Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 13th July 2020


”சுத்” (“Shudh”)

  • ”சுத்” (“Shudh”) என்ற பெயரில் அறை முழுவதையும் புற ஊதாக் கதிர்களைக் கொண்டு சுத்திகரிக்கும் இயந்திரத்தை ஐ.ஐ.டி.கான்பூர் உருவாக்கியுள்ளது.
  • இந்த இயந்திரத்தின் மூலம் 10*10 சதுர அடி அறையை 15 நிமிடங்களில் சுத்திகரிக்க முடியும்.

5,000 கோடி ரூபாய் முதலீடு - Google நிறுவனம்

  • Google for India virtual என்ற நிகழ்ச்சியில் இன்று பேசிய Google and Alphabet தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, “இன்று, Google for India Digitization Fund என்ற நிதியத்தை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
  • இந்த முயற்சியின் மூலம், அடுத்த 5-7 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அதாவது 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருக்கிறோம்.
  • பங்கு முதலீடுகள், கூட்டாண்மைகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் என பல துறைகளில் முதலீடுகள் செய்யவிருக்கிறோம்.
  • இது இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த எங்கள் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் ”என்று அறிவித்தார்.

உலகின் முதல் கோவிட் - 19 தடுப்பு மருந்து

  • உலகின் முதல் கோவிட் - 19 தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி
  • கொரோ‌னா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யாவின் செசோனோவ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  • இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்துள்ளது.
  • போலந்து நாட்டின் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஆண்ட்ரெஜ் டூடா ( Andrzej Duda ) மறுபடியும் வெற்றி பெற்றுள்ளார்.

“வான் கர்மான் விருது 2020”

  • சர்வதேச விண்வெளிப் பயணவியல் அகதமியின் (International Academy of Astronautics(IAA) ) மிக உயரிய விருதான “வான் கர்மான் விருது 2020” ( Von Karman Award 2020) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்த்தின் ( Indian Space Research Organisation(ISRO)) தலைவர் K சிவன் (Dr. Kailasavadivoo Sivan) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தியோடர் வான் கர்மான் (Theodore Von Karman) என்பவரால் தொடங்கப்பட்ட சர்வதேச விண்வெளிப் பயணவியல் அகதமியின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது.

’தாதா சாகேப் பால்கே திரைப்பட விருதுகள் 2020’

  • 10வது ’தாதா சாகேப் பால்கே திரைப்பட விருதுகள் 2020’ (Dada Saheb Phalke Film Festival Awards) ல் சிறந்த ஆவணப் படத்திற்கான விருது, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த கேசங் டி தோங்டோக் (kezang D THongdok) என்பவர் தயாரித்த ”Chi Lupo” என்ற பெயரிலான தேன் வேட்டை பற்றிய ஆவணப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Counter-Terrorism Week

  • இரண்டாவது தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான வாரம் 2020(Counter-Terrorism Week) - ஜிலை 6-10, 2020 | மையக்கருத்து 2020 - உலகளாவிய தொற்று சூழலில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான போர்த்திறஞ்சார்ந்த மற்றும் நடைமுறை சவால்கள்(Strategic and Practical Challenges of Countering Terrorism in a Global Pandemic Environment).

Share with Friends