Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 10th July 2020


‘சேஷ்நாக்’

  • சேஷ்நாக்’ என்ற பெயரில்,இந்திய ரயில்வேத் துறை முதல் முறையாக நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயிலை நாகபுரியில் இருந்து கோா்பாவுக்கு இடையே இயக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
  • தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் நாகபுரி கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச்செல்ல பயன்படும் சரக்குப் பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைந்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த ரயில் உருவாக்கப்பட்டது.
  • நான்கு ஜோடி மின்சார என்ஜின்கள், 4 காா்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலி சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டன.

"கோவாக்சின்"

  • "கோவாக்சின்" எனப்படும் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர் - மேற்கு வங்காளத்தின் துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் சிரஞ்சித் திபார் .
  • ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்துடன் இணைந்து கொரோனாவிற்கு ‘கோவாக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
  • இதற்கான அடிப்படை சோதனைகள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மனிதர்களிடம் இந்தமருந்தை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதஇதற்கான பணி ஒடிசா மற்றும் ஐதராபாத் அரசு மருத்துவமனைகளில் 8-7-2020 அன்று தொடங்கியது.

'"பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின்"

  • "பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின்" (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) மூலம் நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவையில் 8-7-2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி செலவாகும்.

”Yotta NM1 Data Center”

  • ”Yotta NM1 Data Center” என்ற பெயரிலான ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தரவு மையம் (Data Center) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 7-7-2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த தரவு மையமானது மும்பையிலுள்ள பன்வல் தரவு மைய பூங்காவில் (Panvel data centre park) ஹிராநந்தனி குழுமத்தின் (Hiranandani Group ) மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

'National Skill Development Corporation (NSDC)

  • இந்தியாவிலுள்ள இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்உ தேசிய திறன் மேம்பாட்டு கழகம் ( National Skill Development Corporation (NSDC) ) மற்றும் மைக்ரோசாஃட் இந்தியா நிறுவனம் ( Microsoft India Private Limited ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

”Bhubaneswar Land Use Intelligence System (BLUIS)”

  • இந்தியாவின் முதல் மாநிலமாக, அரசுக்கு சொந்தமான நிலங்களை விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களின் உதவியுடன் கண்காணிக்கும் ”Bhubaneswar Land Use Intelligence System (BLUIS)” எனும் முன்னோடி திட்டத்தை ஒடிஷா மாநில அரசு 8-7-2020 அன்று தொடங்கியுள்ளது.

'eSanjeevani OPD

  • கொரோனா ஊரடங்கில் சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல முடியாத சூழலில் மத்திய அரசின் சுகாதார, குடும்பநல துறையின் www.esanjeevaniopd.in இணையதளம், செயலி வழி, ஆன்லைனில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி மருந்து சீட்டும் வழங்குகிறார்கள்.
  • இந்த 'இ-சஞ்சீவனி நேஷனல் டெலிகன்சல்டேஷன் சர்வீஸ்' கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.

"வேளாண் உட்கட்டமைப்பு நிதியம்”

  • "வேளாண் உட்கட்டமைப்பு நிதியம்” (Agriculture Infrastructure Fund) எனப்படும் நாடு தழுவிய திட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவை 8-7-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த திட்டமானது, மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும் சுயசார்பு இந்தியா தொகுப்பின் (AtmaNirbhar Bharat package) ஒரு பகுதியாக நிறைவேற்றப்படவுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், விவசாய கடன் சங்கங்கள் (Primary Agricultural Credit Societies (PACS)), சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்கள் (Marketing Cooperative Societies), விவசாய தயாரிப்பு நிறுவனங்கள் (Farmer Producers Organizations (FPOs)), சுய உதவி குழுக்கள் (Self Help Group (SHG)), விவசாயிகள் (Farmers), பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் (Multipurpose Cooperative Societies), வேளாண் தொழில்முனைவோர்,வேளாண் உட்கட்டமைப்பு வழங்குநர்கள் ( Aggregation Infrastructure Providers), மத்திய / மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் அரசு - தனியார் இணைந்து செயல்படுத்தும் திட்டங்கள் ( Central/State agency or Local Body sponsored Public Private Partnership Project) ஆகியவற்றிற்கு மொத்தம் 1 இலட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.
  • இந்த வேளாண் உள்கட்டமைப்பு நிதிய திட்டத்தின் காலம் 10 ஆண்டுகளுக்கு- 2020-21 நிதியாண்டு முதல் 2029-30 நிதியாண்டு வரையாகும்.
  • இந்த திட்டத்தின் கீழ் ரூ .1 லட்சம் கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும், இதில் நடப்பு 2020-21 நிதியாண்டில் ரூ .10,000 கோடி, அடுத்த மூன்று நிதியாண்டில் ரூ .30,000 கோடி அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும்.
  • திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு மானிய வட்டி விகிதம் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 3 சதவீதமாக இருக்கும். ஆண்டுக்கு 3 சதவீதம். 3 சதவீத வட்டி விகிதம் ரூ .2 கோடி வரை கடனுக்கு பொருந்தும்.

'தேசிய மீன் பண்ணையாளர்கள் தினம் (National Fish Farmers Day) - ஜீலை 10

  • 2019 ஆம் ஆண்டின் ஐ.நா. வின் வேளாண் மற்றும் உணவு அமைப்பின் GLOBEFISH அறிக்கையின் படி, உலகளவில் மீன்வளர்ப்பு சார் தயாரிப்புகளில் இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளது.

Share with Friends