Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 26th July 2020


போயஸ் தோட்ட இல்லம்

  • தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • வேதா இல்லத்தை நினைவில்லமாக்க, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையான ரூ.68.9 கோடியை சென்னை குடிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இதில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையை செலுத்த ரூ.36.9 கோடியும், ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க 29.3 கோடியும் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

டி.பி.சிங் குழு (D P Singh Committee)

  • வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் தங்கி படிப்பதஆற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் டி.பி.சிங் (D P Singh) தலைமையில் குழுவை மத்திய மனித வள அமைச்சகம் 24-7-2020 அன்று அமைத்துள்ளது.

21 வது கார்கில் போர் வெற்றி தினம்

  • 21 வது கார்கில் போர் வெற்றி தினம் (Kargil Vijay Diwas) - ஜீலை 26 (1999 ஆம் ஆண்டு ஜீலை 26 ஆம் தேதி ஆபரேஷன் விஜய் எனும் நடவடிக்கையின் மூலம் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக)

"ஆஸ்த்ரோஸ் திட்டம்” (ASTHROS Mission)

  • "ஆஸ்த்ரோஸ் திட்டம்” (ASTHROS Mission) என்ற பெயரில் வழிமண்டலத்தின் ஸ்ட்ரேட்டோஸ்பியரிலிருந்து (stratosphere) பூமிக்கு வரும் கண்களுக்கு புலனாகாத ஒளி அலைகளைப் பற்றி ஆராய்வதற்காக, அண்டார்டிக்காவிலிர்ந்து, கால் பந்து அளவிலான பலூன்களைச் செலுத்தி ஆய்வு செய்வதற்கான திட்டத்தை டிசம்பர் 2023 ல் செயல்படுத்தவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாஷா அறிவித்துள்ளது.

4th edition of Khelo India Youth Games

  • 4 வது ‘கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டுகள்’ (4th edition of Khelo India Youth Games) ஹரியானா மாநிலத்தின் பஞ்குலா (Panchkula) எனுமிடத்தில் நடைபெறவுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ ( Kiren Rijiju) 25-7-2020 அன்று அறிவித்துள்ளார்.
  • பொதுவாக கேலோ இந்தியா போட்டிகள் ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடைபெறும். அடுத்த ஆண்டிற்கான போட்டிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு 'ஈஷா'வுக்கு அங்கீகாரம்

  • ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது.
  • உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும்.
  • ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு

  • மதுரை மாவட்டம், வாடிபட்டி அருகே விவசாய நிலத்தில் 9ஆம் நூற்றாண்டைச் சோந்த செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவா், வாடிபட்டி அருகே வெ.பெரியகுளம் மற்றும் சரந்தாங்கி ஆகிய கிராமங்களுக்கு இடையே விவசாய நிலத்தில் ஒரு கருங்கல் பாறையை ஆய்வு செய்தபோது, அந்தப் பாறையின் ஒரு பகுதி செக்கு கல் போல குடையப்பட்டு, அதில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளாா்.
  • தற்போது, வாடிபட்டி தாலுகாவில், 64 செ.மீ. விட்டம், 44 செ.மீ. உள்விட்டம், 33 செ.மீ. மற்றும் 20 செ.மீ. விட்டம் ஆழமுள்ள நடுவில் குழியைக் கொண்ட செக்குப் பாறையைக் கண்டெடுத்துள்ளேன்.
  • அந்தச் செக்கின் விளிம்பில் 2 வரிகளில் தமிழ் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனை ஆய்வு செய்கையில், அது 9 ஆம் நூற்றாண்டைச் சோந்த முற்கால பாண்டியா் காலத்து கல்வெட்டு என்பதை அறியமுடிந்தது.
  • மேலும், மூத்த தொல்லியல் ஆய்வாளா் சாந்தலிங்கத்தின் உதவியுடன், செக்குப் பாறையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் வட்டெழுத்துகள் தான் என்பதையும், அதில் 'காடனுத்த நாடி இடுவித்த செக்கு' எனப் பொறிக்கப்பட்டிருப்பதும் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, காடனுத்த நாடி என்பவா் இந்தப் பாறையில் செக்கை உருவாக்கிக் கொடுத்துள்ளாா் என்பதே அதன் பொருள்.
  • அக்காலத்தில், இந்த பொது செக்கு கல் அனைத்து தரப்பு மக்களும் தானியங்களை அரைக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Share with Friends