ஹாங்காங் - டிக்டாக் தடை
- இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூளையைத் தின்னும் அமீபா நோய்
- அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ”நெக்லேரியா பவுலேரி” (Naegleria fowleri) என்ற மிக நுண்ணிய அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழையும் இந்த அமீபா மூளையில் தொற்றினை உண்டாக்கினால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பே அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.
‘ஒஃபேக் 16’ (Ofek 16)
- ‘ஒஃபேக் 16’ (Ofek 16) என்ற புதிய உளவு செயற்கைக்கோளை இஸ்ரேல் நாடு ஷாவிட் (Shavit rocket) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
WHO - அதிபர் டிரம்ப்
- உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு 6-7-2020 அன்று அமெரிக்கா அனுப்பிய கடிதத்ததில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.
- ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.
- 7 ஏப்ரல், 1948 ல் தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது.
- இந்தியா உள்பட 194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.
”இந்தியா குளோபல் வீக் 2020”
- ”இந்தியா குளோபல் வீக் 2020” (India Global Week 2020) இணையவழி மாநாடு : இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் ”இந்தியா குளோபல் வீக்” என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு 9-11 ஜூலை 2020 தினங்களில் நடைபெறுகிறது.
- இந்நிகழ்வில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்க உள்ளாா்.பிரிட்டனில் செயல்படும் இந்தியா- இன்க் என்ற அமைப்பு, 'இந்தியா குளோபல் வீக்' எனும் இந்த பொருளாதார மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
- முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு 7-7-2020 அன்று நீக்கியுள்ளது.
- முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க செய்வற்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி மார்ச் 2020 ல் இந்த இரு பொருட்களையும் அந்த பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. 100 நாட்களுக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவித்தது.
- இதனால் பதுக்கலில் அவை சிக்காமல் மக்களுக்கு சென்ற சேர வழிவகுத்தது.தற்போது இப்பொருட்களின் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் அவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
முக கவசம் & சேனிட்டைசர் - அத்தியாவசிய பொருட்கலில் இருந்து நீக்கம்
- முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு 7-7-2020 அன்று நீக்கியுள்ளது.
- முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க செய்வற்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி மார்ச் 2020 ல் இந்த இரு பொருட்களையும் அந்த பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. 100 நாட்களுக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவித்தது.
- இதனால் பதுக்கலில் அவை சிக்காமல் மக்களுக்கு சென்ற சேர வழிவகுத்தது.தற்போது இப்பொருட்களின் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் அவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
‘ஸ்டார்ட் அப் வில்லேஜ்’
- மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான வல்லுநர் குழுவின் (Central Government’s Expert Committee on Science and Technology Policy) உறுப்பினராக ‘ஸ்டார்ட் அப் வில்லேஜ்’ (Startup Village) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் ‘Re-think Foundation’ எனும் நிறுவனத்தின் நிறுவனர் சிஜோ கருவில்லா ஜார்ஜ் (Sijo Kuruvilla Georg) நியமிக்கப்பட்டுள்ளார்.