“ஆன்லைன் தேசபக்தி திரைப்படத் திருவிழா”
- இந்தியாவின் முதல் “ஆன்லைன் தேசபக்தி திரைப்படத் திருவிழா” (online patriotic film festival) தேசிய திரைப்பட மேப்பாட்டு நிறுவனத்தின் (National Film Development Corporation) மூலம் 7-21 ஆகஸ்டு 2020 தினங்களில் www.cinemasofindia.com எனும் இணையதளத்தின் மூலம் நடைபெறுகிறது. வெளிநாட்டு உறவுகள்
வட்டி வீதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
- வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ ரேட், 4 சதவீதமாக தொடரும் . ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதம் 3 புள்ளி மூன்று ஐந்தாக தொடரும் என்றும் அதிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Comptroller Auditor General of India (CAG)
- இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (Comptroller Auditor General of India (CAG) ) ஜி.சி.முா்முவை (GC Murmu ) மத்திய அரசு 6-8-2020 அன்று நியமித்துள்ளது. இப்போது சிஏஜி-யாக உள்ள ராஜீவ் மகரிஷியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முர்மி இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் முா்மு குஜராத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவாா்.
- பிரதமா் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு தலைமைச் செயலராக முா்மு பணியாற்றினாா். மத்திய நிதித்துறை செயலராகவும் அவா் இருந்துள்ளாா்.இவர், இதற்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவி வகித்துவந்தார்.
- ’இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் “ ( Securities and Exchange Board of India(SEBI) ) தலைவராகப் பதவி வகித்துவரும் அஜய் தியாகியின் (Ajay Tyagi) பதவி காலம் 01-9-2020 முதல் 28-02-2022 வரையிலான 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹிரோஷிமா தினம்
- ஹிரோஷிமா தினம் ( Hiroshima Day ) - ஆகஸ்டு 6 ( 6-8-1945 அன்று அமெரிக்கா, “லிட்டில் பாய்” (Little Boy) எனும் அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா பட்டணத்தின் மீது வெடிக்க செய்தது. மேலும், இரண்டாவதாக, ‘ஃபேட் மேன்’ (Fat Man) எனும் அணு குண்டு 9-8-1945 அன்று நாகஷாகி நகரத்தின் மீது வெடிக்க வைக்கப்ப்பட்டது. )
தேசிய கைத்தறி தினம்
- தேசிய கைத்தறி தினம் ( National Handloom Day ) - ஆகஸ்டு 7 (7 ஆகஸ்டு 1905 ல் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. )