Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 12th July 2020


Foreign Direct Investment (FDI)

  • 2019 - 2020 ஆம் நிதியாண்டில் இங்கிலாந்து நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான நேரடி வெளிநாட்டு முதலீடு (Foreign Direct Investment (FDI)) செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்த பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும் 2,3,4 மற்றும் ஐந்தாம் இடங்களை முறையே ஜெர்மனி , பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகளும் உள்ளன.

‘இ-லோக் அதாலத்’ (E-Lok Adalat)

  • இந்தியாவின் முதல் மாநில அளவிலான ‘இ-லோக் அதாலத்’ (E-Lok Adalat’) சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தினால் 11-07-2020 அன்று நடத்தப்பட்டது. இதனை சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசந்திர மேனன் தொடங்கி வைத்தார்.

புலிகள் கணக்கெடுப்பு

  • கேமிரா மூலம் நடத்தப்படும், உலகின் மிகப் பெரிய வனவிலங்கு கணக்கெடுப்பாக, அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018 கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
  • சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த கணக்குப்படி, உலகளவில் 75% புலிகள் இந்தியாவி்ல்தான் உள்ளன.
  • புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்கும் தீர்மானத்தையும், இந்தியா ஏற்கனவே நிறைவேற்றிவிட்டது.

‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’

  • தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ (‘Paul Harris Fellow’) என்ற கவுரவத்தை வழங்கி அமெரிக்காவின் சிகாகோ நகரின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சிறப்பித்துள்ளது.

முதுகெலும்பில்லாத புதிய புழு

  • சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், ரஷ்ய அறிவியல் அகாடமி, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகம், ஸ்மித்சோனியன் நிறுவனம் ஆகியவை இணைந்து முதுகெலும்பில்லாத ஒரு புதிய கடல் புழு உயிரினத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த புழுவிற்கு டெட்ராஸ்டெம்மா ஃப்ரீயா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிலும் குறிப்பாகச் சென்னை கோவளத்தின் பாறைகள் நிறைந்த இடத்தில் இந்த நெமர்டியன் புழுக்கள் இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாவலர் நெடுஞ்செழியன் சிலை

  • நாவலர் நெடுஞ்செழியனுக்கு முழு திருவுருவ வெண்கலச் சிலை நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படுவதுடன், அவரது பிறந்தாநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும், அன்னார் எழுதிய நூலான "வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்" என்ற நூல் அரசுடைமை ஆக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்திய படை பிரிவுக்கு சுற்றுச்சூழல் விருது

  • மேற்கு ஆசிய நாடான லெபனானில், ஐ.நா.,வின் தற்காலிக படையில், இந்திய படைப்பிரிவினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • இவர்கள், 'பிளாஸ்டிக்' மறுசுழற்சி, குப்பை சேருவதை குறைத்தல் உள்ளிட்டவைகளில், சிறப்பாக செயல்பட்டதற்காக, ஐ.நா.,வின் சுற்றுச் சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது.

ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி

  • கரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ தற்போது மருந்துகள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. இதனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா அணுக்களை மட்டும் பிரித்தெடுத்து அதனை பிற நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சையளிக்கும் முறை சோதனை முறையில் நடைபெற்று வருகிறது.
  • அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 20 பேருக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் 18 போ பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக இருப்பதால், பிளாஸ்மா தானம் அளிக்க, தகுதியானவா்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
  • தகுதியான நபா்களிடம் இருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா மட்டுமே எடுக்கப்படும். ஒரு முறை பிளாஸ்மா தானமளித்தவா்கள், 28 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தானம் அளிக்கலாம்.
  • தற்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் பிளாஸ்மா வங்கியை நிறுவ அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லிக்கு அடுத்தப்படியாக இந்தியாவிலேயே இரண்டாவது பிளாஸ்மா வங்கியாக அது அமையவிருக்கிறது.
  • அதேபோன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூராா் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூா் மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share with Friends