Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 25th July 2020


Maternal Mortality Ratio -MMR

  • இந்தியாவில் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR) 2016-2018 ஆம் ஆண்டுகளில் 113 ஆக குறைந்துள்ளது (இந்த விகிதம் இந்தியாவில், 2014-2016 ஆம் ஆண்டில் 130 ஆகவும், 2015-17-ம் ஆண்டில் 122 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது).
  • இந்திய பதிவாளர் ஜெனரலின் மாதிரி பதிவு முறைமை (Registrar General’s Sample Registration System (SRS)) இந்த தகவலை வழங்கியுள்ளது.
  • 2016-18 ஆண்டுகளில் தமிழகத்தின் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR) 60 ஆக உள்ளது.
  • இந்தியாவிலேயே அதிக இறப்புகளுடன் (215 இறப்புகள்) அஸ்ஸாம் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களிலும் 197 இறப்புகளுடன் இந்த மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன.
  • பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 43 எண்ணிக்கையுடன் கடைசி இடத்தில் கேரளா உள்ளது.
  • 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய எம்.எம்.ஆரை 70 ஆகக் குறைப்பதே ஐ.நா-வின் குறிக்கோள்.

”Ind-SAT”

  • ”Ind-SAT” (Indian Scholastic Assessment Test) என்ற பெயரில், இந்தியாவில் படிக்க விரும்பும் வெளி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாவது நுழைவுத் தேர்வு 22-7-2020 அன்று ஆன்லைன் மூலம் தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) மூலம் நடத்தப்பட்டது.

QR Code

  • டிஜிட்டல் வங்கி முறைமைகளில் பயன்படுத்தப்படும் ‘கியூ.ஆர். குறியீடுகளைப்( QR (Quick Response) Code) பற்றி ஆராய தீபக் B பதக் (Deepak B. Phatak) தலைமையில் ரிசர்வ் வங்கியினால் அமைக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
  • இந்த அறிக்கையில் , ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு கியூ.ஆர் குறியீடுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக இந்திய அரசின் Bharat QR மற்றும் UPI QR ஆகியவற்றை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

பதவி கூடுதல் பொறுப்பு

  • உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படோலுக்கு, மத்திய பிரதேச ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச ஆளுநராக பதவியில் இருந்த லால்ஜி டாண்டன் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த உத்தரவை குடியரசு தலைவா் அலுவலகம் பிறப்பித்துள்ளது.

BRICS (Brazil, Russia, India, China and South Africa)

  • ’பிரிக்ஸ்’ வர்த்தக மற்றும் தொழில் அமைப்பின் (BRICS (Brazil, Russia, India, China and South Africa) Chamber of Commerce and Industry (CCI)) கவுரவ ஆலோசகராக (honorary advisor) இந்தியாவைச் சேர்ந்த ஷகில் சேத் (Sahil Seth) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2020 முதல் 2030 வரை இப்பதவியில் நீடிப்பார்.

இலங்கைக்கு 40 கோடி டாலா் கடனுதவி

  • கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள வேளையில், அந்நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக இந்த ஒப்பந்தத்தில் ரிசா்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளது.
  • பொருளாதாரச் சரிவிலிருந்து மீள்வதற்காக 40 கோடி அமெரிக்க டாலரை இந்திய ரிசா்வ் வங்கியிடமிருந்து கடனாகப் பெறவுள்ளதாக அந்நாட்டு அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது. அதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
  • இதை இலங்கைத் தலைநகா் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • ஆா்பிஐ வழங்கும் 40 கோடி அமெரிக்க டாலா் கடனுதவி வசதியை 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • பிராந்திய ஒருங்கிணைப்புக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (சாா்க்) கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு அமெரிக்க டாலரில் ஆா்பிஐ கடன் அளித்துள்ளது.
  • இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வலுவான நல்லுறவுக்கு மற்றுமோா் உதாரணமாக உள்ளதாகவும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு இந்தியா உதவும் என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்ஜி அணிக்கு பிரெஞ்ச் கோப்பை

  • பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் செயின்ட் எடியன் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் வெற்றி கோல் அடித்து அசத்தினார். பிஎஸ்ஜி அணி 13வது முறயாக பிரெஞ்ச் கோப்பையை முத்தமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொது நிதி விதிகள், 2017 திருத்தப்பட்டது

  • இந்திய அரசு சமீபத்தில் பொது நிதி விதிகள், 2017 ஐ திருத்தியது. நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவின் அண்டை நாடுகளிலிருந்து பொது கொள்முதல் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க விதிகள் திருத்தப்பட்டன. இது தேசிய பாதுகாப்பு அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

Share with Friends