Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 11th July 2020


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

  • பொதிகை, கல்வித் தொலைக்காட்சி, பாலிமர், புதிய தலைமுறை, தந்தி என்று 5 அரசு & தனியார் டிவி சேனல்கள் மூலம், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே கற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

‘His Holiness the Fourteenth Dalai Lama: An Illustrated Biography’

  • ‘His Holiness the Fourteenth Dalai Lama: An Illustrated Biography’ என்ற பெயரில் 14 வது தலாய் லாமாவின் வாழ்க்கை வரலாற்றை டென்சிங் கெய்செ டெதோங் (Tenzin Geyche Tethong) என்பவர் எழுதியுள்ளார்.

ஹாக்கி - இந்தியா

  • ஹாக்கி இந்தியா (Hockey India(HI)) அமைப்பின் தலைவராக மணிப்பூரைச் சேர்ந்த ஞானேந்திர நிங்கோம்பாம் (Gyanendro Ningombam) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் 2022 வரையில் இந்த பதவியை வகிப்பார்.

World Population Day

  • உலக மக்கள் தொகை தினம் (World Population Day) - ஜீலை 11 | மையக்கருத்து 2020 - வீட்டில் அமைதி : கோவிட்-19 காலக்கட்டத்தில் , பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்போம். (Peace in the Home: Safeguarding the Health and Rights of Women and Girls- Even During COVID-19)

”பரஸ்பர நிதி”

  • ”பரஸ்பர நிதி” (மியூச்சுவல் பண்ட் / mutual fund) நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான 20 நபர் குழுவை உஷா தோரத் ( Usha Thorat ) தலைமையில் செபி ( Securities and Exchange Board of India (SEBI) ) அமைப்பு அமைத்துள்ளது.

சிங்கப்பூர் - 2020 பொதுத் தேர்தல்

  • சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் லீயின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
  • 1965-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி புரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது .

சோலார் மின் உற்பத்தி பூங்கா

  • சூரிய ஒளி மின்சார நிலையானது, சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது. ரேவாவில் அர்ப்பணிப்பு செய்யப்பட்ட சூரிய மின்சார உற்பத்தி அமைப்பின் மூலம் மத்திய பிரதேசத்தின் தொழிற்சாலைகளுக்கு மட்டும் மின்சாரம் அளிக்கப்படுவதோடு இல்லாமல், டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் மின்சாரம் அளிக்கப்படும்.
  • ரேவாவை போன்று மத்திய பிரதேசத்தின் சாஜாபூர், நீமுச், சத்தார்பூர் ஆகிய இடங்களிலும் சூரிய ஒளி மின்உற்பத்தி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி உற்பத்திப் பூங்கா மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மோடி திறந்துவைக்கவுள்ளார். இந்நத பூங்காவை, காணொளி தொடர்பாடல் மூலம் டெல்லியில் இருந்தபடி அவர் இன்று திறந்துவைக்கவுள்ளார்.
  • மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் மத்திய அரசு பல திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
  • அந்தவகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 175 ஜிகாவொட்ஸ் மின்சாரம் பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இதனடிப்படையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவொட்ஸ் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share with Friends