Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 July 2020 5th July 2020


கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவர்

  • தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக இருந்த மாசிலாமணியின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைவராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவர்

  • தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவராக இருந்த டிஜிபி சுனில்குமாா் கடந்த செவ்வாய்க்கிழமை மாநில மனித உரிமை ஆணையத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து புதிய தலைவராக டிஜிபி என்.தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுக்ரயான் – 1 (Shukrayaan-1)

  • ”வெள்ளி கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்கவும், சூரியனிடமிருந்து வரக்கூடிய சூரியக் கதிர்வீச்சு மற்றும் சூரியக் காற்று போன்றவற்றையும் கவனிக்கவும் ”சுக்ரயான் – 1 “ எனும் திட்டத்த்தை 2023 – 2025ம் ஆண்டுவாக்கில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

பசுஞ் சாணம் கிலோ - 1.50 ரூபாய்

  • சத்தீஸ்கரில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பசுஞ் சாணத்தை, விவசாயிகளிடமிருந்து, 1.50 ரூபாய்க்கு வாங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்த திட்டம், வரும், 20ல் துவக்கப்பட உள்ளது. சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மண்புழு உரம்இங்கு, கால்நடை வளர்ப்பை லாபகரமான தொழிலாக்கும் வகையிலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், ‘கோதான் நியாய் யோஜனா’ என்ற திட்டம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து பசுஞ் சாணத்தை விலைக்கு வாங்கி, அவற்றின் வாயிலாக மண்புழு உரம் தயாரித்து, அவற்றை கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகளிடமிருந்து, பசுஞ் சாணத்தை என்ன விலைக்கு வாங்குவது என்பது குறித்து, சத்தீஸ்கர் மாநில விவசாய துறை அமைச்சர் ரவீந்திர சவுபே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தன் முடிவை நேற்று அறிவித்தது. இதன்படி, 1 கிலோ பசுஞ்சாணம், 1.50 ரூபாய்க்கு வாங்கப்படும். கால்நடை வளர்ப்போர், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் இந்த சாணத்துக்கு, மாதத்துக்கு இரு முறை பணம் வழங்கப்படும்.

காமன்வெல்த் சிறு கதை பரிசு

  • ராஞ்சியைச் சேர்ந்த 29 வயதான இந்திய எழுத்தாளர் கிருத்திகா பாண்டே, “The Great Indian Tee and Snakes” எனும் சிறுகதைக்காக 2020-ஆம் ஆண்டின் காமன்வெல்த் சிறுகதை பரிசினை வென்றுள்ளார்.
  • கடந்த மாதம் ஆசிய பிராந்திய அளவில் வெற்றிபெற்ற கிருத்திகா பாண்டே தற்போது ஒட்டுமொத்த அளவிற்கான விருதை வென்றுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமர்

  • பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய பிரதமராக ஜீன் கேஸ்டெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் கவுன்சிலின் தற்காலிகத் தலைவர்

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியிலிருந்து இந்தியாவை சேர்ந்த சஷாங் மனோகர் ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைவர்தேர்ந்தெடுக்கப்படும் வரை துணைத் தலைவரான சிங்கப்பூரை சேர்ந்த இம்ரான் கவாஜா பொறுப்புத் தலைவராகச் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share with Friends