லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் கிடைக்கும்.
“மெட்டா க்ரிட்”
- “மெட்டா க்ரிட்” ( ‘meta-grid’ or ‘metamaterial grid’ ) எனப்படும் புதிய நானோ துகள்களை ஐ.ஐ.டி. குவஹாத்தி மற்றும் இங்கிலாந்திலுள்ள, லண்டன் இம்பீரியல் கல்லூரி ( Imperial College London) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
- இவை, எல்.இ.டி ( light-emitting diodes (LED) ) விளக்குகளை மென்மேலும் ஒளியூட்டுவதற்கும் , அதிக மின்திறன் மற்றும் ஆயுளைக் கொண்டதாகவும் மாற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும்.
- ஐ.ஐ.டி குவஹாத்தி பேராசிரியர் தெபாப்ரதா சிக்தர் (Debabrata Sikdar) மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் சர் ஜான் பி. பெண்ட்ரி (Sir John B. Pendry) மற்றும் அலெக்சி கொர்னிஷெவ் (Alexei, A. Kornyshev) ஆகியோர் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.