Make in India initiative
- "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India initiative) திட்டத்தின் கீழ், இஸ்ரேல் நாட்டின் அதிநவீன துப்பாக்கி ரகங்களான (Assault Rifles) 'ஆரட்' (Arad) மற்றும் கார்மல்(Carmel) ஆகியவை இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான பி எல் ஆர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (PLR Systems Private Limited) என்ற நிறுவனத்தின் மூலம் மத்திய பிரதேசத்திலுள்ள ஆலையில் தயாரிக்கப்படவுள்ளன.
- பி எல் ஆர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (PLR Systems Private Limited) தான் இந்தியாவில், சிறிய ரக ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு உரிமம் பெற்றுள்ள முதல் தனியார் நிற்வனம் ஆகும்.
4ஜி/5ஜி போன்கள் - கூகுள் & ரிலையன்ஸ்
- கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான 4ஜி/5ஜி போன்களை தயாரிக்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
- 2021 ஆம் ஆண்டில் 5ஜி நெட்வொர்க் சேவையை ஜியோ நிறுவனம் துவங்க உள்ளதாகவும் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 7.7 சதவீத பங்குகளில் கூகுள் நிறுவனம் 33,737 கோடி முதலீடு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Poba Reserve Forest
- அஸ்ஸாம் மாநிலத்தின் தேமாஜி (Dhemaji) மாவட்டத்திலுள்ள ஃபோபா ரிசர்வ் காடுகளை (Poba Reserve Forest) வனவிலங்கு சரணாலயமாக ( wildlife sanctuary) மாற்றுவதற்கு அஸ்ஸாம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
டாப் பணக்காரர்கள் பட்டியல்
- உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் முகேஸ் அம்பானி: புளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தற்போது ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- ஜீலை 2020 ல் உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 6 மற்றும் 7வது இடத்தில் இருந்த கோடீஸ்வரர்களான எலன் மாஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் ஆகிய இருவரையும் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
- இந்த நிலையில் உலகின் முதல் பணக்காரராக அமேசான் நிறுவனம் ஜெப் பெசோஸ் என்பவர் உள்ளார் என்பதும், இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ், மூன்றாமிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், நான்காம் இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க், ஐந்தாம் இடத்தில் ஸ்டீவ் பால்மர் உள்ளனர்.
“COROSURE”
- “COROSURE” என்ற பெயரில் உலகின் மிகக் குறைந்த விலையிலான கோவிட் -19 பரிசோதனைக் கருவியை (COVID-19 kit) ஐ.ஐ.டி டெல்லி உருவாக்கியுள்ளது.
- இதன் பயன்பாட்டை 15-7-2020 அன்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தொடங்கி வைத்தார்.
“அஞ்சி காட் பாலம்”
- “அஞ்சி காட் பாலம்” (“Anji Khad Bridge”) என்ற பெயரில் இந்தியாவின் முதல் கம்பி வடத்தால் தாங்கப்பட்ட இரயில்வே பாலத்தை (India’s first cable-stayed Indian Railways bridge) இந்திய ரயில்வேயின் கொங்கன் ரயில்வே கார்பரேசன் லிமிடெட் உருவாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சீனாப் ஆற்றின் குறுக்கே (Chenab River) அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் காத்ரா (Katra) மற்றும் ரேசி (Reasi) பகுதிகளை இணைக்கிறது.
இந்தியாவில்14 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு
- ஐ.நா. சா்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 2004-06 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.7 சதவீதம் போ் ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்களாக இருந்தனா்.
- இது 2017-19 காலகட்டத்தில் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்கள் எண்ணிக்கை 6 கோடி குறைந்துள்ளது.
- நாட்டில் ஒட்டுமொத்தமாக 18.92 கோடி போ் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனா். நாட்டில் உள்ள சிறுவா்களில் சிலரே வளா்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மக்கள் தொகை - 2027
- மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்து வெளியிட்டுள்ளது.
- உலக மக்கள் தொகையில் 19 சதவீதத்தை சீனா கொண்டுள்ளது. உலகத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும் 2 சதவீதம் மட்டுமே கொண்டிருக்கும் இந்தியா, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18% மக்கள் தொகையை கொண்டிருக்கிறது.
- தற்போதைய இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 139 கோடியாகும். ஆனால், தற்போதிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சியே தொடர்ந்தால் 2027-ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்தில் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
“ஏர் பப்பில்”
- ஜூலை 16, 2020 அன்று, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் சர்வதேச வர்த்தக விமானங்களின் செயல்பாட்டை இந்தியா மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவித்தார்.
- சிறப்பம்சங்கள்:அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுடன் இந்திய அரசு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஜெர்மனியுடனான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. விமான பயண கட்டணத்தை 25% குறைக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
- ஒப்பந்தங்கள்:நாடுகளுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் கீழ், யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஆகியவை அமெரிக்காவிலிருந்து செயல்பட உள்ளன. ஏர் பிரான்ஸ் பிரான்சிலிருந்து செயல்பட உள்ளது. இங்கிலாந்து சார்ந்த எந்த விமான நிறுவனங்களும் இந்தியாவுக்கு இயக்கப்படாது. மாறாக, ஏர் இந்தியா இங்கிலாந்துக்கு பறக்கும். ஜெர்மனியின் லுஃப்தான்சா ஜெர்மனியிலிருந்து செயல்படும்.
- யார் அனுமதிக்கப்படுகிறார்கள்?: கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு குடிமக்கள், இந்தியர்கள் மற்றும் அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக மற்றும் இராஜதந்திர விசாக்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட வகை மக்களை மட்டுமே இந்தியா அனுமதிக்க வேண்டும். செல்லுபடியாகும் சுற்றுலா விசா உள்ளவர்கள் விமானங்கள் திட்டமிடப்படுவதால் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- காற்று குமிழி:COVID-19 காலங்களில் உருவாக்கப்பட்ட சொல் ஏர் பப்பில். இது உலகின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் மக்கள் இணைப்பைக் குறிக்கிறது. குறிப்பாக COVID-19 ஒத்த நிலைகளைக் கொண்ட பகுதிகளுக்கு இடையில். இந்த திட்டம் "வந்தே பாரத் மிஷனின்" புதிய அவதாரமாக அழைக்கப்படுகிறது.
Board of Control for Cricket in India
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India) தற்காலிகத் தலைமைச் செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிசிசிஐ தலைவர் பதவியில் சவுரவ் கங்குலி உள்ளார்.