முதல் பிளாஸ்மா வங்கி
- டெல்லியில் இந்தியாவின் முதலாவது பிளாஸ்மா வங்கியை ஐ.எல்.பி.எஸ் மருத்துவமனையில் முதல்வர் கெஜ்ரிவால் ஜூலை 2 அன்று தொடங்கி வைத்தார்.
- கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மாவை சேகரித்து அதை கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்தி சிகிச்சை அளிப்பது பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது.
PASSEX - கடற்பயிற்சி
- இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளும் இணைந்து PASSEX கடற்படை போர்ப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
- இந்தியப் பெருங்கடலில் இந்தியா கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் ராணா மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஆகிய போர்க் கப்பல்கள் ஜப்பான் கடற்படையின் ஜே.எஸ் காஷ்மீர் மற்றும் ஜே.எஸ் ஷிமாயுகி கப்பல்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.
புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ்
- உலகின் முதல் இணைய வழி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை (Online B.Sc. Degree in Programming and Data Science) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
- இதனை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IIT மெட்ராஸ்) தயாரித்து வழங்கியுள்ளது.

குஜராத் கல் பவளமணி
- திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில் குஜராத் கல் பவளமணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- மேலும் சில நாட்களுக்கு முன்னர் 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.