40266.இகழ் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
இகழ்தல்
இகழு
இகழும்
இகழ்வார்
40268.வழூஉச் சொல் அற்ற தொடர் அறிக
பாவக்காய் கசக்கின்றது
பாவற்காய் கசக்கின்றது
பாகற்காய் கசக்கின்றது
பாகக்காய் கசக்கின்றது
40269.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
தோழன், திருமுடி, தாண்டு, தூரிகை
தாண்டு, திருமுடி, தூரிகை, தோழன்
தாண்டு, திருமுடி, தோழன், தூரிகை
தூரிகை, தோழன், தாண்டு, திருமுடி
40270.Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க.
முதல்வர்
கொள்கை
அதிகாரி
நோக்கம்
40272.தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
பிறவினை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
40276.இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அண்மைச் சுட்டு
சேய்மைச் சுட்டு
சுட்டுத்திரிபு
வினா எழுத்து
40278.அசைவிலா – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வினைமுற்று
அடுக்குத் தொடர்
பண்புத் தொகை
40279.நகையும் உவகையும் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
உம்மைத் தொகை
இழிவு சிறப்பும்மை
எண்ணும்மை
வினைத்தொகை
40280.கொழு கொம்பற்ற கோடி போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
ஆதரவு
தாவுதல்
ஆதரவின்மை
அசைதல்
40282.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
நொறுங்கு, பண்ணை, பனி, நரை
நரை, பனி, நொறுங்கு, பண்ணை
நரை, நொறுங்கு, பண்ணை, பனி
பனி, நரை, நொறுங்கு, பண்ணை
40284.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு – மறுப்பு
தந்தம் – எதிர்ப்பு
சேவல் – குறைப்பு
மன்னன் – உறக்கம்
குதிரை – நீக்கம்
40285.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை – களை
ஆண்மான் – அகற்று
ஆடல் – வண்ணம்
பாடல் – ஓசை
வெளிச்சம் – இருள்
40286.மரம் + வேர் = மரவேர் என்பது
இயல்புப் புணர்ச்சி
விகாரப் புணர்ச்சி
உயிரீறு புணர்ச்சி
மெய்யீற்று புணர்ச்சி
40287.முக்கோணக்கூம்பு, வீடு, வட்டப் பலகை - என்பன.
பண்புப்பெயர், இடப்பெயர், பண்புப்பெயர்
காலப் பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர்
பொருட்பெயர், இடப்பெயர், சினைப்பெயர்
பண்புப்பெயர் பொருட்பெயர், பொருட்பெயர்
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க:
b ) 1. கோழி கொக்கரிக்கும் 2. குரங்கு அலுப்பும் 3. மயில் அகவும் 4. கிளி கொஞ்சும்
b ) 1. கோழி கொக்கரிக்கும் 2. குரங்கு அலுப்பும் 3. மயில் அகவும் 4. கிளி கொஞ்சும்
40290.எவ்வகை வாக்கியம் அறிக? கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின் கண் கொண்டு காண்பது என்ன?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
தனி வாக்கியம்
40291.சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
1.சம்பு-நாவல் 2.குவடு-மலை 3.முகை - மொட்டு 4.பகழி-அம்பு b) 1.நாகு - காளை 2.மறுகு - பசு 3.மல்லல் - மாலை 4.தார் - வளம்
1. அம்பி - உடல் 2.புள்-துன்பம் 3.இந்து - சூரியன் 4.கரம் -தாமரை
1.ஆழி - கடல் 2.தோற்றம் - பிறப்பு 3.சீலம் - கொடை 4.கூற்று-சொல்லுதல்
40292.சிறகு, சாக்காடு எவ்வகை பெயர்ச் சொற்கள்
பொருட்பெயர், இடப்பெயர்
குணப்பெயர், காலப்பெயர்
சினைப்பெயர், தொழிற்பெயர்
வினைப்பெயர், பொருட்பெயர்
40295. சாரைப் பாம்பு இத்தொடரின் இலக்கணக் குறிப்பு யாது?
பண்புத் தொகை
உம்மைத் தொகை
உவமைத் தொகை
இருபெயரொட்டுப்பண்புத்தொகை
40296.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): அட்டவணை 2:
அட்டவணை (1): அட்டவணை 2:
(அ)கேசரி | (1) புலி |
(ஆ)வேங்கை | (2) கரடி |
(இ) எண்கு | (3) சிங்கம் |
(ஈ) மேதி | (4)எருமை |
அ3, ஆ1, இ2, ஈ4
அ2, ஆ3, இ4, ஈ1
அ3, ஆ2, இ4, ஈ1
அ1, ஆ3, இ2, ஈ1
40297.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
மாதவி நடனம் கற்றான்
மாதவி நடனம் கல்லான்
நடனம் மாதவியால் கற்பிக்கப்பட்டது.
மாதவி நடனம் கற்பித்தாள்
40298.பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை கண்டறிக.
நோக்கி - நோக்கு+இ
முடுகினன் -முடுகு + இன் + அன்
தந்தனன் -தா + த்(ந்)+த்+த்+அன்+அன்
நின்றான் -நில்(ன்)+ற்+ஆர்
40300.கொண்டு, உடன் என்பவை
நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள்
மூன்றாம் வேற்றுமை சொல்லுருபுகள்
ஐந்தாம் வேற்றுமை சொல்லுருபுகள்
ஆறாம் வேற்றுமை சொல்லுருபுகள்
40301. சந்தி
பகுதிக்கும், விகுதியிக்கும் இடையில் வருவது
பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வருவது
பகுதிக்கும், இடைநிலைக்கும் இடையில் வருவது
பகுதிக்கும், சாரியைக்கும் இடையில் வருவது.
40303.பட்டியல் I-ஐ பட்டியல் IIஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I | பட்டியல்II |
---|---|
A)திருமுருகாற்றுப்படை | 1. முடத்தாமக் கண்ணியார் |
B)பொருநராற்றுப்படை | 2.உருத்திரங்கண்ணனார் |
C)சிறுபாணாற்றுப்படை | 3.நக்கீரர் |
D)பெரும்பாணாற்றுப்படை | 4.நத்தத்தனார் |
3 4 2 1
1 3 4 2
1 4 3 2
3 1 4 2
40307.பின்வருவனவற்றுள் எது தவறான விடை?
காங்சி என்ன விலை? -இடவாகு பெயர்
பாலை வண்டியில் ஏற்று -கருவியாகுபெயர்
உடுப்பது நான்கு முழம் -நீட்டலளவையாகுபெயர்
தலைக்கு ஒரு மிட்டாய் கொடு - சினையாகுபெயர்
40312.பின்வருவனவற்றில் சரியான வரிசையைத் தேர்வுசெய்க
பேதை, மங்கை, மடந்தை பெதும்பை
பேதை, மடந்தை, பெதும்பை, மங்கை
பேதை,பெதும்பை, மங்கை, மடந்தை
பேதை, மங்கை, பெதும்பை, மடந்தை
40313.பின்வரும் தொடர்களில் குறில், நெடில் பிழை இல்லாத தொடரை கண்டுப்பிடி?
ஒன்று வங்கினால் ஒன்று இலவசம்
ஒன்று வங்கினல் ஒன்று இலவசம்
ஒன்று வாங்கினல் ஒன்று இலவசம்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
40317."Dead Line" என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் யாது?
குறித்த காலம்
சாவுக்கோடு
பொய்ச் செய்தி
வேகச் செய்தி
40325.பொருள் அறிந்து பொருத்துக:
சொல் | பொருள் |
---|---|
A) வளவு | 1. புறா |
B)விகிதம் | 2. வீடு |
C)குஞ்சி | 3. கடிதம் |
D)புறவு | 4. தலைமுடி |
3 1 2 4
2 3 1 4
3 2 1 4
2 3 4 1
40327. யாமம் என்னும் பெரும் பொழுதின் நேரம் யாது?
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை
40330.சரியான பிரித்தறிதலை கண்டறிக
ஈராறாண்டு-ஈறு+ஆறு + ஆண்டு
ஈரெட்டாண்டு-இருபது +எட்டு + ஆண்டு
ஐயைந்தாய்-ஐந்து + ஐந்து+ஆய்
மூவைந்தாய்-முப்பது + ஐந்து+ஆய்
40331.அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க
யானை, யாளி, யாழ், யாக்கை
யாளி, யானை, யாக்கை, யாழ்
யாழ், யாக்கை, யானை, யாளி
யாக்கை, யாழ், யாளி, யானை
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA