Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 9th July 2020


'மிகப்பெரிய “வண்ணத்துப் பூச்சி”

  • இந்தியாவின் மிகப்பெரிய “வண்ணத்துப் பூச்சி” எனும் பெயரை “கோல்டன் பேர்டுவிங்” (Golden Birdwing (Troides aeacus)) எனும் பெயருடைய இமாலயப் பகுதியிலுள்ள வண்ணத்துப்பூச்சி வகை பெற்றுள்ளது.
  • முன்னதாக (88 ஆண்டுகளாக) இந்தியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி வகையினம் என அறியப்பட்ட ‘சதர்ன் பேர்டுவிங்’ (Southern Birdwing (Troides minos)) வகையினம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

’ஆபரேஷன் நரி வேட்டை’

  • ’ஆபரேஷன் நரி வேட்டை’ என்ற பெயரிலான இரகசிய உளவு நடவடிக்கையின் மூலம் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து அவர்களை கட்டாயமாக நாடு திரும்புவதற்கு வலியுறுத்துவதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
  • வெளிநாடுகளில் வசித்துவரும் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் சீனர்கள், விமர்சகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இதன் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தட்டம்மை நோய்

  • தட்டம்மை நோயை (measles and rubella) முற்றிலுமாக ஒழித்துள்ள முதல் தென் கிழக்கு ஆசிய நாடுகளாக மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகள் உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் தட்டம்மையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இலக்கு 2023 ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி - நிலக்கரி & அணு ஆற்றல்

  • நிலக்கரி மற்றும் அணு ஆற்றல் மூலம் மின்னாற்றல் தயாரிக்கும் ஆலைகளை முழுவதுமாக மூடுவதற்கு முடிவெடுத்துள்ள முதல் வளர்ந்த நாடு எனும் பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது.
  • ஜெர்மனி அரசு வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரி மற்றும் அணு ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதை முற்றிலுமாக ஒழிக்க முடிவெடுத்துள்ளது.

'கொவைட்-19

  • கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காற்றில் மிதந்து மனிதா்களிடையே பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
  • இருமல், தும்மல் ஆகியவற்றால் வெளிப்படும் நீா்த்துளிமங்கள் தரையில் படிந்து, அதனைத் தொடுவதால் மட்டுமே கரோனோ பரவி வருவதாக இதுவரை கூறி வந்த அந்த அமைப்பு, தற்போது முதல் முதலாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'அமேசானியா-1’

  • 'அமேசானியா-1’ (‘Amazonia-1’) என்ற பெயரிலான பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் (Indian Space Research Organisation (ISRO)) PSLV ராக்கெட்டின் மூலம் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஆகஸ்டு 2020 ல் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

'”APSTAR-6D”

  • ”APSTAR-6D” என்ற பெயரிலான வணிக ரீதியான தகவல் தொடர்பு செயற்கைக் கோளை Long March-3B ராக்கெட்டின் மூலம் சீனா 9-7-2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

இங்கிலாந்து & மேற்கிந்தியத் தீவுகள் - டெஸ்ட் தொடர்

  • கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உள்பட விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் 117 நாள் இடைவெளிக்கு பின் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தெற்கு இங்கிலாந்தின் சதாம்ப்டன் (Southampton) நகரிலுள்ள ரோஸ் பவுல் ( Rose Bowl ) எனுமிடத்தில் 8-7-2020 அன்று தொடங்கின.

'பகதூர் சிங் ராஜிநாமா

  • 25 வருடங்களாக இந்தியத் தடகளத் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பகதூர் சிங், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

உச்சி மாநாடு : இந்தியா - ஐரோப்பிய யூனியன்

  • இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு 15 ஜூலை 2020 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இந்த கூடுகையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஐரோப்பிய கவுண்சில் (European Council) தலைவர் சார்லஸ் மைக்கேல் (Charles Michel) மற்றும் ஐரோப்பிய கமிஷனின் (European Commission) தலைவர் உர்சுலா வோன் டெர் லேயேன் (Ursula von der Leyen) ஆகியோர் இணைந்து தலைமையேற்று நடத்தவுள்ளனர்.

Share with Friends