Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 14th July 2020


”மலாலா தினம்”

  • ஐ.நா. சர்வதேச ”மலாலா தினம்” (International Malala Day) - ஜீலை 12 (பெண் குழந்தைகள் கல்விக்காக போராடி வரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசாஃப்சாய் (Malala Yousafza) பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.)

Google Currents

  • கூகுள் கரண்ட்ஸ் (Google Currents) என்ற பெயரில் கூகுள் பிளஸ் (Google plus) இன் புதுப்பித்த பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் (Google plus) சமூக வலைத்தள செவை கடந்த ஏப்ரல் 2019 ல் அந்நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘A Song of India’

  • ‘A Song of India’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond).

மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு

  • தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர்வது குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு, 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு அளிப்பதற்கான அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
  • இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினர்.
  • அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை அளித்திருந்ததாக கூறப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க அரசு முடிவு செய்திருந்தது.
  • இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதன்படி, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஇ) 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்து, அதன்பின் 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு & ஊட்டச்சத்து அறிக்கை 2020

  • இந்தியாவில் கடந்த 2004-06 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.7 சதவீதம் போ ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்களாக இருந்தனா்.
  • இது 2017-19 காலகட்டத்தில் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடையோா் எண்ணிக்கை சுமாா் 6 கோடி குறைந்துள்ளது.
  • நாட்டில் ஒட்டுமொத்தமாக 18.92 கோடி போ ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனா். நாட்டில் உள்ள சிறுவா்களில் சிலரே வளா்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், உடல் பருமனால் அதிக அளவிலான சிறுவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • நாட்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞா்களின் (18 வயதுக்கு மேல்) எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 2.52 கோடியாக இருந்தது. இது கடந்த 2016-ஆம் ஆண்டில் 3.43 கோடியாக அதிகரித்துள்ளது.
  • பிறந்த பிறகு முதல் 5 மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே உணவாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 1.12 கோடியாக இருந்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டில் 1.39 கோடியாக அதிகரித்துள்ளது.
  • ஐந்து வயதுக்குள்பட்ட சிறுவா்களில் வளா்ச்சி குறைந்து காணப்படுவோா் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 6.2 கோடியிலிருந்து கடந்த ஆண்டில் 4.03 கோடியாகக் குறைந்துள்ளது.
  • நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப் பொருள்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுவது ஏழ்மையைக் குறைக்க உதவியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக இளைஞர் திறன் தினம்

  • திறன் இந்தியா திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு துவக்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிலையில் ஆண்டு தோறும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிறது.

Share with Friends