'Saksham' மொபைல் ஆப்
- இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் 'Saksham' என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியது. சுகாதார அமைச்சின் நாகேந்திர நாத் சின்ஹா இந்த ஆப்பை வெளியிட்டுள்ளார். இந்த மொபைல் ஆப்பின் மூலம், வீடியோ கான்பரன்சிங் மற்றும் நிதி விழிப்புணர்வு மூலம் சுய உதவிக்குழுக்களை வங்கிகளுடன் இணைக்க முடியும்.
உருளை வடிவ ஈமச்சின்ன கல் கண்டுபிடிப்பு
- பெருங்கற்கால உருளை வடிவ ஈமச்சின்ன கல் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்திலேயே முதன்முறையாக உருளை வடிவ ஈமச்சின்ன கல்லும் கண்டுபிடிக்கப்பட்டது.
- அக்காலத்தில் இறந்தவர்களை புதைத்தபின்பு கல் வட்டங்கள் வைப்பது வழக்கம். மேலும் முக்கியமானவர்களுக்கு மட்டும் புதைத்த இடத்தை அடையாளப்படுத்துவதற்காக ஈமச்சின்ன கல் வைக்கப்பட்டுள்ளது.
- இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமச்சின்ன கற்கள் அனைத்தும் சீரற்ற வடிவத்திலேயே இருந்தன. ஆனால் புரசடைஉடைப்பில் ஒரே ஒரு ஈமச்சின்ன கல் மட்டும் உருளை வடிவில் உள்ளது. இந்த கல் 235 செ.மீ. உயரமும், 100 செ.மீ., விட்டமும் கொண்டது. பூமிக்கு வெளியே 55 செ.மீ. தெரிகிறது.
- இந்தக் கல்லை நினைவுச் சடங்குகள் நடத்த பயன்படுத்தி இருக்கலாம். மேலும் அக்காலத்தில் முக்கியத்துவம் மிகுந்த நபருக்காக இந்த கல்லை வைத்திருக்கலாம். இதுபோன்ற ஒழுங்கு முறையான ஈமச்சின்ன கல்லை இதுவரை தமிழகத்தில் வேறு எங்கும் கண்டுபிடிக்கவில்லை, என்று தெரிவித்தனர்.
ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
- ஆசியாவின் மிக பெரியதும் உலகின் இரண்டாவது பெரியதுமான டேட்டா மையம் துவக்கப்பட்டுள்ளது. மும்பை பன்வெல் பகுதியில் தனியார் நிறுவனமான ஹிராந்தனி குழுமத்தின் சார்பில் இந்த டேட்டா மையம் துவக்கப்பட்டு உள்ளது.
- யோட்டா என்எம் 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த மையம் 210 மெகாவாட் திறன் கொண்டது. இந்த மையத்தை மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
“நேகர் சம்மன் யோஜனா”
- “நேகர் சம்மன் யோஜனா” (‘Nekar Samman Yojane’ / 'Weaver Samman Yojana') என்ற பெயரில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை கர்நாடக மாநில அரசு 6-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளது.
பதக்க மேடை இலக்குத் திட்டம்
- மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது இளையோர் தடகள விளையாட்டு வீரர்களுக்காக வேண்டி பதக்க மேடை இலக்குத் திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது.
- இந்தத் திட்டமானது 4 மற்றும் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு வேண்டி இளையோர் தடகள விளையாட்டு வீரர்களைத் தயார்படுத்த இருக்கின்றது.
ஒபிகோர்டைசெப்ஸ் நியூட்டன்ஸ் பூஞ்சை
- ஆராய்ச்சியாளர்கள் மத்திய இந்தியாவில் ஒபிகோர்டைசெப்ஸ் நியூட்டன்ஸ் என்ற பூஞ்சையைக் கண்டறிந்துள்ளனர்.
- இந்தப் பூஞ்சையானது ஹேலியோமார்ப்பா ஹாலிஸ் என்ற ஒரு குறிப்பிட்ட பூச்சியினத்திலிருந்து கண்டறியப் பட்டுள்ளது.
- ஒபிகோர்டைசெப்ஸ் நியூட்டன்ஸ் ஆனது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் என்று உருவ ஆய்வுகள் கூறுகின்றன.
”செல்ஃப் ஸ்கேன்” (“SelfScan”)
- செல்ஃப் ஸ்கேன்” (“SelfScan”) என்ற பெயரில் சீன செயலியான “கேம் ஸ்கேனருக்கு” மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் செயலியை மேற்கு வங்க மாநில அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா
- இங்கிலாந்து - இந்தியா வர்த்தக கவுண்சிலின் (UK India Business Council(UKIBC)) தலைமையேற்கும் முதலாவது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் எனும் பெருமையை ஜெயந்த் கிருஷ்ணா (Jayant Krishna) பெற்றுள்ளார். இவர் 3-8-2020 முதல் அந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்.