Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 1st July 2020


தேசிய மருத்துவர்கள் தினம்

  • மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சரும் புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராய் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Lessen the mortality of COVID 19

Future of Higher Education – Nine Mega Trends

  • V பட்டாபி ராம் (CA V Pattabhi Ram) எழுதியுள்ள “Future of Higher Education – Nine Mega Trends” புத்தகத்தை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.

மத்ஸ்யா சம்பதா

  • Fisheries and Aquaculture Newsletter
  • மீன்வளத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளை மீன் விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மத்ஸ்யா சம்பதா என்ற காலாண்டு பத்திரிக்கையை மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இதன் முதல் பதிப்பு ஜூன் 30 அன்று மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவர்

  • ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக இந்திர மணி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும்., நியூயார்க்கிலுள்ள ஐ.நா அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.திருமூர்த்தி (T.S. Tirumurti) கடந்த ஏப்ரல் மாதத்தில் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிளாட்டினா

  • பிளாட்டினா என்ற பிளாஸ்மா தெரபி திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா தெரபி மற்றும் சோதனை திட்டமாகும்.

அட்டர்னி ஜெனரல் - KK வேணுகோபால்

  • இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (Attorney General of India) பதவிவகித்து வரும் KK வேணுகோபால் அவர்களின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
  • மேலும்., இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக (Solicitor General of India) பதவிவகித்து வரும் தூஷர் மேத்தா அவர்களின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Share with Friends