40334.பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல்I | பட்டியல் II |
---|---|
A) கட்டளை வாக்கியம் | 1. யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர் |
B)தனி வாக்கியம் | 2. பெரியவர்களை வணங்கு |
C) தொடர் வாக்கியம் | 3. பாரதி சக்தியை வணங்கினார் |
D) கலவை வாக்கியம் | 4. அரசன் புலவரைக் கண்டான், வரவேற்றான், பரிசு வழங்கினான். |
2 3 4 l
1 2 3 4
3 4 2 1
4 3 2 I
40336.விருந்து எனும் சொல்லின் இலக்கணம் யாது?
தொழிற்பெயர்
பண்புத்தொகை
பண்பாகுபெயர்
இவற்றில் எதுவும் இல்லை
40337.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
அன்புச் செல்வியால் கட்டுரை எழுதப்பட்டது
அன்புச் செல்வி கட்டுரை எழுதினாள்
அன்புச்செல்வி கட்டுரை எழுதுவித்தாள்
அன்புச்செல்வி கட்டுரை எழுதிலள்
40340.கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு:
ஐந்திணை ஐம்பது - மூவாதியார்
ஐந்திணை எழுபது - கண்ணன் சேந்தனார்
திணைமொழி ஐம்பது -மாறன் பொறையனார்
கைந்நிலை - புல்லங்காடனார்
40341.பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல்I | பட்டியல் II |
---|---|
A)ஏலாதி | 1. மதுரைக் கூடலூர்க்கிழார் |
B) முதுமொழிக் காஞ்சி | 2. கணிமேதாவியார் |
C) சிறுபஞ்ச மூலம் | 3. பெருவாயில் முள்ளியார் |
D)ஆசாரக்கோவை | 4. காரியாசான் |
4 2 3 1
1 3 2 4
2 1 4 3
3 4 1 2
40344.பிரித்தெழுதுக: இன்னரும் பொழில்
இன்னருமை+பொழில்
இனிமை + அருமை+பொழில்
இனிமை + அரும்பொழில்
இனிமை + அரும் + பொழில்
40346.இலக்கணக்குறிப்புக்குப் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
"உம்மைத்தொகை"
"உம்மைத்தொகை"
மலையாறு
உண்மையுயர்வு
வெற்றிலை பாக்கு
நீர்க்குடம்
40349."ஒழுக்கம் விழுப்பம் தரலான்" - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
பண்புப்பெயர்
பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
தொழிற்பெயர்
40352.பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்தாத சொல்லைத் தேர்க
வினைத்தொகை
வினைத்தொகை
பொங்குகடல்
செய்வினை
தேன்குடி
வருபுனல்
40354.சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க
1. ஈச்ச ஓலையுடன் தாழைமடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்
1. ஈச்ச ஓலையுடன் தாழைமடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்
1 மற்றும் 3
1 மற்றும் 2
2 மற்றும் 3
3 மற்றும் 4
40365.இலக்கணக் குறிப்பு தருக. "வெகுளாமை
காலங்காட்டும் தொழிற்பெயர்
விகுதி பெற்ற தொழிற்பெயர்
தொழிற் பெயர்
எதிர்மறைத் தொழிற்பெயர்
40366.அகரவரிசைப் படி எழுதுக
செய்தி, சோளம், சாப்பாடு, சொந்தம்
சாப்பாடு, செய்தி, சொந்தம், சோளம்
சோளம், சொந்தம், சாப்பாடு, செய்தி
சாப்பாடு, சோளம், சொந்தம், செய்தி
40367.சரியான சொற்றொடரை காண்.
அறிவுக்கு துணையாம் நிலைகொண்ட நிகரற்ற
நிகரற்ற அறிவுக்கு நிலைகொண்ட துணையாம்
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்
அறிவுக்கு துணையாம் நிகரற்ற நிலைகொண்ட
40368."வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்"
இப்பாடலடிகளில்
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்"
இப்பாடலடிகளில்
இயைபு, மோனை அமைந்துள்ளது
எதுகையும் மோனையும் அமைந்துள்ளது
இயைபு, எதுகை, மோனை அமைந்துள்ளன
இயைபு மட்டும் அமைந்துள்ளது
40369.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
செங்குட்டுவன் தங்கம் வாங்குவித்தான்
தங்கம் செங்குட்டுவன் வாங்கினான்
செங்குட்டுவன் தங்கம் வாங்கினான்
செங்குட்டுவனால் தங்கம் வாங்கப்பட்டது
40371.முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க:
கல்வி நல்காக் கசடர்க்கு தூக்குமாம்
கசடர்க்கு தூக்குமரம் கல்வி நல்காக்
நல்காக் கசடர்க்கு தூக்குமரம் கல்வி
கல்வி தூக்குமரம் நல்காக் கசடர்க்கு
40372.விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
"பயவாக் களரனையர் கல்லாதவர்"
"பயவாக் களரனையர் கல்லாதவர்"
கல்லாதவர் யார்?
களரனையர் விளக்கம் தருக
பயன்படாதவர் யார்?
கல்லாதவர் எதைப் போன்றவர்?
40373.பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் சரியான பிரித்தறிதலை கண்டறிக
அறைதல் = அறை + த்+தல்
பொறுத்தல்=பொறு+த்+தல்
பணிதல் =பணி + த்+தல்
செய்தல்=செ+த்+தல்
40374.வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்:
கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்கட்டுக
கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்கட்டுக
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
செய்தி வாக்கியம்
உடன்பாட்டு வாக்கியம்
40376.பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை கண்டறிக
ஏந்தி = எந்து+இ
போற்றி= போற்று+இ
எய்தி= எய்து + இ
தோன்றி = தோன்று + இ
40379."அவன் கொண்ட கவலையை விடுமாறு பிரபு அவன் தோழனைத் தேற்றினான்" -- இது எவ்வகை வாக்கியம்?
தனி
தொடர்
அயற்கூற்று
நேர்க்கூற்று
40385.இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
- மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ள மிகச்சரியான விடை எது?
பட்டாங்கில் உள்ள படி
- மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ள மிகச்சரியான விடை எது?
சீர்மோனை மட்டும் அமைந்துள்ளது
அடி எதுகை மட்டும் அமைந்துள்ளது
மோனையோடு இயைபும் அமைந்துள்ளது
மோனை இயைபு எதுகை மூன்றும் வந்துள்ளது
40386."பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்".
-இக்குறளில் அடிமோனை எது?
பீழை தருவதொன் றில்".
-இக்குறளில் அடிமோனை எது?
பெரிதினிது - பேதையார்
பேதையார் - கேண்மை
பேதையார் - பிரிவின்கண்
பெரிதினிது - பிழை
40387.அகர வரிசைப் படுத்துக:
பச்சை, தேங்காய், வட்டம், தேக்கம், மஞ்ஞை
தேங்காய், தேக்கம், பச்சை, வட்டம், மஞ்ஞை
மஞ்ஞை, வட்டம், பச்சை, தேங்காய், தேக்கம்
தேக்கம், தேங்காய், பச்சை, மஞ்ஞை, வட்டம்
40388.பின்வரும் சொற்களை அகர வரிசையில் அமைக்க :
உலக்கை, உறுதி, உடல், உதடு
உதடு, உடல், உலக்கை, உறுதி
உடல், உலக்கை, உறுதி, உதடு
உடல், உதடு, உலக்கை, உறுதி
40389.இலக்கணப் பிழையற்ற வாக்கியம் எது?
அரசர்கள் பலர் வந்தனர்
அரசர் பலர் வந்தார்கள்
பல அரசர்கள் வந்தனர்
அரசர் பலர் வந்தனர்
40390.பிழையற்ற தொடர் எது?
நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக
நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக
நெற்றி வியர்வை சிந்தினோமே முத்து முத்தாக
நெத்தி வியர்வை சிந்தினோமே முத்து முத்தாக
40393.சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) சேய் | 1. வயல் |
B)செய் | 2. உலகம் |
C)ஞாலம் | 3. கொடை |
D)வண்மை | 4. தூரம் |
4 1 2 3
4 2 1 3
2 3 1 4
4 1 3 2
40395.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
அரம்:உதை அறம்: பாதலம்
அரம்: கையறம் அறம்:கருமம்
அரம்: ஒரு கருவி அறம்: தர்மம்
அரம்: நீர்மை அறம்: தர்மம்
40397.கீழ்க்கண்ட ஆங்கில சொல்லுக்கு பொருத்தமில்லா தமிழ்ச் சொல்லை அறிக.
Perplex - திசைப்பூட்டுதல்
Peiril ஆபத்து
Perish - அழி
Perusc -சார்ந்திரு
40398.நன்கணியர்-இத்தொடரைப்பிரித்து எழுதுக:
நன்கு + கணியர்
நன்மை + கனியர்
நன்கு + அணியர்
நன்மை + அணியர்
40406.அகரவரிசைப் படி சொற்களை எழுதுக
ஆசை,ஆந்தை,ஆதவன்,ஆண்டவன்
ஆசை,ஆண்டவன், ஆந்தை, ஆதவன்
ஆணடவன், ஆசை, ஆந்தை, ஆதவன்
ஆதவன்,ஆசை, ஆந்தை,ஆணடவன்
40407.சந்திப்பிழையற்றவாக்கியம் எது?
ஊர்ப்பெயர் காரணத்தை தேடி எப்புத்தகத்தைப் படித்தார்
ஊர்ப்பெயர்க் காரணத்தைத் தேடி எப்புத்தகத்தைப் படித்தார்
ஊர்ப்பெயர் காரணத்தைத் தேடி எப்புத்தகத்தைப் படித்தார்
ஊர்ப்பெயர்க் காரணத்தைத் தேடி எப்புத்தகத்தை படித்தார்
40408.சரியான முறையில் பழமொழியை அமைக்கவும்.
கரையும் கல்லும் கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும் கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரைப்பார் கரைத்தால் கரையும்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
40410.பொருளறிந்து பொருத்துக:
1.இடுகுறிப் பொதுப்பெயர்-மரங்கொத்தி 2.இடுகுறிச் சிறப்புபெயர்-பறவை 3.காரணப்பொதுப்பெயர்-காடு 4.காரணச் சிறப்புபெயர்-பனை
1.இடுகுறிப் பொதுப்பெயர்-காடு 2.இடுகுறிச் சிறப்புபெயர்-பனை 3.காரணப்பொதுப்பெயர்-பறவை 4.காரணச் சிறப்புபெயர்-மரங்கொத்தி
1.இடுகுறிப் பொதுப்பெயர்- 2.இடுகுறிச் சிறப்புபெயர்-காடு 3.காரணப்பொதுப்பெயர்-மரங்கொத்தி 4.காரணச் சிறப்புபெயர்-பறவை
1.இடுகுறிப் பொதுப்பெயர்-காடு 2.இடுகுறிச் சிறப்புபெயர்-மரங்கொத்தி 3.காரணப்பொதுப்பெயர்-பறவை 4.காரணச் சிறப்புபெயர்-பனை
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA